ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுத்த சரண்.. பாக்யாவால் திணறும் இனியா.. ராதிகாவால் கோபிக்கு வந்த சிக்கல்
இனியா அவருடைய பாய் பிரண்டை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா சரணை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வர ஈஸ்வரி அதிர்ச்சி ஆகிறார்.
இனியா ராதிகாவிடம் சொல்லாமல் பாக்கியாவின் வீட்டில் சென்று இருப்பதால் ராதிகா மேலும் கோபம் ஆகிறார்.
நான் தான் உங்களுடைய அம்மா, அப்பாவின் மருமகள் அதை அவர்கள் வாயால் சொல்ல வைக்க வேண்டும் என்று கோபியிடம் ராதிகா சண்டை இடுகிறார்.

வீட்டிற்கு வந்த சரண்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் இனியா சரணை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகிறார். ஏற்கனவே வீட்டிற்கு பிரியாணி சாப்பிட வருமாறு பாக்யா முந்தின நாள் கூப்பிட்டதால் சரண் டியூஷன் முடிந்து இனியாவின் வீட்டிற்கு வந்திருக்கின்றார். அப்போது ஹாலில் ஜெனி உட்கார்ந்து இருக்க ஜெனி இருவரையும் வரவேற்கிறார். பிறகு அமிர்தா வந்ததும் அனைவரிடமும் இனியா அறிமுகம் செய்து வைக்கிறார்.

பாட்டிக்கு ஐஸ் வச்சுட்டாரே
நிலா பாப்பாவிற்கு சாக்லேட் வாங்கிக் கொண்டு வந்த சரண் அதை குழந்தையிடம் கொடுத்துவிட்டு குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி அங்கே வர யார் இந்த பையன் என்று கேட்க இனியாவின் பிரண்ட் என்று சொன்னதும் இனியா இவங்கதான் என்னுடைய பாட்டி என்று சரணிடம் அறிமுகம் செய்ய, என்னது பாட்டியா? ஆன்ட்டி மாதிரி இருக்காங்க. பாட்டி மாதிரியே தெரியலையே என்று சரண் ஐஸ் வைக்க ஈஸ்வரி சந்தோஷமாகி சரணிடம் சகஜமாக பேசி பழகுகிறார்.

மாட்டிக்கொண்ட இனியா
வீட்டில் உள்ள நிலவரங்களை எல்லாம் சரண் எனக்கு எல்லாமே தெரியும் என்றும் குறிப்பாக கோபி வீட்டில் இல்லை என்பது பற்றி சரண் பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி அதிர்ச்சியாகிறார். எல்லாமே இனியா என்னிடம் சொல்லிவிட்டார் என்று சொல்ல ஈஸ்வரியின் முகம் மாறுகிறது. அந்த நேரத்தில் இனியா அங்கிருந்து எழுந்து பாக்யாவிடம் சென்று விடுகிறார். பாக்யா அனைவருக்கும் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது இனியா சென்று உனக்கு வருத்தம் ஏதும் இல்லையா அம்மா என்று கேட்க, நான் தானே சரணை இங்கே சாப்பிட வரச் சொல்லி சொன்னேன் என்று சொல்கிறார்.

அம்மாவிற்கு நம்பிக்கை இருக்கு
இனியா நீ ரொம்பவே மாறிட்ட அம்மா என்று சொல்ல, நான் உன்னிடம் எப்பவாவது இவங்க கூட பேச கூடாது என்று நான் யாரையாவது சொல்லி இருக்கேனா? உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, நீ நல்லா படிக்கணும் எந்த தப்பான முடிவும் எடுக்க மாட்டாய் என்று நம்புகிறேன் என்று நம்பிக்கையாக பாக்யா பேச, இனியாவின் முகம் மாறுகிறது. பிறகு பாக்யாவை கட்டிப்பிடித்துக் கொண்டு நன்றாக படிப்பேன் என்று அரைகுறை மனதோடு சொல்கிறார்.

கோபி நிலைமை மோசம் தான்
அடுத்ததாக கோபியின் வீட்டில் ராதிகா இனியா இன்னும் வரவில்லையே என்று தேடிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி வர கோபி இடம் மயூ அக்கா இன்னும் வரவில்லை என்று சொல்ல அதற்கு தாத்தா ராமமூர்த்தி அவ இன்னிக்கி பாக்கியா வீட்டில் சாப்பிட்டுவிட்டு வந்துருவா என்று சொல்கிறார். அதற்கு ராதிகா அப்போ ஏன் என்கிட்ட இதை சொல்லலை என்று சொல்ல, நீ என்கிட்ட கேட்கல அதனால சொல்லலை என்று ராமமூர்த்தி சொல்கிறார். பிறகு இது உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமும் இல்லையே என்று ராமமூர்த்தி அந்த இடத்தை விட்டு கிளம்பி போய் விடுகிறார்.

தினமும் அடிதான் கோபிக்கு
அடுத்ததாக கோபியிடம் ராதிகா பாத்திங்களா உங்க அப்பா பேசுவதை என்று கோபத்தில் திட்டி விட்டு, எனக்கு தெரியாது நீங்க உங்க அம்மா அப்பா வாயால இவதான் என்னோட மருமகள் என்று என்னைப் பற்றி பேச வேண்டும் என்று கூறி கோபியை அடிக்க போக, மயூ அருகில் இருந்து இதை பார்த்து பயப்படுகிறார். பிறகு கோபமாக ராதிகா ரூமுக்குள் சென்றுவிட கோபி தனியாக நின்று குழம்பிக் கொண்டிருக்கிறார்.

இந்த அவமானம் தேவையா ராதிகா
அடுத்ததாக ராதிகாவின் ஆபீஸில் கேண்டினில் பாக்கியா அனைவருக்கும் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வரும் ராதிகா எல்லாம் மூடி வைத்து தானே சமையல் செய்கிறீர்கள் என்று ஒவ்வொன்றாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். பிறகு நீங்க வந்த பிறகு சமையல் நல்லா இல்லை என்று பலர் சொல்கிறார்கள் என்று ராதிகா சொல்ல, நீங்களே இங்கே இருக்கும் அனைவரிடமும் கேட்டுப் பாருங்கள். ஒருவர் நல்லா இல்லை என்று சொன்னாலும் நான் அதற்கான பதிலை கொடுக்கிறேன் என்று சொல்ல, ராதிகா அங்கு இருப்பவர்கள் அனைவரிடமும் கேட்கிறார். அனைவரும் சாப்பாடு அருமையாக இருக்கிறது என்று பாக்யாவை பாராட்டுகின்றனர். அதனால் ராதிகா கடுப்பாகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications