பாக்யாவுக்கு பழனிச்சாமி கொடுத்த அட்வைஸ்.. கோபத்தில் இனியா.. எழில் செய்த செயலால் திகைத்த குடும்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா காலேஜ் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட அதற்கு பழனிச்சாமி அட்வைஸ் கொடுக்கிறார்.
இந்த நிலையில் பாக்யாவின் முடிவை கேட்டு இனியா கோபப்படுகிறார். அதே நேரத்தில் பாக்கியா காலேஜில் சேர்வது குறித்து ராமமூர்த்தி எதிர்பாராத பதிலை கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 31 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் இருக்க அப்போது பழனிச்சாமி பாக்கியா விடம் நீங்க முன்னாடி மாதிரி இப்போ இல்ல. முன்னாடி எல்லாம் கிளாஸ் தொடங்குவதற்கு முன்பு வந்துருவீங்க. கிளாஸ் முடிஞ்ச பிறகும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்பீங்க. இப்போ கரெக்டா எனக்கு வந்து கரெக்டா டான்னு போறீங்களே என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு பாக்யா எனக்கு எப்போ வேலை வரும் என்று தெரியல சார். அதனால தான் சீக்கிரமா போயிருவேன் என்று சொல்ல, அதைத் தொடர்ந்து பழனிச்சாமி லோன் விஷயம் என்ன ஆச்சு என்று கேட்க, அங்கே டிகிரி இருந்தால்தான் கண்டிப்பாக லோன் கொடுக்க முடியும் என்று சொல்லிட்டாங்க. அதனால என்னுடைய மருமகள் யாருடைய பெயரிலாவது லோன் எடுக்கலாம்னு இருக்கேன் என்று சொல்கிறார்.
அதற்கு பழனிசாமி அப்போ நீங்களே காலேஜ்ல சேர்ந்து படிச்சிட வேண்டியதுதானே என்று சொல்லி மேலும் சில அட்வைஸ் கொடுக்க பாக்கியாவின் மனமும் மாறுகிறது. பிறகு எழிலை வெளியே சந்திக்கும் பாக்கியா தனக்கு காலேஜில் சேரனும் போல ஆசையா இருக்கு என்று சொல்லி, இனியா வயசுல எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. என் வயசுல எல்லா பொண்ணுங்களும் காலேஜுக்கு போயிட்டு இருந்த போது நான் குழந்தைகளை வச்சிட்டு இருந்தேன்.

இப்போ இனியா காலேஜுக்கு போறதை பார்த்தால் எனக்கு போகணும் போல இருக்கு என்று சொல்ல எழில் அட்மிஷன் பார்ம் கொண்டு வந்து பாக்யாவிடம் கொடுத்து நீ போய் படிமா உன்னால முடியும் என்று அட்மிஷன் ஃபார்ம் நிரப்பி கொடுக்கிறார்.
இதனால் சந்தோஷமாக இருக்கும் பாக்கியா இந்த விஷயத்தை வீட்டில் எப்படி சொல்வது என்று தெரியாமல் திரைப்பட கதைகளை பற்றி அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருக்க, இனியா நீ எதுக்கு இப்படி பேசுற உன் நடையே சரியில்லையே என்று கேட்க, எழில் பாக்கியா காலேஜில் சேர்ந்த விஷயத்தை சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதற்கு ராமமூர்த்தி உன்னால் முடியும் என்றால் நீ போய் படிமா என்று சொல்ல, நான் படிக்கிறதால உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே மாமா என்று பாக்கியா கேட்க, அதெல்லாம் இல்லை என்று ராமமூர்த்தி சொன்னதும் பாக்யா சந்தோஷம் அடைகிறார். ஆனால் இனியா இதை கேட்டு அதிர்ச்சியாகி முகம் வாடி போய் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications