கோபியை அவமானப்படுத்தும் செழியன்..கடும் கோபத்தில் பாக்கியா.. ராதிகா கேட்ட கேள்வி..திடீர் திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமி வீட்டுக்கு வந்ததை பார்த்து கோபத்தில் கோபி புலம்பிக்கொண்டே இருக்கிறார்.

கோபியை பழனிச்சாமியோடு ஒப்பிட்டு செழியன் அவமானப்படுத்துகிறார்.

அதை தொடர்ந்து கோபி பாக்கியாவிடம் தன்னுடைய கோபத்தை காட்ட பாக்யா பதிலுக்கு திட்டி அனுப்புகிறார்.

Baakiyalakshmi Serial 2023 June 15th Episode full update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூன் 15ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் கோபி, பாக்கியாவும் பழனிச்சாமியும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகி வீட்டிற்கு போகிறார். அதே நேரத்தில் வீட்டிற்குள் பழனிச்சாமியின் அம்மாவோடு ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து மேலும் கடுப்பாகிறார்.

எந்த பக்கம் பார்த்தாலும் பழனிச்சாமி பற்றி பேசிக் கொண்டிருப்பதால் கோபத்தில் கோபி மாடிக்கு போகிறார். அங்கிருந்தபடியே வெளியே பார்க்க அங்கே பாக்யா பழனிச்சாமியையும் அவருடைய அம்மாவையும் வழி அனுப்பி கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து கடுப்பாகி திட்டிக் கொண்டிருக்கும்போது அந்தப் பக்கமாக செழியன் வருகிறார்.

செழியனும் அய்யோ பழனிச்சாமி அங்கிள் போயிட்டாரா? அவர் கிட்ட பேசணும்னு நினைச்சேனே என்று சொல்ல, கோபி கோபப்படுகிறார். நீ மட்டும் தான் நல்லா இருந்தா இப்ப நீயும் மாறிட்டியா? எதுக்காக பழனிச்சாமி பற்றி பேசிகிட்டு இருக்க என்று சொல்ல, ஏன் அவர் நல்லா பிசினஸ் பண்றாரு என்று சொல்ல, நானும் தான் நல்ல பிசினஸ் பண்றேன் என்று கோபி சொல்ல, நீங்க ஒரே ஒரு பிசினஸ் பண்ணிட்டு அதையும் நஷ்டமா இருக்குன்னு சொல்றீங்க.

ஆனா பழனிச்சாமி அங்கிள் படிக்காமலே பல பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்காது என்று பெருமையாக பேசியபடி அங்கிருந்து போகிறார். இதனால் கடுப்பான கோபி எனக்கு என் லட்டு இனியா தான் ஆறுதலா இருப்பான்னு இனியாவை தேடி போகிறார். இனியும் பழனிச்சாமி பற்றி பெருமையாக பேச ஐயோ எல்லாருக்கும் என்ன ஆச்சு என்று கோபி புலம்புகிறார்.

பிறகு கோபத்தோடு கீழே வந்து பாக்யாவிடம் நீ இப்படி பண்ணிக்கிட்டு இருக்கறது நல்லா இல்லை. வளர்ந்த பசங்க இருக்காங்க. நீ அந்த போஸ்ட் மரத்துக்கு இப்போ கல்யாணம் பண்ணி வைக்கணும்னு என்ன அவசியம் என்று கோபத்தோடு கேட்க, ஆரம்பத்தில் அமைதியாக இருந்த பாக்கியா கடைசியில் கோபப்பட்டு திட்டி விடுகிறார். இனி என்னை பத்தி யோசிக்கவோ, நான் என்ன செஞ்சிட்டு இருக்கேன்னு என் பின்னாடியே சுத்திட்டு இருக்கவோ கூடாது என்று வார்னிங் கொடுத்து விட்டு கிளம்புகிறார்.

Baakiyalakshmi Serial 2023 June 15th Episode full update

அடுத்ததாக இதையே நினைத்து கோபி தன்னுடைய அறையில் புலம்பி கொண்டு இருக்க அப்போது ராதிகா என்ன ஆச்சு என்று கேட்க, இல்லை என் போனை காணும் அதான் தேடிட்டு இருக்கேன் என்று சமாளித்தபடி போனை எடுத்து பார்க்க, ராதிகா அதில் போன் பண்ணி இருக்கிறார். அதை பார்த்து எதற்காக போன் பண்ணுன என்று கேட்க, என்னை பிக்கப் பண்ண வரதுக்காக கூப்பிட்டேன். நீங்க எடுக்கல அதான் நானே வந்துட்டேன் என்று சொல்ல, வீட்ல என்ன விஷயம் நடக்குது என்று தெரியுமா? என்று கோபி கேட்கிறார்.

அதற்கு ராதிகா ஆமா நானும் பார்த்தேன். வீட்டில் நிறைய ஸ்வீட் எல்லாம் செஞ்சு வச்சிருக்காங்க. எல்லோரும் நல்ல டிரஸ் போட்டு இருக்காங்க. ஏதோ பங்க்ஷன் மாதிரி ரெடி பண்ணி இருக்காங்க என்று சொல்ல, ஆமா இங்க கல்யாணம் நடக்கப் போகுது. அதுவும் யாருக்கு தெரியுமா? என்று கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+