இனியா காலேஜில் கோபிக்கு கிடைத்த அவமானம்.. பாக்கியா கொடுத்த பதிலடி.. “திடீர்” திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவை காலேஜில் சேர்ப்பதற்காக பாக்யா கூட்டிக்கொண்டு போய் இருக்கிறார். அதே காலேஜுக்கு கோபியும் வந்து சேர்கிறார்.
இனியாவுக்கு காலேஜ் பீஸ் கட்டும் இடத்திலும் கோபி மற்றும் பாக்யாவிற்கு இடையே பிரச்சனை வெடிக்கிறது.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 27 ஆம் தேதி எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா இனியாவை காலேஜில் சேர்த்து விடுவதற்காக ஆட்டோவில் கூட்டிக்கொண்டு வருகிறார். அங்கே பாக்யா காலேஜை பார்த்ததும் சந்தோஷம் அடைகிறார். வலது கால் எடுத்து வைத்து வரும்படி சொல்ல, அதை இனியாவும் செய்கிறார். பிறகு அட்மிஷன் பார்ம் வாங்கி பாக்யா இனியாவின் டீடைல்ஸ் எழுதுகிறார்.

அப்போது கோபி தன்னுடைய நண்பனை சந்திக்கிறார். சந்தித்து எனக்கு ஒரு அவசரம் அதனால் தான் உன்கிட்ட பணம் கேட்கிறேன் என்று சொல்ல, அதற்கு நண்பன் இதுல என்னடா இருக்கு என்ன வேணாலும் சொல்லு என்று சொல்ல, எனக்கு இனியா காலேஜுக்கு பீஸ் கட்டுவதற்காக ஐம்பதாயிரம் பணம் வேண்டும் என்று சொல்ல, இதை போன்ல சொல்லி இருந்தாலே தந்து இருப்பேனே என்று சொல்கிறார்.
தொடர்ந்து அவர் நான் பணம் தருகிறேன் ஆனால் பாக்கியா தந்த 18 லட்சத்தை என்னடா பண்ணுன? என்று கேட்க, அதை கேட்டு அதிர்ச்சியான கோபி முதலில் தயங்கி பிறகு ராதிகாவுடைய அக்கவுண்டில் போட்டு விட்டதாக சொல்ல, அதற்கு அவருடைய நண்பர் எதுக்குடா இப்படி பண்ணுன? அவங்க கேட்டாங்களா? என்று கேட்க, இல்லடா அடிக்கடி சண்டை வருது. அவளை கூல் பண்ணலாம்னு தான் நான் அக்கவுண்ட்ல பணம் போட்டேன் என்று சொல்கிறார்.

அதே நேரத்தில் பாக்யா ஒன்றரை லட்சம் பணத்தையும் கட்டி விட்டு இனியாவை வெளியே கூட்டிக் கண்டு வரும்போது கோபி அங்கே வந்து பணம் கட்ட வேண்டுமா என்று கேட்க, வேண்டாம் அம்மா எல்லாம் கட்டிட்டாங்க என்று இனியா சொல்ல, மொத்த பணத்தையும் கட்டியாச்சா? என்று திரும்பத் திரும்ப கேட்கிறார்.
பிறகு மூவரும் பிரின்ஸ்பல் பார்க்கப் போகின்றனர். அப்போது கோபி பாக்கியாவை வெளியே நிற்க சொல்லிவிட்டு நானும், இனியாவும் போறோம். உன்னால பிரின்ஸ்பல் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? இங்கிலிஷ்ல ஒரு வார்த்தை கேட்டா கூட உன்னால பேச முடியாது என்று அவமானப்படுத்துகிறார்.

அதைத்தொடர்ந்து கோபி அறைக்குள் செல்வதற்கு முயற்சி செய்ய, பாக்யா கதவை பிடித்துக் கொள்ள கோபி அதிர்ச்சி அடைகிறார். பிறகு பாக்யாவும் ரூமிற்குள் சென்று பிரின்ஸ்பலிடம் இங்கிலீஷில் பேசுகிறார். ஏற்கனவே எழில் மற்றும் அமிர்தாவிடம் காலேஜில் எப்படி பேச வேண்டும் என்று பாக்கியா ட்ரைனிங் எடுத்து இருக்கிறார்.

அதை அப்படியே காலேஜில் பேசிக் கொண்டிருக்கும்போது கோபி பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதைத் தொடர்ந்து பேசி முடித்ததும் பாக்கியா இனியாவை கூட்டிக்கொண்டு வெளியே கெத்தாக நடந்து வர, கோபி இதை பார்த்து வியப்புடன் நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications