பழனிச்சாமியால் கோபிக்கு கிடைத்த அதிர்ச்சி..எழில் மற்றும் அமிர்தா செய்த செயல்..பதறும் ஜெனி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமியின் திருமணத்திற்காக பாக்கியா ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்.

பழனிச்சாமியும், பாக்கியாவும் பேசுவதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார்.

அதே நேரத்தில் கிச்சனில் அமிர்தாவும் எழிலும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் போது அங்கே வந்த ஜெனி அதைப் பார்த்து பதறி விடுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூன் 10ஆம் தேதி எபிசோடு ஆரம்பத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் பாக்யா,பழனிச்சாமி மற்றும் லோபிகா பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பழனிசாமி தேங்கா பால் சாதம் அம்மா கேட்டாங்க என்று சொல்ல, இன்னைக்கு நான் செய்து கொண்டு வருகிறேன் என்று பாக்கியா கூறுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 June 10th Episode full update

பிறகு அமிர்தா கிச்சனில் இருக்க அப்போது எழில் மறைந்திருந்து டிஷ்யூ பேப்பரை தூக்கி வீசி சேட்டை செய்ய பிறகு இருவரும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்க, அந்த நேரம் ஜெனி உள்ளே வர இதை பார்த்து அதிர்ச்சியாகி நான் எதுவும் பார்க்கல, எதுவும் பார்க்கலை என்று ரூமிற்கு ஓடிவிட அமிர்தா எழிலை அடித்து வெளியே அனுப்புகிறார்.

அதைத்தொடர்ந்து பாக்யா தேங்காய் பால் சாதம் செய்து கொண்டு பழனிச்சாமி வீட்டுக்கு கொண்டு போய் கொடுக்க பழனிசாமியின் அம்மா சாப்பிட்டு விட்டு பாராட்டி, பிறகு பழனிச்சாமியின் கல்யாணத்தைப் பற்றி பேசுகிறார். அதற்கு பாக்யா மாமா கிட்ட சொல்லி பேசிட்டு உங்களுக்கு சொல்றேன் என்று சொல்ல, பழனிச்சாமி கல்யாணம் எல்லாம் வேண்டாம் என்று கூறுகிறார்.

அதற்கு பாக்கியா, நான் இந்த விஷயத்துல அம்மா பக்கம் தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பி வருகிறார். அதே நேரத்தில் வீட்டில் ராமமூர்த்தி சிதம்பரம் என்பவரோடு பேசிக்கொண்டிருக்கின்றார். அவருடைய மகளுக்கு சென்னையில் வேலை கிடைத்து இருப்பதாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா அந்த பொண்ணு தானே பழனிச்சாமி சாருக்கு பாக்கலாம்னு சொன்னீங்க? அவங்க கிட்ட கேட்டு பாருங்க என்று சொல்ல ராமமூர்த்தியும் இது பற்றி நான் அவர்கிட்ட பேசுறேன்னு சொல்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 June 10th Episode full update

பிறகு அந்த சிதம்பரத்திடம் ராமமூர்த்தி திருமணத்தைப் பற்றி பேச அதற்கு அதன் சம்மதம் தெரிவிக்க நாளைக்கே வீட்டிற்கு வர சொல்கிறார். அதைத்தொடர்ந்து பாக்கியா பழனிச்சாமிக்கு போன் செய்து விஷயத்த சொல்ல, அவர் கல்யாணம் எல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார். பிறகு பாக்கியா போனை அம்மாவிடம் கொடுங்க என்று சொல்லி அம்மாவிடம் விஷயத்தை சொல்ல அவர் கண்டிப்பா நாளைக்கு வருகிறோம் என்று சொல்கிறார்.

பிறகு பாக்கியா பழனிச்சாமியிடம் கல்யாணம் வாழ்க்கை பற்றி எடுத்து சொல்ல, பழனிச்சாமியும் சில சமயங்களில் எனக்கும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணும் என்று சொல்கிறார். பிறகு பாக்கியா வாழ்க்கையில் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள ஒரு துணை வேண்டும். அப்படி தோணும்போது நாம ஏன் சார் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு பேச, இதை அந்த பக்கமாக வரும் கோபி கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+