பாக்கியாவின் மாற்றத்தை பார்த்து அதிர்ச்சியான ஈஸ்வரி.. கட்சி மாறிய கோபி.. ராதிகா எடுத்த முடிவு?
சென்னை: இனியா விஷயத்தில் கோபி ராதிகாவுக்கு ஆதரவாக இனியாவிடம் பேச போக கடைசியில் அவமானப்படுகிறார்.
ராதிகா மேலும் மிரட்ட, இனியா கோபியை பிளாக்மெயில் செய்கிறார்.
பாக்கியா எந்த இடத்தில் அவமானம் படக்கூடாது என்று ஈஸ்வரி முழுசாக மாறியிருக்கிறார்.

கோபியை திட்டும் இனியா
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 23ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் கோபி ராதிகாவுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருப்பதால் இனியா கோபப்பட்டு வெளியே செல்ல கோபி தடுக்க தான் மொட்டை மாடிக்கு போகிறேன் என்று சொல்லி போகிறார். பின்னாடியே இனியாவை சமாதானம் செய்ய போன தாத்தாவிடம் கண்கலங்கி இனியா அழுகிறார். பிறகு கோபியும் அங்கே வர இனியாவிடம் நீ ஏதோ ஒரு பையன் கூட பேசிக்கிட்டு இருக்கவே ராதிகா கோபப்பட்டா அவாளுக்கு உன் மேல இருக்கிற அக்கறையில் தான் அவ அப்படி நடந்துக்கிட்டா. அவளுக்கு அது டியூஷன்ல படிக்கிற பையன்னு தெரியாது என்று சொல்ல, தெரியலனா யாருன்னு கேட்கணும். நீங்களும் அவர்களுக்கு சப்போர்ட் பண்ணி பேச வந்துட்டீங்க என்று இனியா சொல்ல கோபி ஷாக் ஆகிறார்.

அம்மா தான் பெஸ்ட்
மேலும் அன்னைக்கு அம்மா கூட எங்க ரெண்டு பேரையும் ரோட்ல வச்சு பார்த்தாங்க, திட்டுவாங்கன்னு நினைச்சேன். ஆனா அவங்க யாருன்னு என்னன்னு விசாரிச்சு நல்லபடியாத்தான் பேசினாங்க, வீட்டுக்கு கூப்பிட்டு நல்லபடியா சாப்பிட வச்சு அனுப்புனாங்க, அம்மாவுக்கு என் மேல நம்பிக்கை இருக்குன்னு சொன்னாங்க. ஆனா நீங்க அப்படி இல்லை. இவங்கள கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் ரொம்பவே மாறிட்டீங்க. உங்களை எனக்கு கொஞ்சம் கூட இப்ப பிடிக்கவே இல்லை என்று சொல்ல அழுது கொண்டே இனியா கீழே செல்கிறார்.

அப்பாவின் சாபம்
உடனே ராமமூர்த்தி இந்த வயசுல கல்யாணம் வேண்டாம். பிள்ளைகளோட எதிர்காலத்தை பார் என்று அன்னைக்கே அடிச்சிக்கிட்டேன். என் பேச்சை கேட்டியா? இன்னைக்கு நல்லா அனுபவிக்கிற. நீ இன்னும் அனுபவிப்ப. அதை நான் பார்க்க தான் போறேன். இந்த வயசான காலத்துல இன்னும் என்னென்னவெல்லாம் பார்க்க வேண்டியது இருக்கோ என்று திட்டி அவரும் அங்கிருந்து கீழே கிளம்புகிறார்.

எழில் போடும் பிளான்
அடுத்த பக்கத்தில் பாக்கியா வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செல்வி சுடிதார் வந்துடுச்சி. அதை எடுத்து வந்து நான் போட்டு பார்த்தேன் எனக்கு சரியா இருக்கு என்று சொல்கிறார். சுடிதார் எப்படி போட்டுட்டு போறது என்று பாக்கியா யோசனையில் இருக்க, அவருக்கு அவருடைய மருமகள்கள் இருவரும் கூல் செய்கின்றனர். பிறகு எழில் நாளைக்கு நிலா பாப்பா பிறந்தநாள் என சொல்லி, இதை அமிர்தாவிடம் எதுவும் சொல்ல வேண்டாம். நிலா பாப்பா பிறந்த நாளை பெருசா செலப்ரேட் பண்ணலாம் என்று பிளான் போடுகிறார்.

மிரட்டும் இனியா
அடுத்து ராதிகா இனியாவை சாப்பிட கூப்பிட எனக்கு சாப்பாடு தேவை இல்லை என இனியா கோபமாக சொல்கிறார். அதற்கு கோபியும் நீ சாப்பிடவில்லை என்றால் நானும் சாப்பிட மாட்டேன் என்று சொல்ல, நீங்க சாப்பிடாதீங்க டாடி என இனியா அவருக்கு ஷாக் கொடுக்கிறார். பிறகு இங்க சாப்பிடாம இருக்கிற அளவுக்கு ஒன்னும் பெரிய பிரச்சனை எதுவும் நடக்கலை. அவளுக்கு பசிக்கும்போது அவ சாப்பிடுவா. நீங்க வாங்க என ராதிகா கோபியை கூப்பிட, ராமமூர்த்தி நீங்க எல்லாரும் சாப்பிடுங்க நான் அவளை சாப்பிட வைக்கிறேன் என்று சொல்லி இனியாவை சமாதானம் செய்து அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார்.

தவிக்கும் கோபி
அடுத்து கோபி இனியா வருத்தத்தில் இருப்பதால் சாப்பிட முடியாமல் எழுந்து வந்து விடுகிறார். மீண்டும் இனியாவிடம் பேச இனியா கோபத்தோடு கோபியிடம் எதுவும் பேசாமல் வந்துவிடுகிறார். பிள்ளைகளோட எதிர்காலத்தை நினைத்து பார்க்காமல் உன்னோட சந்தோசம் தான் முக்கியம் என்று கல்யாணம் பண்ணினல அனுபவி என முர்த்தி, கோபியை திட்டுகிறார்.

சுடிதாரில் கிளம்பிய பாக்கியா
அடுத்த நாள் காலையில் செல்வி சுடிதாரில் வர அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். செல்வியை பார்த்த ஈஸ்வரி இனி இவளுக்கு போதுமே கூட கொஞ்சம் பண்ணுவா என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்யாவை எங்கே என தேட பாக்யா சுடிதார் அணிந்து அமிர்தாவுக்கு பின்னால் மறைந்து கொண்டு வர, பிறகு பாக்யாவை சுடிதாரில் பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டு பாராட்டுகின்றனர். அப்போது ஈஸ்வரி மருமகள்கள் இருவரும் புடவையில் இருக்கின்றனர். ஆனால் மாமியார் சுடிதார் போட்டுக்கிட்டு வருகிறார். இது நீ ராதிகா முன்னாடி தோற்க கூடாது என்பதற்காகத்தான் .இதற்கு சரி என்றேன். பிறகு இதுவே எனக்கு பிடிச்சிருக்கு இப்படியே இருக்கிறேன் என்றால் நான் பொல்லாதவளாக மாறிவிடுவேன் என்று மிரட்டுகிறார். அதற்கு பாக்கியா உங்களுக்கு பிடிக்கலை, வேண்டாம் என்றால் நான் இப்பவே கூட இதை மாத்திருந்தேன் அத்தை. உங்களுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம் என்று சொல்ல, இதுவும் நல்லா தான் இருக்குது. நீ ரொம்ப வெட்கப்படாத என்று ஈஸ்வரி சொல்ல, நான் போட்டோ எடுக்கிறேன் என்று எழில் போட்டோ எடுத்து அழகா இருக்கீங்க என சொல்ல போட்டோவை பார்த்து பாக்கியா சந்தோசப்படுகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications