Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடித்துவிட்டு நண்பரிடம் ராதிகா பற்றிய உண்மையை உளறிய கோபி... கோபத்தில் ஈஸ்வரி எடுத்த முடிவு

கோபி குடித்துவிட்டு தன்னுடைய வாழ்க்கை சோகங்களை நண்பரிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோபி ஏற்கனவே ராதிகாவிடம் தான் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு தற்போது மீண்டும் குடிக்க தொடங்கி இருக்கிறார்.

வீட்டிற்கு வந்த கோபிக்கு ராதிகா அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

பாக்கியா தான் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு சென்று வருவதாக ஈஸ்வரியிடம் சொல்லிவிட்டு கிளம்ப ஈஸ்வரி கோபத்தில் இருக்கிறார்.

புலம்பும் கோபி

புலம்பும் கோபி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 14ஆம் நாளுக்கான எபிசோடு ஆரம்பத்தில்,
கோபி பாரில் தனியாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் செந்தில் இடம் நான் உன்னை எப்ப வர சொன்னேன். நீ எப்ப வர என்று கோபி திட்டுகிறார். அதற்கு செந்தில் வீட்டிலிருந்தா வேலை இருக்காதா? என கேட்க, கோபி வீட்டில் உட்கார உனக்கு கம்பர்ட்டப்பிலா இல்லையா? என்று கேட்கிறாய். ஏண்டா ஏன் இப்படி கேட்கிற என்று கேட்க என் வாழ்க்கை இப்போ இப்படி ஆயிடுச்சு என்று கோபி புலம்புகிறார்.

எல்லாம் பொய்யா ராதிகா

எல்லாம் பொய்யா ராதிகா

அதற்கு செந்தில் ஏன்டா நீ கல்யாண வாழ்க்கையில் நல்லா தானே, நிம்மதியா தானே இருக்கு என்று கேட்க, கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் ராதிகா ரொம்ப நல்லா பேசினா, வாங்க கோபி, உட்காருங்க கோபி, சாப்பிடுங்க கோபி, ஏதாவது ஸ்பெஷலா பிரிப்பர் பண்ணட்டுமா? எனக்கு மட்டும் போதும் என டயலாக் எல்லாம் விட்டா, ஆனா இப்போ சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சண்டை போடுறா? என்று கோபி புலம்புகிறார்.

அது எப்படி முடியும்

அது எப்படி முடியும்

மேலும் பாக்யா ஆபீஸ் கேண்டின் திறந்ததை எல்லாம் திட்டம் போட்டு திறந்ததா சொல்றா. அதுக்கு நான் என்னடா பண்ண முடியும். ராதிகா அந்த கேண்டின் திறப்பு விழாவிற்கு ஒரே ஆபீஸ்ல வேலை பார்க்கிறதால் போக வேண்டிய சூழ்நிலை. அங்கே என் அம்மாவும் அப்பாவும் வந்தாங்க. அவங்க எதுக்கு வந்தாங்க அவங்களுக்கு நான் தான் மருமக அதை அவங்க வாயால சொல்ல வைக்கணும்னு சொல்றா. அது எப்படி முடியும். நாங்க சின்ன சின்ன வயசுலயே ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு பெத்தவங்க ஏத்துப்பாங்கன்னு காத்துகிட்டு இருக்கோம் என்று புலம்பி தள்ளுகிறார்.

மாட்டிக்கொண்ட கோபி

மாட்டிக்கொண்ட கோபி

அடுத்து வீட்டுக்கு வரும் கோபி நைசாக யாருக்கும் தெரியாமல் ரூமுக்குள் போய்விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்க, ராதிகாவிடம் மாட்டிக்கொள்கிறார். ராதிகா சாப்பிட்டீங்களா? என கோபி இடம் கேட்க, கோபி வெளியில் சாப்பிட்டேன் என்று என்று சொல்ல, நீங்க வெளியில் சாப்பிட்டா சாப்பிட்டேன் என்று சொல்ல மாட்டீங்களா? என்று சத்தம் போடுகிறார். ஏன் எனக்காக எதுவும் ஸ்பெஷலா செஞ்சு வச்சியா? என கோபி கேட்க? அதெல்லாம் இல்லை என்று ராதிகா சொல்கிறார். பிறகு இனிமே கண்டிப்பா சொல்கிறேன் என கோபி சொல்கிறார்.

தப்பித்த கோபி

தப்பித்த கோபி

அடுத்து சரி வந்து படுங்க என்று ராதிகா சொல்ல நான் பிரஷ் ஆகிட்டு வரேன். எனக்கு ஒரு பெட்ஷீட் மட்டும் கொடு நான் இங்கேயே படுக்கிறேன். ஏன்னா உள்ளே வந்தால் லைட் போடணும் டிரஸ் மாத்தணும் மயூ தூங்குறா அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என சொல்ல, ராதிகா கோபியின் நடவடிக்கையால் சந்தேகப்படுகிறார். பிறகு பெட்ஷீட் எடுத்து வந்து கொடுக்க தப்பிச்சேன்டா சாமி என்று கோபி படுத்து கொள்கிறார்.

பாக்கியாவிற்கு பாராட்டு மழை தான்

பாக்கியாவிற்கு பாராட்டு மழை தான்

அடுத்த நாள் பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் கிளம்ப, வழியில் ஈஸ்வரி உட்கார்ந்து இருக்கிறார். அவரிடம் தான் ஏற்கனவே சொல்லாமல் சென்றதற்கு மன்னிப்பு கேட்டு, நான் இப்போது கிளாசுக்கு சென்று வருகிறேன் என்று சொல்ல, அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் ஈஸ்வரி அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார். ஒரு வழியாக ஈஸ்வரியிடம் சொல்லிவிட்டு பாக்கியா கிளாஸுக்கு செல்கிறார். அங்கே பழனிச்சாமி நீங்க கொடுத்த சாப்பாடு ரொம்ப சூப்பராக இருந்தது. அதுவும் அந்த சாம்பார் வேற லெவல். கண்டிப்பா நீங்க வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு வருவீங்க என்று பாராட்டுகிறார். அடுத்து பாக்கியா அவருக்கு நன்றி சொல்கிறார். மேலும் பழனிச்சாமி கோயம்புத்தூரில் எங்க வீட்டில் எந்த பங்க்ஷன் நடந்தாலும் உங்களுடைய சமையல்தான். உங்களை பிளைட்ல கூட்டிட்டு பொய்யாவது சமைக்க வைப்பேன் என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+