செழியனுக்கு அதிர்ச்சி கொடுத்த பழனி.. பாக்யாவால் கோபியை அடித்த ராதிகா.. ஈஸ்வரி எடுத்த முடிவு
முதல் முறையாக பழனி சாமியை பார்த்த செழியன் அதிர்ச்சி அடைகிறார்.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா படிக்கும் விஷயத்தை கேட்டு ஈஸ்வரி கோபப்பட்டு இருக்கிறார்.
பாக்கியாவிடம் பழனிச்சாமி நடந்து கொள்வதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
திறப்பு விழாவிற்கு வந்த கோபியை ராதிகா தலையில் கொட்டி இருக்கிறார்.

செழியனுக்கு அதிர்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மார்ச் 11 வது நாளின் எபிசோட்டின் ஆரம்பத்தில் கேட்டின் திறப்பு விழாவிற்கு பழனிச்சாமி தன்னுடைய புல்லட் பைக்கில் கெத்தாக வருகிறார். அங்கே வந்து எழில் இடம் இது பாக்யா மேடம் திறப்பு விழா தானே என்று கேட்க, ஆமாம், நீங்கள்..? என்று கூறியபடியே பாக்யாவை செழியன் அழைக்கிறார். பிறகு பாக்யா தான் ஸ்போக்கன் இங்கிலீஷ் படிக்கும் போது அங்கே தனக்கு தெரிந்த நண்பர் என்று அறிமுகம் செய்து வைக்கிறார். பாக்யா படிக்கும் விஷயத்தை கேட்டு செழியன் அதிர்ச்சி அடைகிறார்.

ஈஸ்வரிக்கு தெரிய வந்த உண்மை
ஈஸ்வரி பாக்யாவின் நண்பர்களை பார்த்து விடக்கூடாது என்று அங்கிருந்து ஈஸ்வரியை அழைத்துச் சென்று விட வேண்டும் என்று ஜெனியும் அமிர்தாவும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ராமமூர்த்தி பாக்கியா என பாக்யாவின் நண்பர்களோடு பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஈஸ்வரி அங்கே வந்து இவங்க யாரு என்று கேட்க, இவங்க எல்லாரும் அம்மாவோட ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்ல கூட படிக்கிறவங்க என்று இனியா சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.

இது செம ஐஸ்
பிறகு ஈஸ்வரி கோபமாக இருக்க பழனிச்சாமி என்னங்க சொல்றீங்க இவங்க உங்களோட மாமியாரா? ஆனா பார்த்தா அவங்க அப்படி தெரியல. உங்களுக்கு அக்கா மாதிரி இருக்காங்க. நல்லா இருக்கீங்களா அக்கா என கேட்டு ஈஸ்வரிக்கு ஐஸ் வைக்க, ஈஸ்வரி எல்லோரும் சாப்பிட்டு தான் போக வேண்டும் என்று சொல்லிவிட்டு கோபமாக அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

கோபத்தில் கிளம்பிய ஈஸ்வரி
அடுத்து பாக்கியா ஈஸ்வரியிடம் சென்று ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க அத்தை என்று ஈஸ்வரி இடம் புரிய வைக்க, ஈஸ்வரி எதுவும் கேட்காமல் பாக்கியவை திட்டி விட்டு செழியனை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பி விடுகிறார். பிறகு பழனிச்சாமி உட்பட எல்லோரையும் உட்கார வைத்து பாக்கியா சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கோபி இனியாவை கூட்டிக்கொண்டு போக கேண்டின் உள்ளே வருகிறார்.

புலம்பும் கோபி
பழனிசாமி சாப்பிட்டுவிட்டு கை கழுவும் இடத்தில் பாக்யாவிடம் நீங்க இளமையா இருக்கீங்க. உங்களுக்கு வயசு என்ன ஒரு 30 இருக்குமா? நீங்க எங்ககிட்ட உங்க பசங்க என்று சொன்னது பொய்தான? அவங்க உங்க தம்பி தானே என்று கேட்க, பாக்கியா சார் காமெடி பண்ணாதீங்க. எனக்கு 40 வயது முடிஞ்சு ரெண்டு மூணு வருஷம் ஆகிவிட்டது என்று சொல்ல, பொய் சொல்லாதீங்க என பழனிச்சாமி சொல்லிக் கொண்டிருக்க, பாக்கியா வெட்கப்படுகிறார். இதை பார்த்து கோபி யாருடா நீ இப்படி வழிஞ்சுகிட்டு இருக்க என்று அதிர்ச்சியாகி புலம்பி கொண்டிருக்கிறார்.

அடி பலமா கோபி
பிறகு கோபி இனியாவை பார்க்க உள்ளே செல்லும்போது ஜெனி சந்தனம் கொடுக்க, இனியா ஸ்வீட் கொடுத்து நான் தாத்தாவோட வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். கோபி வெளியே வரும்போது அங்கே ராதிகா வர ராதிகாவிடம் சிக்கிக் கொள்கிறார். எல்லோரும் சேர்ந்து என்னை வெறுப்பேத்துகிறீர்களா? உங்கள் முன்னால் மனைவிக்கு கேண்டின் திறப்பு விழாவிற்கு வந்தீங்களா? என்று ராதிகா கேட்க, கோபி இனியாவை கூட்டி செல்ல வந்ததாக சொல்கிறார். அதற்கு இனியா எங்கே என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு ராதிகா கோபியின் தலையில் கொட்டு வைத்து ஸ்வீட் எதுக்கு இன்னும் சாப்பிடாமல் வச்சிருக்கீங்க என்று வாயில் திணிக்கிறார். வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு என்று சொல்லிவிட்டு ராதிகா அங்கிருந்து கிளம்புகிறார். கோபி பயத்தில் தவிக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications