முதல் முறை பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த "அதிசயம்”.. அவமானத்தில் கோபி- ராதிகா.. பரபரப்பின் உச்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா, கோபி கேட்ட பணத்தை கொடுத்து ராதிகா மற்றும் கோபியை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தி இருக்கிறார்.

இத்தனை நாட்களாக தான் பட்ட அவமானங்களுக்கு எல்லாம் முதல்முறையாக பாக்கியாவை சுயமாக பேசி கோபி ராதிகாவை மிரள வைத்திருக்கிறார்.

அதுபோல இதுவரைக்கும் எந்த இடத்திலும் பாக்யா பேச வேண்டிய இடத்தில் சரியாக பேசாமல்," அத்தை நான் என்ன பண்ணட்டும்" என்கிற கேள்வியை மட்டும் கேட்பார். ஆனால் இன்றைய எபிசோட்டில் பாக்கியா அனல் பறக்கும் வசனங்களை பேசி மாஸ் காட்டி இருக்கிறார்.

 Baakiyalakshmi Serial 2023 July 11th Episode full update Gopi- Radhika in shame

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூலை 11ஆம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் ராதிகாவும் கோபியும் சேர்ந்து கொண்டு பாக்கியாவை கேவலப்படுத்தி பேசிவிட்டு ஆபீஸுக்கு கிளம்புகின்றனர். அப்போது பாக்கியா இருவரையும் ஒரு நிமிஷம் நில்லுங்க உங்களால ஒரு பத்து நிமிஷம் ஒதுக்க முடியுமா என்று கேட்க பத்து நிமிஷத்துல என்ன நடந்திட போகுது என்று கோபி அலட்சியப்படுத்துகிறார்.

ஆனால் பாக்கியா என்ன வேணாலும் நடக்கலாம் சார் என்று சொல்ல, அதற்கு கோபி எல்லாரையும் கூப்பிட்டு வச்சு என்கிட்ட கெஞ்ச போறியா? இல்ல டைம் கேட்க போறியா? என்று ஆணவம் குறையாமல் பேசிக் கொண்டிருக்க, பாக்கியா கொஞ்சம் இருங்க என்று சொல்லி வீட்டிற்குள் போக வெளியே போகிற வழி இங்கே இருக்கிறது என்று கோபி நக்கல் செய்ய பாக்யா தான் வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு வர கோபியும் ராதிகாவும் அதிர்ச்சி அடைகின்றனர்.

நீங்க கேட்ட 18 லட்சம் ரூபாய் பணம் என்று பாக்கியா பணத்தை எடுத்துக்காட்ட, பொம்மை காசை வைத்து என்னை ஏமாத்த பார்க்கிறியா? என்று கேள்வி கேட்க, ராமமூர்த்திக்கு பேங்கல தான நீ வேலை பாக்குற, அதை வாங்கி நல்ல நோட்டா இல்லையான்னு செக் பண்ணி பாரு என்று சொல்ல, பாக்கியா பணத்தை கொடுத்து எப்போ இனி வீட்டை விட்டு வெளியே போக போறீங்க என்று கேள்வி கேட்கிறார்.

அதோடு இதுவரைக்கும் கோபியும் ராதிகாவும் செய்த அனைத்து செயல்களையும் சொல்லி காண்பித்து உங்களால நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதையும் தெளிவாக பேசுகிறார். அதோடு இனி இது என் வீடு, இங்க இருக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது வெளியே போங்க என்று சொல்ல, கோபி அப்படியெல்லாம் போக முடியாது என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

 Baakiyalakshmi Serial 2023 July 11th Episode full update Gopi- Radhika in shame

அதற்கு பாக்கியா ஏன் போக முடியாது என்று கேட்க என் அப்பா அம்மா குழந்தைகளை எல்லாம் விட்டுட்டு என்னால போக முடியாது என்று சொல்ல, ராதிகா உங்க அம்மாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன போது நீங்க ஏன் அமைதியா இருந்தீங்க? போலீசை கூட்டிட்டு வந்து இங்க பிரச்சனை பண்ணும் போது ஒன்னும் பேசாம தானே இருந்தீங்க? அப்ப எல்லாம் உங்க பாசம் எங்க போச்சு, உங்க பொண்ணு பிளஸ் 2 படிக்கிறா என்று தெரிஞ்சும், அவர் ரூம்ல நீங்க தங்கிட்டு அவளை ரூம் இல்லாமல் அலைய விட்டீங்களே? அப்போ எங்க போச்சு உங்க பாசம்? உங்க டிராமாவை எல்லாம் இதோட நிறுத்திக்கோங்க என்று பதிலடி கொடுக்கிறார்.

மேலும் ராதிகாவிடம் எனக்கும் இந்த ஆளுக்கும் இனி எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் இவங்க எல்லாம் என்னுடைய குடும்பம், அத்தை, மாமா என் பிள்ளைங்க நான் இங்கே தான் இருப்பேன். நீங்க இங்க இருக்க கூடாது. எப்ப கிளம்புறீங்க? என்று கேள்வி கேட்க, கோபி அதெல்லாம் போக முடியாது என்று சொல்லிக் கொண்டு இருக்க, கோபமான ராமமூர்த்தி பணத்தை கேட்டீங்க என் மருமகள் கொடுத்திட்டா, எடுத்துட்டு இப்போ வெளியே போடா, நீ இல்லன்னா தான் நாங்க சந்தோஷமா இருப்போம். பணத்தையும் வாங்கிட்டு இதே வீட்டில் டாரா போடலான்னு நினைக்கிறியா? உனக்கு வெக்கமா இல்லையா? என்று அவமானப்படுத்துகிறார். கோபி பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்த படி நிற்கிறார். இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+