பெண் பார்க்க வந்த பழனிச்சாமிக்கு கிடைத்த அதிர்ச்சி..கோபி சொன்ன வார்த்தை.. கோபத்தில் ராதிகா
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா வீட்டுக்கு பொண்ணு பார்க்க வந்த பழனிச்சாமிக்கு அந்த பொண்ணு அதிகமாக படித்து இருப்பதாக கூறி அதிர்ச்சி கொடுக்கிறார்.
தான் பல பிசினஸ் செய்திருந்தாலும் அதிகமாக படிக்கவில்லை என்று பழனிச்சாமி கூறியதை கேட்டு அந்த பொண்ணும் அதிர்ச்சி ஆகிறார்.

பாக்யாவைத்தான் பொண்ணு பார்க்க பழனிச்சாமி வந்திருக்கிறார் என்று கோபி இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 13ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ஈஸ்வரியும், ராமமூர்த்தியும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பழனிச்சாமியின் அம்மா வர பழனிச்சாமி எங்கே என்று எல்லோரும் கேட்க பழனிச்சாமி வீட்டு வாசலில் நின்று வெட்கப்பட்டு உள்ளே போவதற்கு யோசித்தபடியே நிற்கிறார்.
எழில் ஓடி சென்று பழனிச்சாமியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டிட்டு வர ஏற்கனவே பொண்ணு பாக்யா வீட்டிற்கு வந்து விட்டதால் பெண் பார்க்கும் படலத்தை தொடங்குகின்றனர். பழனிச்சாமி பெண்ணை பார்த்து வெட்கப்பட்டு இருக்க அனைவரும் பேசி ,இருவரும் தனியாக மனம் விட்டு பேசிட்டு வாங்க என்று அனுப்பி வைக்கின்றனர்.

பழனிச்சாமியும் அந்த பொண்ணும் பேசிக் கொண்டிருக்கும் போது அந்தப் பெண் அதிகமாக படித்து இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது பழனிச்சாமி நான் ஸ்கூல் படிப்பை தாண்டல, வீட்டுல அந்த நேரத்தில் அப்பா இறந்ததால வீட்டு பொறுப்பெல்லாம் நான் தான் பார்த்துக்கொண்டேன். அப்புறமா கம்பெனிகளையும் நானே பார்த்துட்டு இருந்தாலும் எனக்கு பெரிய அளவில் படிப்பு இல்லை என்று சொன்னதும் அந்த பெண்ணின் முகம் மாறுகிறது.
அதே நேரத்தில் கோபி ராதிகாவோடு காரில் சென்று கொண்டிருக்க வீட்டில் என்ன நடந்திருக்குமோ என்று யோசித்தபடியே மனதிற்குள் புலம்பி கொண்டிருக்கிறார். ராதிகா தன்னோடு வேலை பார்க்கும் பெண்ணின் எங்கேஜ்மென்ட் பற்றி பேசிக் கொண்டிருக்க அது பாக்யாவுக்கு என்று சொல்வது போலவே கோபிக்கு படுகிறது, கோபி நடவடிக்கைகளை பார்த்து ராதிகா கடுப்பாகிறார்.

ஒரு கட்டத்தில் ராதிகா வேலை இருக்கிறது என்று காரை விட்டு கீழே இறங்க அப்போது கோபி இனியாவிற்கு ஃபோன் செய்து வீட்டில் என்ன நடக்கிறது என்று விசாரிக்க அப்போ பழனிச்சாமி அங்கிள் வீட்டுக்கு வந்து இருக்காங்க. தனியா கல்யாணத்தை பத்தி பொண்ணு கூட பேசிக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல அதைக் கேட்டு கோபி மேலும் புலம்பி கொண்டிருக்கிறார்.

அப்போது மீண்டும் காருக்கு வந்த ராதிகா என்ன நீங்க பேசிட்டு இருக்கீங்க என்று கேட்க வீட்டுல... என்று கோபி இழுத்துக் கொண்டு இருக்க, அதே நேரத்தில் உங்க வீட்ல இருக்கவங்கள பத்தி மட்டும் பேசாதீங்க என்று ராதிகா கோவப்பட, நான் கார்ல ஏசி அதிகம் வைக்கவா என்று கேட்கலாம் என்று வந்தேன் என்று சொல்லி,நல்லவேளை பாக்கியா கல்யாணத்தை பத்தி எதுவும் சொல்லல, சொல்லி இருந்தா நம்மள கீழே இறக்கி விட்டிருப்பா என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications