சரண் உடன் சேர்த்து அசிங்கப்படுத்திய ராதிகா.. இனியா செயலால் கட்சி மாறிய கோபி.. அமிர்தாவின் பதிலடி

ராதிகா அவமானப்படுத்தியதால் இனியா கோபியிடம் தன்னுடைய கோபத்தை காட்டுகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா மற்றும் சரண் இருவரும் ஐஸ்கிரீம் பார்லரில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்து ராதிகா திட்டுகிறார்.

தன்னை அவமானப்படுத்துவதற்கு ராதிகாவுக்கு உரிமை இல்லை என்று இனியா முகத்துக்கு நேராக திட்டுகிறார்.

கோபி இனியா மற்றும் ராதிகா பக்கத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்.

இனியாவை மிரட்டும் ராதிகா

இனியாவை மிரட்டும் ராதிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 22ஆம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் இனியா சரணோடு சேர்ந்து டியூஷனுக்கு போய்விட்டு வெளியே வந்து சரணோடு சேர்ந்து ஐஸ்கிரீம் பார்லரில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த பக்கமாக காரில் ராதிகா வர இனியாவை பார்த்து ராதிகா அதிர்ச்சி ஆகிறார். பிறகு காரை நிறுத்தி, ராதிகா கடையில் வைத்து இனியாவிடம் சத்தம் போட்டு இன்னும் பத்து நிமிஷத்தில் வீட்டிற்கு வர வேண்டும் என்று சொல்லி மிரட்டி விட்டு கிளம்புகிறார்.

திட்டும் இனியா

திட்டும் இனியா

ராதிகா பேசியதை கேட்டு இனியா கோபத்தில் என்னை மிரட்டுவதற்கு இவங்க யார் என்று கேட்க, அதற்கு சரண் இனியாவை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். வீட்டுக்கு வந்து இனியா ராதிகாவிடம் கடையில் வைத்து அப்படி சத்தம் போடுறீங்க எல்லோரும் என்னை பார்க்கிறாங்க. எனக்கு கேவலமாக இருக்கிறது என்று கோபப்பட்டு திட்ட, தப்பு பண்ணியது நீ அதைக் கேட்க தான் செய்வேன். இந்த வீட்டில் இருக்க என்று ராதிகா திட்டுகிறார்.

சரியான சண்டை

சரியான சண்டை

அதற்கு இனியா என்னை கண்ட்ரோல் பண்றதுக்கு நீங்க யாரு எனக்கு அம்மாவாக ட்ரை பண்றீங்களா? அதெல்லாம் ஒரு நாளும் நடக்காது என்று திட்டுகிறார். நாம் மயூவா இருந்தா என்ன பண்ணுவேனோ? அதைத்தான் உனக்கும் பண்றேன் என்று சொல்ல, அதற்கு இனியா அதை மயூ கிட்ட மட்டும் பண்ணுங்க என்று பதிலடி கொடுக்க, கோபத்தில் கோபி வரட்டும் அவரே நான் செஞ்சது தப்பா இல்லையா என்று சொல்லட்டும் என ராதிகா பேச இனியா நானும் டாடி கிட்ட சொல்றேன் என்று அவர் யாருக்கு சப்போர்ட் பண்ணுகிறார் என்று பார்க்கலாம் என்று சொல்கிறார்.

கோபிக்கு வந்த சிக்கல்

கோபிக்கு வந்த சிக்கல்

பிறகு ராதிகா கோபிக்கு போன் போட்டு வீட்டிற்கு வர சொல்ல கோபி கிளைன்ட் வீட்டு வாசலில் நிற்பதாகவும், என்ன விஷயம் என்று சொல்லு என கேட்க? முடியாது நீங்கள் வீட்டுக்கு இப்ப வந்தே ஆக வேண்டும் என்று கோபத்தில் ராதிகா பேச, வேறு வழியில்லாமல் வரேன்னு சொல்லி போனை வைக்கிறார். மறுபக்கத்தில் எழில் நிலா பாப்பாவுக்கு டிரஸ் எடுத்து வந்து அமிர்தாவிடம் கொடுத்து இன்னும் இரண்டு நாளில் அவளுக்கு மூன்றாவது பிறந்தநாள் அதை பெருசா செலபிரேட் பண்ணனும் என்று சொல்ல அமிர்தா இப்போதைக்கு அதெல்லாம் வேண்டாம் அடுத்த வருஷம் பாத்துக்கலாம் என சொல்கிறார்சொல்கிறார்.

முற்றிய வாக்குவாதம்

முற்றிய வாக்குவாதம்

பிரபு கோபி வந்ததும் ராதிகா, இனியா செய்த விஷயத்தை சொல்ல இனியா அவன் என்னுடைய பிரண்ட் அது எல்லாருக்கும் தெரியும். தாத்தா உங்களுக்கும் தெரியும் தானே என்று ராமமூர்த்தி இடம் கேட்க? ஆமாம் என்று அவர் சொல்ல, பாட்டி அம்மா என எல்லாருக்கும் தெரியும் நான் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கேன் என்று சொல்ல, அப்போ அவனை இங்க கூட்டிட்டு வந்திருக்கனும். எதற்காக நீ கடையில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்க, டியூஷனுக்கு போனா படிச்சோமா வந்தோமானு இருக்கணும். அது என்ன கண்ட இடத்துக்கு போறியா? என்று திட்ட, அதற்கு இவங்க எப்படி என்னை ரோட்ல வச்சு சத்தம் போடலாம் என கோபியிடம் கேட்கிறார்.

இனியா கேட்ட நச் கேள்வி

இனியா கேட்ட நச் கேள்வி

அதற்கு கோபி அவன் அம்மா ஸ்தானத்தில் இருந்து கேட்கிறா நீ கோபப்படாத என சொல்ல, இவங்களுக்கு அந்த உரிமை எல்லாம் இல்லை என்று இனியா சொல்கிறார். பிறகு கோபி நீ எதுக்கு யாரோ ஒருத்தனுடன் வெளியில் நின்று பேசுற என்று கேட்க, நீங்களும் என்னை நம்பலலா? அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணி பேசுறீங்க என்று கோபப்பட, நீங்க எனக்கு அப்பாவாக இருந்துட்டு இவங்க கூட பேசுனது தான் தப்பு. நான் பண்றது தப்பு கிடையாது என்று பேசிவிட்டு மொட்டை மாடிக்கு செல்கிறார்.

தவிக்கும் கோபி

தவிக்கும் கோபி

இனியா கிளம்பியதும் ராதிகா அவகிட்ட சொல்லி வைங்க, ரொம்ப திமிரா பேசிகிட்டு இருக்கா. நான் சும்மா இருக்க மாட்டேன். என்கிட்ட வந்து எதுவும் கேட்காதீங்க என்று சொல்லி கோபத்தோடு கிளம்பி போக, கோபி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+