செழியனுக்கு வந்த சிக்கல்... சவால் விட்ட பாக்கியா.. கோபத்தில் மிரட்டும் எழில்.. பரபரப்பான கட்டம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபியிடம் பாக்கியா நான் 18 லட்சம் ரூபாய் தந்தால் நீங்க வீட்டை விட்டு போய்விட வேண்டும் என்று சவால் விடுகிறார்.
அதே நேரத்தில் செழியனுக்கு அவருடைய க்ளைன்ட் மூலமாக பிரச்சனை வருகிறது. அது போல எழிலுக்கு வீட்டில் நடந்த பிரச்சனைகள் தெரிந்து எழில் கோபப்படுகிறார்.
இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூன் 24ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தா நீங்க வீட்டை விட்டு போய்விடுவீர்களா? என்று கேள்வி கேட்க, கோபி முதல்ல பணத்தை கொடு என்று சொல்ல, நீங்க சொல்லுங்க நான் கொடுத்தா நீங்க போயிடுவிங்களா? என்று மீண்டும் கேள்வி கேட்க அதற்கு கோபி சரி என்று சொல்கிறார்.
அது தொடர்ந்து பாக்யா வீராப்போடு ஒரு மாசத்துல 18 லட்சம் ரூபாய் இந்த இடத்தில உங்க முகத்துல தூக்கி எறிகிறேன் அதுக்கப்புறம் உங்களுடைய குடும்பத்தை கூட்டிட்டு நீங்க போயிறணும் என்று சவால் விட, இதை கேட்டு ராதிகா பயப்படுகிறார். பிறகு கோபி ராதிகாவை கூட்டிக்கொண்டு மேலே செல்ல ஈஸ்வரிக்கு பாக்யா ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஜெனி நான் வேணும்னா அம்மா, அப்பா கிட்ட பணம் கேட்க வா என்று கேட்க அதற்கு பாக்யா வேண்டாம் என்று சொல்கிறார்.
அதுபோல ராமமூர்த்தி நானும் ஏதாவது உதவி செய்கிறேன் என்று சொல்ல அதுவும் வேண்டாம் என்று பாக்கியா மறுத்து விட, அதே நேரத்தில் மாடிக்கு போன ராதிகா தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் போட்டு பாக்கியா சவால் விட்டதை சொல்ல அதற்கு அவருடைய அம்மா அப்படி எல்லாம் பாக்கியவால் செய்ய முடியாது என்று ராதிகாவுக்கு ஆறுதல் கூறுகிறார்.
அதை தொடர்ந்து கோபி எனக்கு ஒரே டென்ஷனா இருக்கு. இங்க எப்ப பார்த்தாலும் ஒரே சண்டையா தான் இருக்கு என்று சொல்ல, நான் எந்த பிரச்சினையும் பண்ணல நான் அமைதியா இருந்தாலும் அவங்க தான் பிரச்சனை பண்றாங்க என்று ராதிகா சொல்ல சரி அமைதியா இரு என்று கோபி கோபப்படுகிறார்.
அந்த நேரத்தில் வீட்டில் நடந்ததை எல்லாம் பற்றி நினைத்து செழியன் வருத்தப்பட்டு கொண்டிருக்க அந்த நேரத்தில் மாலினி தொடர்ந்து போன் செய்து கொண்டே இருக்க, செழியன் என்ன விஷயம் என்று கேட்க அவர் இம்பார்ட்டண்ட் விஷயம் உடனே பார்க்க வேண்டும் என்று சொல்ல இப்போதைக்கு வர முடியாது நாளைக்கு பார்க்கலாம் என்று வைத்து விடுகிறார்.
ஆனாலும் தொடர்ந்து மாலினி விடாமல் போன் செய்து கொண்டிருக்க ஜெனி ஃபோனை எடுத்துப் பேச, அவரிடமும் நான் செழியனை பார்க்க வேண்டும் என்று சொல்ல, சரி வருகிறேன் என்று செழியன் கிளம்புகிறார். அதை தொடர்ந்து அமிர்தாவும் எழிலும் ஊரில் இருந்து வீட்டிற்கு வர இனியா வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்கிறார்.
அதைக் கேட்டு கோபமான எழில் அவருக்கு இருக்கு என்று கோபப்பட்டு எழுந்து செல்ல, பாக்யா தடுத்து நிறுத்தி 18 லட்சம் ரூபாய் ஒரே மாதத்தில் கொடுத்து விடுவதாக சொன்ன விஷயத்தை சொல்கிறார். அதற்கு எழில் நானும் என் தரப்பில் ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பார்க்கிறேன் என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications