பாக்கியாவின் இரண்டாவது திருமணம் பற்றி பேசிய எழில்.. கண்டிஷன் போடும் ராதிகா.. அதிர்ச்சியில் கோபி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி, பாக்கியா பழனிசாமியுடன் பேசுவதை பற்றி எழிலிடம் போட்டுக் கொடுக்கிறார்.

எங்க அம்மாவுக்கு யாரையாவது பிடித்திருந்தால் இரண்டாவது திருமணத்தை நானே செய்து வைப்பேன் என்று கோபிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

தன்னை மருமகளாக உங்க அப்பாவும் அம்மாவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ராதிகா கோபிக்கு கண்டிஷன் போடுகிறார்.

ஒரே சண்டை தான்

ஒரே சண்டை தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 28ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில், இனியா வீட்டிற்கு வந்ததும் ராதிகா இவங்க எதுக்கு அங்க போகணும் என்று பிரச்சனையை செய்து கொண்டிருக்க, கோபி அமைதியாக இருக்க சொல்கிறார். அதற்கு நான் மட்டும் அமைதியாக இருக்கணும் அவங்களை எதுவும் சொல்ல மாட்டீங்களா? என்று திட்டி விட்டு உள்ளே செல்கிறார். அடுத்து இனியாவும் நான் ஜாலியாக சந்தோஷமாக வந்தேன் மூட் அவுட் பண்ணிட்டீங்க போங்க டாடி என்று கோபப்பட்டு ரூமுக்குள் செல்ல ராமமூர்த்தி வீடா இது என சலித்துக் கொள்கிறார்.

நல்லா யோசிங்க கோபி

நல்லா யோசிங்க கோபி

பிறகு கோபி மொட்டை மாடியில் சென்று இதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்க அங்கே வரும் ராதிகா இனியா என்னை மதிக்கணும், உங்க அப்பா அம்மா என்னதான் மருமகள்னு சொல்லணும் அதுக்கு நீங்க ஏதாவது பண்ணி ஆகணும் என்று சொல்ல, அதற்கு கோபி நான் என்ன பண்ண முடியும் என்று கேட்க? நீங்க பண்ணி தான் ஆகணும் என்று ஆர்டர் போடுகிறார். வேறு வழியில்லாமல் கோபி சரி பண்றேன். ஆனா எனக்கு கொஞ்சம் டைம் கொடு என்று சொல்ல, ராதிகா அந்த வீட்ல இருந்தா கூட கொஞ்சம் நிம்மதியாக இருந்திருப்பேன். இங்கு கூட்டிட்டு வந்து உங்க பேமிலியோட மிங்கிள் பண்ண வச்சு என் நிம்மதியே போச்சி, நீங்க உங்க அப்பா அம்மாவ என்னை மருமகள்னு சொல்ல வைக்க என்ன செய்யப் போறீங்கன்னு யோசிங்க என்று திட்டி விட்டு கிளம்பி போகிறார்.

இப்படி குடிக்கலாமா கோபி

இப்படி குடிக்கலாமா கோபி

கோபி, ராதிகா, இனியா, ராமமூர்த்தி, என எல்லோரும் சொன்னதை நினைத்து டென்ஷனில் மொட்டை மாடியில் உட்கார்ந்து தண்ணி அடித்து விட்டு அங்கேயே படுத்து தூங்கி விடுகிறார். ராமமூர்த்தி திடீரென்று தூக்கத்தில் இருந்து எழுந்து பார்க்க அங்கே கதவு திறந்து இருக்கிறதை பார்த்து கோபி எங்கே என தேடி மேலே செல்ல அங்கே கோபி குடித்துவிட்டு தூங்குவதை பார்த்து வருத்தப்பட்டு கீழே வருகிறார்.

எழில் கொடுத்த பதிலடி

எழில் கொடுத்த பதிலடி

அடுத்த நாள் காலையில் எழில் வாக்கிங் செல்ல, கோபியும் வாக்கிங் வருகிறார். அப்போது எழிலிடம் கோபி வந்தது யார்? அவன் எதுக்கு உங்க அம்மாகிட்ட நின்னு பேசிகிட்டு இருக்கான்? என்று கோபப்படுகிறார். சூப்பர் மார்க்கெட் போறா, அவன் கூட பைக்ல போறா, வீட்டுக்கு வந்து வெளியே நின்று பேசிக்கிட்டு இருக்கா, இதெல்லாம் என்னன்னு கேக்க மாட்டியா? அவளுக்கு அசிங்கமா இல்லையா? என்று கோபமாக திட்ட, நீங்க பண்ண துரோகத்தை விட எங்க அம்மா எங்களுக்கு எந்த துரோகமும் பண்ண மாட்டாங்க என்று எழில் கூறுகிறார்.

எழிலின் முடிவு

எழிலின் முடிவு

அது மட்டுமில்லாமல் எங்க அம்மாவுக்கு அவர்கள் லிமிட் என்ன என்பது நல்லாவே தெரியும். அவங்க பிரண்டுன்னு சொல்லித்தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க. உங்களை மாதிரி எங்க கிட்ட பொய் சொல்லிட்டு தப்பான உறவு வைத்துக்கொள்ளவில்லை என்று பதிலடி கொடுக்க, மேலும் இன்னொன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க, ஒரு வேலை எங்க அம்மாவுக்கு யாரையாவது புடிச்சி இருந்ததுனா, அவங்களுக்கு நானே கல்யாணம் பண்ணி வைப்பேன். உங்களால 25 வருஷம் வாழ்க்கையே இழந்துட்டாங்க. இனிமேலாவது அவங்க வாழ்க்கையில சந்தோஷமா இருக்கட்டும்னு நானே கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

இந்த அவமானம் தேவையா கோபி

இந்த அவமானம் தேவையா கோபி

பிறகு வாயை கழுவுடா அசிங்கமா பேசாத, அசிங்கமா இல்லையா? என கோபி கேக்க, நீங்க பண்ணுனதை விட இது ஒன்றும் பெரிய அசிங்கம் இல்லை. அவங்க என்ன பண்றாங்க, எங்க போறாங்கன்னு, ஃபாலோ பண்ணி அதை என்கிட்ட வந்து பேசுறீங்க பாருங்க இதுதான் பெரிய அசிங்கம் என்று பதிலடி கொடுத்து அவமானப்படுத்தி கோபியை அனுப்பி வைக்கிறார்.

ஈஸ்வரியின் மனமாற்றம்

ஈஸ்வரியின் மனமாற்றம்

அடுத்து பாக்யா வீட்டில் அமிர்தாவின் அப்பா அம்மா ஊருக்கு கிளம்ப, ஈஸ்வரி அம்மா எங்கே என கேட்க அவங்க ரூமில் இருக்காங்க கூப்பிடவா? என்ன பாக்கியா சொல்கிறார். இல்லை நாங்களே பார்த்து சொல்லிட்டு ஊருக்கு கிளம்புறோம் என சொல்லி எல்லோரும் ஈஸ்வரியின் ரூமுக்கு வருகின்றனர். அங்கே ஈஸ்வரி நிலா பாப்பாவோடு விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+