பழனிச்சாமி பற்றி வெளிவந்த உண்மை..பாக்யாவிற்கு கிடைத்த அதிர்ச்சி..மயூ சொன்ன வார்த்தை..!
சென்னை: தன்னிடம் பிரச்சனை செய்த ராதிகாவிற்கு பாக்கியா அட்வைஸ் கொடுக்கிறார்.
பழனிச்சாமி பாக்கியாவிடம் பொய் சொல்லிவிட்டு கடைசியில் மாட்டிக்கொள்கிறார்.
மயூவை பாராட்டும் பாக்யாவிற்கு கடைசியில் அதிர்ச்சி காத்திருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூன் 2ம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் பாக்யாவிடம் சண்டை இட்டுக் கொண்டிருக்க நீங்க கேட்கிற கேள்வி எல்லாத்துக்கும் என்னால பதில் கொடுக்க முடியும். ஆனா அதை நான் பண்ண மாட்டேன். அதற்கு காரணம் நீங்க பண்ற எதையுமே நான் ஒரு விஷயமா மதிக்கிறது கிடையாது என்று பாக்கியா கூறுகிறார்.
பிறகு நான் குழந்தைகளை வைத்து கேம் விளையாடுறேன்னு சொல்றீங்க ஆனா இன்னைக்கு நடந்தது யோசித்து பாருங்கள். மயூ ரொம்ப நல்ல பொண்ணு ஆனா அவ வருத்தப்படுற மாதிரி நீங்க நடத்துக்காதிங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
பிறகு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் பழனிச்சாமி தேன் மிட்டாய் நானே செய்தது என்று கொடுக்க, பாக்யாவும் லோகிதாவும் சாப்பிட்டு சூப்பரா இருக்கிறது என்று கூறி இருக்கின்றனர். அப்போது பழனிச்சாமி பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்த ஒரு பில்லை பார்த்து லோகிதா இது ஸ்வீட் கடையில் தேன்குழல் மிட்டாய் வாங்கியதற்கான பில் என்று சொல்ல பழனிச்சாமி மாட்டிக்கொள்கிறார்.

அடுத்ததாக பாக்கியாவும் லோகிதாவும் பழனிச்சாமியின் அம்மாவை பார்க்க அவருடைய வீட்டுக்கு போகின்றனர். அப்போது பழனிச்சாமியின் அம்மா சாப்பாடு நான் சாப்பிட மாட்டேன் அது உப்பு சப்பு இல்லாமல் இருக்கு என்று அடம் பிடித்துக் கொண்டிருக்க, நான் சமைத்து தருகிறேன் என்று பாக்யா சமைத்துக் கொடுக்க அதை பழனிச்சாமி அம்மா பாராட்டி சாப்பிடுகிறார்.
அதே நேரத்தில் வீட்டில் செழியன் ஜெனி இடம் பேசிக் கொண்டிருக்க அப்போது ஆபீஸில் இருந்து போன் வருகிறது. நீங்க அந்த லேடி கிளைன்டிடம் சரியாக கம்யூனிகேஷன் செய்யவில்லை என்று புகார் வருகிறது என்று சொல்ல, ஜெனி நமக்கு வேலை முக்கியம் அவங்க உன்கிட்ட எப்படி வேணாலும் பழகட்டும் நீ உன்னுடைய வேலையில் கவனமா இரு என்று அட்வைஸ் கொடுக்கிறார்.

அடுத்ததாக பாக்யா வீட்டிற்கு வந்ததும் மயூ குடிக்க தண்ணி கேட்டு வந்து நிற்க, ஜெனி தண்ணீர் பிடித்துக் கொடுக்க, பாக்யா நீ சாப்டியா என்று கேட்க பிரட் ஜாம் வச்சுட்டு போயிருக்காங்க என்று சொல்ல, உனக்கு அது பத்துமா? அப்புறம் அதை சாப்பிடு என்று சொல்லி ஸ்னாக்ஸ் எடுத்து பாக்கியா கொடுக்கிறார்.
பிறகு மயூ உங்ககிட்ட நான் ஒன்னு சொல்லணும் என்று சொல்லி, நீங்க ரொம்ப நல்ல ஆன்ட்டி என்று சொல்ல, பாக்கியாவும் நீயும் ரொம்ப நல்ல பொண்ணு என்று மயூவை கொஞ்சி கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications