பாக்யாவிற்கும் பழனிச்சாமிக்கும் திருமணம் செய்ய எழில் முடிவு..ஈஸ்வரியின் பதில்? திடீர் திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்று கோபி இனி பாக்கியா கூட பேசக்கூடாது என்று மிரட்ட பழனிச்சாமி பதிலடி கொடுத்து அனுப்பி வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து அங்கு வந்த கோபி தன்னுடைய கோபத்துக்கான காரணத்தை சொல்ல எழில் அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு பாக்கியாவிடம் பழனிச்சாமியை கல்யாணம் செய்வதற்கு சம்மதமா என்று எழில் கேட்க பாக்யா எழிலை அடித்து கோபப்படுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 17ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் கோபி பழனிச்சாமியின் வீட்டில் என்னுடைய மனைவியோடு நீங்க இனி பேசக்கூடாது என்று சொல்ல, பழனிசாமி அதுக்கு எங்க இருவருக்கும் உள்ள பிரச்சனை நீங்க உங்க வேலைய பாருங்க. தேவையில்லாத வேலையில் மூக்கை நுழைக்காதீர்கள் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
பழனிச்சாமியிடம் கோபி சத்தமாக பேசுவதை கேட்ட பவுன்சர்ஸ் கோபியை கூட்டிக்கொண்டு வெளியே வந்து விட கோபி கோபத்தில் வெளியே நின்று புலம்பி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் எழில் பழனிச்சாமி வீட்டிற்கு வர எதற்காக நீங்க இங்க இருக்கீங்க என்று கோபியிடம் கேட்க, நீங்க யாரும் கேட்கல அதான் நானாவது போய் கேட்கலாம்னு வந்தேன். பாக்யாவை எப்படி இந்த பனைமரம் பொண்ணு பார்க்க வரலாம் என்று கேட்க எழில் அதிர்ச்சி அடைகிறார்.

ஆனாலும் இதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல், எங்க அம்மாவுக்கு புடிச்சிருந்தா பண்ணிக்க போறாங்க அவங்க யார புடிச்சிருக்குன்னு சொன்னாலும் நாங்க அதற்கு ஓகே சொல்லி அவங்கள கல்யாணம் பண்ணி வைக்க போறோம். நீங்க இதில் தலையிடாதீங்க நீங்க வேற கல்யாணம் பண்ணிட்டு போனவங்க தானே. உங்களுக்கு ஒரு நியாயம் எங்க அம்மாவுக்கு ஒரு நியாயமா? என்று கேட்டு திட்டி அனுப்புகிறார்.
பிறகு பழனிச்சாமியின் வீட்டிற்குள் வந்த எழில் பழனிச்சாமி இடம் கோபி வந்து பேசிட்டு போனதற்கு மன்னிப்பு கேட்டு விட்டு பிறகு அவர் சொன்ன தயாரிப்பாளரை பார்க்க போகிறார். அப்போது பழனிச்சாமி நான் கோபி பேசியதெல்லாம் மறந்துட்டேன். ஒரு சில ஆண்கள் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த எழில் பழனிச்சாமியைப் பற்றியும் பழனிச்சாமி கூட்டிட்டு போய் காட்டுன தயாரிப்பாளர் குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி பழனிசாமியின் வீட்டிற்கு சென்று உன்னை பொண்ணு பார்க்க வந்ததாக நினைத்து பேசி இருக்கிறார் என்று சொல்ல பாக்யா அதிர்ச்சி அடைகிறார். அப்போது செல்வி நானும் இதைத்தான் நினைச்சேன். ஏதோ தப்பா நினைச்சுட்டு தான் சார் இப்படி பேசிகிட்டு இருக்காருன்னு எனக்கு புரிந்தது என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து எழில் தேவையில்லாம அவருக்கு எதுக்கு வேற இடத்துல பொண்ணு பார்க்கணும் உனக்கு புடிச்சிருந்தா சொல்லு நீயே கட்டிக்கோ என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைந்து எழிலை போட்டு அடிக்கிறார். உனக்கு எப்படி இப்படி எல்லாம் பேச தோணுது என்று கோபத்தோடு பேசி, நான் அவர பத்தி எல்லாம் உன்கிட்ட சொல்ல தானே செஞ்சிருக்கேன். அவர பத்தி என் மனசுல அப்படி ஒரு சிந்தனை இருக்கா இல்லையா என்று உனக்கு தெரியாதா? என்று திட்டிக் கொண்டிருக்க, எழில் சும்மா கேட்டதாக சொல்லி மன்னிப்பு கேட்கிறார்.
அடுத்ததாக ஈஸ்வரி ராமமூர்த்தியும் பேசிக்கொண்டிருக்க அப்போது வீட்டிற்கு வரும் கோபி தலைவலியாக இருப்பதாக சொல்ல காபி போட்டு கொண்டு வரவா என்று ஈஸ்வரி கேட்க வேண்டாம் என்று கூறிக்கொண்டு பழனி பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பழனிச்சாமி ரொம்ப நல்ல பையன் என்று ஈஸ்வரி பாராட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications