பாக்கியலட்சுமி: குடித்துவிட்டு பிரச்சனை செய்த கோபி.. வீட்டை விட்டு கிளம்பிய ஈஸ்வரி.. இனி நடப்பது?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி குடித்துவிட்டு பாக்கியாவிடமிருந்து தன்னுடைய குடும்பத்தை பிரித்துக் காட்டுவேன் என்று நண்பரிடம் சபதம் போடுகிறார்.
அதே நேரத்தில் வீட்டிற்கு வந்த கோபி ராதிகாவின் அம்மாவை பார்த்து பயந்து போய் கத்தி பிரச்சனை செய்கிறார்.

இந்த நிலையில் திடீரென்று பாக்கியலட்சுமி வீட்டில் இருந்து ஈஸ்வரி பெட்டி படுக்கையோடு கிளம்பி போகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூலை 14ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் பாக்யா வீட்டை விட்டு துரத்தியதால் கோபி பாரிலிருந்து குடித்துக் கொண்டு தன்னுடைய நண்பரிடம் பாக்யாவை தன்னுடைய குடும்பத்தில் இருந்து பிரிக்காமல் விடமாட்டேன் என்று சவால் விடுகிறார்.

பிறகு தன்னுடைய காரை எடுத்து வீட்டிற்கு வரும் போது பழக்க தோஷத்தில் பாக்யாவின் வீட்டு முன்பு காரை நிறுத்திவிட்டு நான் வரதுக்கு முன்னாடி கதவை பூட்டிட்டாங்க என்று வாசலில் நின்று புலம்பியபடி இருக்கிறார். பிறகு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பாக்கியலட்சுமி என்ற போரை பார்த்ததும் கோபமாகி திட்டுகிறார். பிறகு கழட்டி வீச பார்க்கும்போது வேணாம் இதை பாத்தா கூட்டமா எல்லாரும் சேர்ந்து அடிப்பாங்க என்று அங்கிருந்து கிளம்புகிறார்.

அப்படியே நல்லவேளை நாம இங்கே நிக்கிறதை ராதிகா பாக்கல என்று உளறியப்படியே ராதிகா வீட்டு கதவை தட்ட, கோபியின் மாமியார் மாமியார் வீட்டு கதவை திறக்க கோபிக்கு போதையில் அடையாளம் தெரியாமல் மேடம் நான் தெரியாம இங்க வந்துட்டேன். நான் எங்க வீட்டுக்கு போயிடுதேன் என்று வீட்டை விட்டு வெளியே கிளம்ப, அப்போது ராதிகா வர ராதிகா எதுக்கு இங்க வந்தா என்று யோசிக்கிறார்.

பிறகு ராதிகாவை பார்த்து பயந்த கோபியை ராதிகா திட்டுகிறார். எதற்காக குடிச்சிட்டு வந்தீங்க என்று கேட்க, பாக்கியா என்னுடைய வீட்டில் இருந்து என்னை துரத்திட்டா அதனாலதான் குடிச்சேன் என்று சமாளிக்கிறார். பிறகு விடிந்ததும் ஈஸ்வரி நான் காசிக்கு கிளம்ப போகிறேன் என்று அனைவரையும் கவனமாக இருக்கும்படி சொல்லி பீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது தன்னுடைய கணவரை விட்டுட்டு போகிறது தான் எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு என்று ஈஸ்வரி சொல்ல, இவர்களின் பாசத்தை பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுவதோடு ஈஸ்வரியை கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர். பிறகு வாசலுக்கு சென்று அனுப்பி வைக்கின்றனர். அதைத்தொடர்ந்து விடிந்ததும் கோபி எழுந்திருக்க ராதிகா வந்து காபி தரவா என்று நக்கலாக கேட்க கோபியும் காபி கேட்டு அவமானப்படுகிறார்.
பிறகு ராதிகா கண்டபடி கோபியை திட்டி கொண்டு இருக்க, ராதிகாவின் அம்மா ராதிகா வெளியே கூப்பிட்டு சமாதானப்படுத்துகிறார். குடிக்கிறது தப்புதான் ஆனால் அதை பொறுமையா சொல்லலாம் தானே என்று சொல்லிக் கொண்டிருக்க, ராதிகா கோபத்தோடு அங்கிருந்து கிளம்புகிறார். அந்த இடத்தில் ராதிகாவின் அம்மா யோசித்தப்படியே நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications