கோபியை பற்றி தெரிந்து கொண்ட பழனிச்சாமி செய்த செயல்.. கண்கலங்கி அழும் பாக்யா.. ராமமூர்த்தியின் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்யாவின் வீட்டில் நிலா பாப்பாவின் பிறந்த நாளிற்கு வந்த பழனிச்சாமி செயலால் கோபிக்கு கோபம் ஏற்படுகிறது.

பாக்கியாவின் கணவரைப் பற்றி மொத்த உண்மையையும் பழனிச்சாமி தெரிந்து கொள்கிறார்.

இனியாவை பற்றி போட்டுக் கொடுத்த ராதிகாவிற்கு ராமமூர்த்தி பதிலடி கொடுக்கிறார்.

கோபியை பற்றி பேசிய பாக்யா

கோபியை பற்றி பேசிய பாக்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மார்ச் 27 ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் பாக்யா வீட்டில் நிலா பாப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நல்லபடியாக நடந்து முடிய எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்யா உடன்படிக்கும் பெண் ஒருவர் எல்லோரையும் பார்த்துட்டேன். உங்க ஹஸ்பண்ட் எங்கே என கேட்க பிறகு பாக்யா கோபியோடு விவாகரத்து ஆன விஷயத்தை சொல்கிறார்.

கடுப்பான கோபி

கடுப்பான கோபி

அதன் பிறகு நண்பர்கள் கிளம்பும்போது பழனிச்சாமி பாக்கியாவின் தன்னம்பிக்கை பாராட்டி அவரிடம் சிறிது பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது காய்கறி வாங்க வீட்டை விட்டு வெளியே வந்த கோபி இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அப்போது பக்கத்தில் எழில் போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து மனதிற்குள்ளே டே உங்க அம்மாவை பாருடா என புலம்புகிறார். பிறகு எதுவும் சொல்ல முடியாமல் அங்கிருந்து கடுப்பாகி கிளம்புகிறார்.

கண்கலங்கும் பாக்யா

கண்கலங்கும் பாக்யா

அடுத்ததாக இனியா வீட்டிற்கு கிளம்பி கொண்டிருக்கிறார். அப்போது இப்பதான் உன்னுடைய அருமை எனக்கு புரியுது. நீ ரொம்ப நல்ல அம்மா மிஸ் யூ என்று சொல்லி பாக்கியாவின் கன்னத்தில் முத்தமிட்டு வீட்டிற்கு கிளம்ப, பாக்கியா கண்கலங்குகிறார். இனியா என்கிட்ட இப்படி ஏன் சொன்னா? அவ நல்லா இருக்காளா? அவளுக்கு அந்த வீட்டில் ஏதேனும் பிரச்சனையா? என கஷ்டப்பட்ட கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இருக்காது. அதான் அவ கூட அவளுடைய தாத்தா இருக்காருல்ல என்று சொல்லி பாக்யாவிற்கு ஆறுதல் கூறுகிறார்.

போட்டுக் கொடுக்கும் ராதிகா

போட்டுக் கொடுக்கும் ராதிகா

அதே நேரத்தில் ராதிகா கோபியை சாப்பிட கூப்பிட கோபி இனியா வரட்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு இனியா இன்னும் வரல, அவ அந்த வீட்டுக்கு போனா அங்கேயே தங்கிடுவாள் என்று பயமா இருக்கு என்று ராதிகாவிடம் கோபி புலம்ப, அப்படின்னா எதுக்கு அவளை அங்கு அனுப்புறீங்க. ஏதாவது காரணம் சொல்லிட்டு வாரத்துல மூணு நாள் அங்க போயிட்டு இருக்கா, அங்க எதுக்கு போகணும்? போக கூடாது என்று சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வந்து விடுகிறார்.

திட்டும் இனியா

திட்டும் இனியா

என்னை பத்தி நான் இல்லாத நேரத்துல போட்டு கொடுக்குறீங்க என்று கோபத்தோடு இனியா திட்ட, உன்னை பற்றி நான் எதுக்கு போட்டுக் கொடுக்கணும். ஆமா நீ எதுக்கு அந்த வீட்டுக்கு போற அங்கு தான் வேண்டான்னு சொல்லிட்டு இங்க ஓடி வந்து அப்புறம் எதுக்காக போற, எனக்கே அங்கு எல்லாம் வேணாம்னு சொல்லிட்டு ஓடி வரலை. டாடி வேணும்னு இங்க வந்தேன் என்று இனியா ராதிகாவுக்கு பதிலடி கொடுக்கிறார்.

ராமமூர்த்தியின் பதிலடி

ராமமூர்த்தியின் பதிலடி

அப்போது நான் அங்க போக கூடாது என்று சொல்ல, நீங்க யாரு என கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது ராமமூர்த்தி தலையிட்டு நீ ஏன் அவளை அங்க போக கூடாது என்று சொல்ற, அதை சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு என கேட்டு கேட்க ராதிகா ஷாக் ஆகிறார். எதுக்கு சண்டை போட்டு எல்லாருடைய சந்தோஷத்தையும் கெடுக்கிற என கோபி கேட்க, நான் உங்க சந்தோசத்தை கெடுக்கிறேனா? நீங்க எல்லோரும் சந்தோஷமாக இருந்தா நான் தான் சந்தோஷம் நிம்மதி இல்லாம இருக்கேன் என்று சொல்கிறார்.

தவிக்கும் கோபி

தவிக்கும் கோபி

மேலும் ராமமூர்த்தி நான் அன்னைக்கே இந்த கல்யாணம் பண்ணாததுன்னு தலப்பா டா அடிச்சுக்கிட்டே, என் பேச்சை கேட்டியா? என சொல்ல, பாத்தீங்களா உங்க அப்பா என்ன சொல்றாரு என கோபியிடம் ராதிகா சண்டைக்கு போக கோபி கொஞ்சம் அமைதியா இரு என சொல்கிறார். அதற்கு ராதிகா நான் தான் அமைதியா இருக்கணுமா? இவங்கள எதாவது சொல்றீங்களா? என சண்டை போடுகிறார். இந்த பிரச்சனையில் கோபி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+