வீட்டை விட்டு கிளம்பும் எழில்- அமிர்தா.. மன்னிப்பு கேட்ட பாக்யா.. கோபி மீது கோபத்தில் ராதிகா
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பழனிச்சாமியிடம் பேசியதற்கு பாக்யா மன்னிப்பு கேட்கிறார்.
அதைத்தொடர்ந்து அமிர்தா தன்னுடைய அப்பாவிற்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என்று அழ எழில் அவரை கூட்டிக்கொண்டு போவதற்கு கிளம்புகிறார்.
பாக்யா செய்த சமையலுக்கு கோபி ராதிகாவை பாராட்ட அதனால் கோபமான ராதிகா கோபியை அனைவர் முன்னாடியே அடிக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூன் இருபதாம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் பாக்கியா பழனிச்சாமியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி என்னை பத்தி ஏதாவது தப்பா தான் வந்து பேசி இருப்பார் என்று நினைக்கிறேன் அதனால என்ன மன்னிச்சிடுங்க என்று சொல்ல அதற்கு பழனிச்சாமி அவர் தப்பா பேசல உங்க கூட பேச கூடாதுன்னு தான் சொன்னாரு என்ன கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து பாக்கியா என்னை வேண்டான்னு போயி இன்னொரு கல்யாணமும் பண்ணிக்கிட்டாரு. அதுக்கு பிறகு எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்காருன்னு தான் தெரியல என்று வருத்தப்படுகிறார். அதற்கு பழனிசாமி அவர் இப்பவும் உங்களை காதலிக்கிறார் அதனால் தான் இப்படி எல்லாம் பேசுறார் என்று சொல்ல, அதற்கு சிரித்த பாக்கியா, என்னது காதலா? அதுலாம் கொஞ்சம் கூட கிடையாது.
செழியன் சின்ன பையனா இருக்கும்போது அவனுக்கு ஒரு ரிமோட்டுக்காரு வாங்கி கொடுத்தோம். அதை கொஞ்ச நாள் ஓட்டுட்டு இருந்தான். பிறகு அப்படியே அதை வச்சிட்டான். யாருமே அதைத் தேடல, ஆனா அவன் கல்யாணத்துக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் வீட்டை கிளீன் பண்ணும் போது அதை தூக்கி நான் பரண்ல போட்டுடேன். ஆனா அதுக்கு பிறகு தான் எல்லாரும் அந்த கார் எங்கே என்று தேடிக்கொண்டே இருந்தாங்க. அந்த மாதிரி தான் நான் அவரோட வாழ்க்கையில் இருந்திருக்கேன்.
அவர் கூட இருக்கும் போது என்னை ஒரு நாள் கூட மரியாதையாகவோ பாசமாகவோ நடத்துனதே கிடையாது. எப்பவும் அவர் என்னை "இடியட்" என்று தான் அதிகமாக கூப்பிட்டு இருக்காரு என்று கண்கலங்கியபடி பேசிய பாக்கியவிற்கு பழனிச்சாமி ஆறுதல் கூறுகிறார்.
அடுத்ததாக அமிர்தா போனில் பேசிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய அப்பா மார்க்கெட்டுக்கு போகும்போது பைக்குகாரர் ஒருவர் இடித்து விட்டு போய்விட்டார் என்றும் கீழே விழுந்து அவருக்கு அடிபட்டிருக்கிறது என்றும் அவருடைய அம்மா சொல்ல கண்கலங்கியபடி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது எழில் வந்து என்னவென்று கேட்க நடந்த விஷயத்தில் எல்லாம் அமிர்தா சொல்ல வா நாம போய் பார்த்துட்டு வரலாம் நீ கெளம்பு என்று சொல்ல அமிர்தாவும் கிளம்புகிறார்.

அதைத்தொடர்ந்து கிச்சனில் பாக்கியா சிக்கன் சமைத்துக் கொண்டிருக்க அதை ஹாலில் உட்கார்ந்தபடியே ஈஸ்வரி பாராட்டிக் கொண்டிருக்கிறார். கிச்சனில் நிற்கும் ராதிகா இதை கேட்டு கோபம் ஆகிறார். கோபிக்கு ரொம்பவே பிடிக்கும் நீ சிக்கன் சமைச்சா, அதிகமா சாப்பிடுவார் என்று சொல்லிக்கொண்டே இருக்க, நானும் நல்லாதான் சமைப்பேன் என்று ராதிகா சொல்ல நீ சமைக்கிறது தான் நான் பார்த்தேனே என்று மீண்டும் ஈஸ்வரியும் ராதிகாவும் சண்டையிடுகின்றனர்.
அதே நேரத்தில் மாடியில் இருந்து கோபி கீழே வந்து ராதிகா தான் சிக்கன் சமைத்தார் என நினைத்து ராதிகாவை பாராட்டிக் கொண்டிருக்கிறார். கோபமான ராதிகா பூரிக்கட்டையை தூக்கி வீச என்னாட்சி என்று கோபி கேட்க, அங்கு நடந்ததை பற்றி செல்வி சொல்ல கோபி அதிர்ச்சி ஆகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications