அமிர்தா வீட்டுக்கு போகும் எழில்.. கடும் கோபத்தில் பாக்கியா.. கோபிக்கு கிடைத்த அவமானம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை அவமானப்படுத்திய ராதிகாவை பாக்கியா திட்டி அனுப்புகிறார்.
ராதிகா அந்த கோபத்தை கோபி இடம் காட்ட கோபி பாக்கியாவிடம் வந்து பிரச்சனை செய்ய கடைசியில் கோபியும் அவமானப்படுகிறார்.
அதே நேரத்தில் எழில் அமிர்தாவை கூட்டிக்கொண்டு அவருடைய அம்மா, அப்பா வீட்டிற்கு செல்ல அங்கே அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூன் 21ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் ராதிகா என்னைக்காவது ஒரு நாளாவது நான் வைக்கிற குழம்பு வாசனையா இருக்குன்னு சொல்லி இருக்கீங்களா? என்று கோபி இடம் சண்டை போட, அதற்கு கோபி நல்லா இருந்தா தானே சொல்றதுக்கு என்று மைண்ட் வாய்ஸில் பேசுவதாக சத்தமாக பேசி விடுகிறார்.
கோபமான ராதிகா அடிக்க பாய, அவர் நான் இருக்கும் போது சமைச்சு இருந்தா கண்டிப்பா வாசனை இருக்குன்னு சொல்லி இருப்பேன் என்று சமாளிக்கிறார். பிறகு ராதிகா பாக்கியா தன்னிடம் கோபியை பற்றி பேசியதை எல்லாம் போட்டுக் கொடுக்க, நீங்க எதுக்கு அவங்க பண்றதை எல்லாம் வாட்ச் பண்றீங்க? அவங்க பின்னாடி எதுக்கு சுத்திகிட்டு இருக்கீங்க? அவங்கள இன்னும் நீங்க காதலிக்கிறீர்களா? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறார்.
அதற்கு கோபி உளறியபடியே இல்லை இல்லை அப்படி எல்லாம் கண்டிப்பா இல்லை என்று கூறி ராதிகாவை சமாதானப்படுத்தி நான் பாக்கியாவை என்ன பண்ணுறேன் பாருன்னு வீராப்போடு கீழே வருகிறார். கிச்சனில் பாக்கியா சமையல் செய்து கொண்டிருக்கும்போது கோபி அங்கு வந்து நீ பண்றது எதுவும் சரி கிடையாது. ராதிகா என்னுடைய வைஃப் அவளை நீ எதுவும் சொல்லக்கூடாது என்று அதட்டுகிறார்.
அதற்கு பாக்கியா நான் அப்படித்தான் பேசுவேன். உங்களால் என்ன பண்ண முடியும் என்று கோபப்பட்டு பேசி கையில் இருக்கும் கத்தியை வைத்து தக்காளியை வேகமாக நறுக்குகிறார். இதை பார்த்து கோபி கொஞ்சம் பயந்தபடியே நகர்ந்து போக அப்போ பாக்யா ஒரு நிமிஷம் என்று கூப்பிட்டு நீங்க இதுக்கு பழனிச்சாமி சார் வீட்டுக்கு போனிங்க என்று கேட்க? கோபி நான் எதுக்கு போறேன்? என்று சொல்லி சமாளிக்கிறார்.
அதற்குப் பிறகு ஆமா போனேன். அவர் எதுக்கு உன்கிட்ட வந்து பேசணும் அதெல்லாம் நல்லாவே இல்லை என்று சொல்ல, நான் யார்கிட்ட வேணாலும் பேசுவேன். என்ன வேணாலும் பண்ணுவேன். அதை கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? என்று பாக்கியா கேக்க, நீ ரொம்ப பேசுற என்று கோபிசெல்ல, நான் அப்படித்தான் பேசுவேன்.
உங்களால் என்ன பண்ண முடியும் என்று கேள்வி கேட்டு நாம ரெண்டு பேரும் ஒரு பேப்பர்ல கையெழுத்து போட்டோம்ல்லா அந்த பேப்பரை எடுத்து பாருங்க, இங்கிலீஷ்ல தான் இருக்கும். அது புரியலன்னா என்கிட்ட வாங்க நான் என்னென்ன இருக்குன்னு விளக்கமா சொல்றேன் திட்ட கோபி பயந்துடன் அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்.
அடுத்ததாக எழிலும் அமிர்தாவும் அவருடைய அப்பாவை பார்க்க ஊருக்கு வந்து அவரிடம் நலம் விசாரிக்கின்றனர். அங்கே அனைவரும் அமிர்தாவை பார்த்ததும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு நிலாவோடு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் ஜெனி இனியாவிற்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க, பாக்கியா எக்ஸாம் ஹாலில் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற அறிவுரைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் இனியா ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டிருக்க அப்போது பழனிசாமி வீட்டிற்கு வருகிறார். எல்லோரையும் விசாரித்துவிட்டு உனக்கு ஒரு கிப்ட் வாங்கிட்டு வந்திருக்கிறேன் என்று சொல்லி இனியாவிடம் கொடுக்க, அதை அவர் பிரித்துப் பார்க்க அதில் விலை உயர்ந்த பேனா இருக்கிறது.
அதைப் பார்த்து இனியா ரொம்ப நாளா இதைத்தான் வரணும்னு ஆசைப்பட்டு இருந்தேன் என்று சந்தோஷப்பட, கோபி முதலில் பாக்கியாவை கரெக்ட் பண்ணுனான். இப்ப என் குழந்தையை அவன் பக்கம் இழுக்க பார்க்கிறான் என்று டென்ஷன் ஆகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications