கோபியை அடிக்க பாய்ந்த ராதிகா.. அவமானப்படுத்திய ராமமூர்த்தி.. ஈஸ்வரிக்கு தெரிந்த உண்மையால் மாற்றம்

பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் சென்றது குறித்து ஈஸ்வரி மனம் மாறி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவின் கேட்டரிங் திறப்பு விழாவிற்கு சென்றதற்காக ராதிகா கோபியின் கழுத்தை நெறிக்க பாய்கிறார்.

எந்த காலத்திலும் நீ என்னுடைய மருமகள் ஆக முடியாது என்று ராதிகாவை ராமமூர்த்தி அசிங்கப்படுத்துகிறார்.

பாக்யாவுக்கு ஆதரவாக ஈஸ்வரி மாறுகிறார்.

இது தேவையா கோபி

இது தேவையா கோபி

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் வீட்டுக்கு வந்த கோபி ராதிகாவிடம் பாக்யாவை பற்றி புகழ்ந்து பேச, ராதிகா பாக்யாவை விட்டுட்டு வந்துட்டோம்னு கவலையா இருக்கா என்று கோபத்தோடு கேட்க, நான் சத்தியமா சொல்றேன் உன் மேல சத்தியமா சொல்றேன் அப்படியெல்லாம் இல்லை. நீ நல்லா இருக்கியா என்று கோபி ராதிகாவிடம் கேட்க, எல்லாரும் சேர்ந்து என்னை அவமானப் படுத்துறீங்க இல்ல என்று ராதிகா கோபத்தில் கத்துகிறார். பாக்கியா யாரு அவங்களுக்கு என்று என்று ராதிகா கேட்டதற்கு கோபி பாக்கியா அவங்களுடைய மருமகள் என்று சொல்ல, அப்போ நான் யாரு? என்று ராதிகா கோபத்தில் கோபியின் கழுத்தை நெரிக்க போகிறார். பிறகு ராதிகா கோவத்தில் ரூமுக்கு எழுந்து சென்றுவிட, நாளுக்கு நாள் உன்னுடன் நலமா ரொம்ப மோசமா போயிட்டு இருக்குடா கோபி என்று புலம்பி கொண்டிருக்கிறார்.

பயத்தில் பாக்கியா

பயத்தில் பாக்கியா

மறுபக்கம் வீட்டில் ஈஸ்வரி கோபமாக உட்கார்ந்து இருக்க, அப்போது எல்லோரும் வீட்டிற்கு வர பாக்கியா மட்டும் வீட்டிற்குள் செல்வதற்கு பயந்து வெளியே நின்று கொண்டிருக்கிறார். எழில், ராமமூர்த்தி என எல்லோரும் பாக்கியாவை சமாதானம் செய்து பார்த்துக்கலாம் வா என்று வீட்டுக்குள் அழைத்து வருகின்றனர். பிறகு ஈஸ்வரி இடம் பாக்யா பேச போக கோபமாக ஈஸ்வரி ரூமுக்குள் சென்று விடுகிறார். ரூமுக்குள் வந்து பாக்யா ஈஸ்வரியிடம் பேச முயற்சி செய்ய அப்போதும் ஈஸ்வரி வெளியே போ என்று திட்டுகிறார்.

ஈஸ்வரி சமாதானம் ஆகிட்டாங்க

ஈஸ்வரி சமாதானம் ஆகிட்டாங்க

பாக்கியா,அத்தை நான் பண்ணுனது தப்புதான். உங்க மேல இருக்கிற பயத்தில் தான் உங்ககிட்ட சொல்லல. ஆனா எதுக்காக அப்படி பண்ணுனேன்னு மட்டும் கேளுங்க என்று கூறுகிறார். பிறகு ஈஸ்வரி எதற்காக அப்படி பண்ணுனா என்று கேட்க அதற்கு, கான்டீன் ஆர்டர் எடுக்க போகும்போது ராதிகா என்னை எப்படி எப்படி அவமானப்படுத்தி நிக்க வச்சாங்க தெரியுமா? அங்க என்கிட்ட ஃபுல்லாவே இங்கிலீஷ்ல தான் பேசுனாங்க. அன்னைக்கு விளக்கு ஏத்த வந்தாங்களா கோடீஸ்வரன் சார் அவர் கூட தமிழ்ல தான் என்கிட்ட பேசினாங்க. ஆனால் ராதிகா எனக்கு இங்கிலீஷ் தெரியாது என்கிற காரணத்தினாலே என்கிட்ட இங்கிலீஷில் பேசி என்னை அவமானப்படுத்தினாங்க, உங்க மருமகள் யார்கிட்டயும் அவமானப்பட்டு நிற்கக் கூடாது என்பதற்காகத்தான் நான் இங்கிலீஷ் கிளாஸ் போனேன். இப்ப சொல்லுங்க நான் செஞ்சது தப்பா? என கேட்க, நீ இங்கிலீஷ்ல பேசணும் அவளுக்கு பதிலடி கொடுக்கணும் என்று ஈஸ்வரி கூறுகிறார். என்கிட்ட சொல்லாம போனது தான் தப்பு என்று ஒரு வழியாக ஈஸ்வரி சமாதானம் ஆகிறார்.

கோபிக்கு மீண்டும் ஆப்பு

கோபிக்கு மீண்டும் ஆப்பு

அடுத்ததாக ராதிகா வீட்டில் இனியா போட்டோக்களை மையூவிடம் காட்டிக் கொண்டிருக்க, மயூ கோபி இடம் நீங்களும் மம்மியும் மட்டும் போய் இருக்கீங்க. ஏன் என்னை கூட்டிட்டு போகல, என்று கேட்க, கோபி எங்கே என்று கேட்க? அதற்கு இனியா அம்மாவோட கேண்டீன் ஓப்பனிங் ஏன் கூட்டிட்டு போகலை என்று கேட்கிறார் என்று கூறுகிறார். உடனே கோபி ஆமா எதுக்கு அங்க போகணும் என்று கேட்க? நீங்களும் மம்மியும் மட்டும் தான் போயிருக்கீங்களே என்று மயூ கேக்க அப்போது அங்கு வரும் ராதிகா கோபி எடுத்த போட்டோவை பார்த்து கோபப்படுகிறார்.

சரியான சண்டை

சரியான சண்டை

பிறகு ராதிகா ராமமூர்த்தியிடம் நீங்க எதுக்கு அங்க போனீங்க. உங்களுக்கும் பாக்யாவிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க, ராமமூர்த்தி அவ என் மருமகள் என சொல்ல, நான் தானே உங்களோட மகனோட பொண்டாட்டி. அப்போ நான் தான் உங்க மருமகள் என்று சொல்ல, ஒரு நாளும் உன்னை எங்க மருமகளா ஏத்துக்க முடியாது. இவன் பாக்கியாவுக்கு பண்ணிட்டு வந்த பச்சை துரோகம் என்ன நடந்தாலும் நாங்க பாக்யா கூட தான் இருப்போம் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். உடனே ராதிகா அப்போ எதுக்கு எங்க வீட்டில இருக்கீங்க என்று கேட்க? அதற்கு ராமமூர்த்தி இப்பதான் நீ சரியா கேட்ட, நான் ஒன்னும் என் மகனோட வீடு. என் மருமக நீ என்கிற உரிமையில் இங்க வந்து இருக்கல. என் பேத்தி இங்கே இருக்கா. அவளுக்கு எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்று தான் இருக்கேன் என்று சொல்கிறார்.

ராதிகாவின் கட்டளை

ராதிகாவின் கட்டளை

அடுத்து ராமமூர்த்தி இனியாவை கூட்டிக்கொண்டு வெளியே செல்கிறார். ராதிகா, கோபியிடம் பார்த்தீர்களா? உங்க அப்பா என்னை எவ்வளவு அவமானப்படுத்துகிறார் என்று, உங்க அம்மாவும் அப்பாவும் நான் தான் மருமகள் என்று அவங்க வாயாலே சொல்லணும்,அதை நீங்க சொல்ல வைக்கணும். அதுக்கப்புறம் என்கிட்ட வந்து பேசுங்க என்று கோபத்தோடு பேசிக்கொண்டு ரூமுக்குள் சென்று விட, கோபி அதிர்ச்சியில் மயூவுடன் நிற்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+