ராதிகாவிற்கு எதிராக பழனிச்சாமி செய்த செயல்.. பயத்தில் பாக்கியா.. அவமானப்படுத்தும் இனியா
சென்னை: பாக்யாவிற்கு ராதிகா கொடுத்த டாஸ்க் வெற்றி பெறுவதற்காக பழனிச்சாமி உதவி செய்கிறார்.
பாக்யாவிற்காக வீடியோ காலில் பழனிச்சாமி கேக் செய்வதற்கு சொல்லிக் கொடுக்கிறார்.
இனியாவை நடு ரோட்டில் அவமானம் செய்த ராதிகாவை இனியா திட்டி அனுப்புகிறார்.

ராதிகாவை பற்றிய விளக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 30ம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் பழனிச்சாமி பாக்கியாவிடம் உங்களை இந்த அளவிற்கு ஒரு பொண்ணு டார்ச்சர் பண்ணனும் என்றால் அவங்களுக்கும் உங்களுக்கும் ஏற்கனவே ஏதும் பிரச்சனை இருக்கிறதா? என்று கேட்க, எப்படிங்க நீங்க கரெக்டா கண்டுபிடிச்சீங்க என்று பாக்கியா கேட்டு, அவங்க வேற யாரும் இல்லை. என்னுடைய முன்னாள் கணவரின் இன்னால் மனைவி தான் என்று சொல்ல, அவங்க கிட்டயா நீங்க போய் மாட்டி இருக்கீங்க என்று பழனிச்சாமி கேட்கிறார்.

ஆரம்பத்தில் நல்ல தோழிதான்
முதலில் கேண்டின் ஆர்டர் கிடைக்கவில்லை என்று சொன்னேனே அதற்கு காரணம் அவங்க தான். இப்போ கேண்டீன் ஆர்டர் கிடைத்ததும் அதை நடத்த விடாமல் தடுப்பதற்காக பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் நான் கஷ்டப்படும்போது எனக்கு உதவிய நல்ல தோழியே அவங்கதான். ஆனால் இப்போ நிலைமை இப்போ மாறிவிட்டது என்று உருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்டு பழனிச்சாமியும் ஆறுதல் கொடுத்து கேக் செய்வதெல்லாம் ஒன்றுமே இல்லை அதெல்லாம் ஈஸியா கத்துக்கலாம் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று கூறுகிறார்.

உதவி செய்யும் பழனிச்சாமி
அடுத்ததாக கிச்சனில் பாக்கியா சமையல் பொருள்கள் வைத்துக் கொண்டு சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க அமிர்தா ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க என்று கேட்க? அதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. கிச்சன்ல ஏபிசிடி தெரியாத நானே இவ்வளவு பண்ணி இருக்கேன். ஆனா உங்களால பண்ண முடியாதா? என்ன என்று கேட்கின்றார். பிறகு பழனிச்சாமி வீடியோ கால் செய்ய எப்படி செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கிறார். பழனிச்சாமி சொல்லிக் கொடுத்த படியே கேக் செய்துவிட்டு ஓவனில் வைத்து பாக்கியா பதட்டத்தோடு காத்திருக்கிறார்.

ஒரே ரொமான்ஸ் தான்
அடுத்தது கிளாசுக்கு பாக்யா வருகிறார். தான் செய்த கேக்கை கிளாஸிக்கு கொண்டு வந்து கொடுக்க, அதை சாப்பிட்ட பழனிச்சாமி கொஞ்சம் கிரிஸ்பி குறையாக இருக்கிறது. அடுத்த முறை செய்யும்போது சரியாக வந்துவிடும் என்று கூறிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக வீட்டில் அமிர்தா கிச்சனில் இருக்க அப்போது அங்கே வரும் எழில் அமிர்தாவிடம் ரொமான்ஸ் செய்து கொண்டு இருக்கிறார் இருவரும் ஒரு ஆம்லெட் போடுவதற்காக ஆனியன் கட் பண்ணி கொண்டு ரொமான்ஸ் செய்து கொண்டிருக்க, அப்போது எழிலின் கண்ணில் வெங்காயம் பட்டு பதறி விடுகிறார். பிறகு கத்தியை காட்டி மிரட்டி அமிர்தா எழிலை தள்ளி இருக்க சொல்லி மிரட்டுகிறார்.

திட்டும் ராதிகா
அடுத்ததாக இனியா சரனோடு பேசிக்கொண்டே தெருவில் நடந்து வருகிறார். அப்போது எனக்கு நீ மேக்ஸ் நல்ல சொல்லிக் கொடுத்ததால் தான் நான் டெஸ்டில் நல்லா எழுதினேன் என்று பேசிக்கொண்டு வர அந்த வழியாக வரும் ராதிகா இவர்கள் இருவருக்கும் முன்னாடி காரை நிறுத்திக் கொண்டு, ராதிகா இனியாவை காரில் வா என்று கூப்பிட நான் சைக்கிளில் தானே வந்து இருக்கிறேன் வேற சைக்கிள் என்ன செய்ய என்று சொல்ல, இங்கே நிறுத்திட்டு வா பிறகு எடுத்துக்கலாம் என்று ராதிகா சொல்ல, வேண்டாம் நான் சைக்கிளில் வருகிறேன் என்று சொல்லும்போது, அருகில் இருக்கும் சரணை பார்த்து ராதிகா திட்டுகிறார். உனக்கு வேறு வேலையே இல்லையா? உனக்கு வீடு எங்க இருக்கிறது? எப்பவும் இந்த பொண்ணு கூட தான் சுத்திக்கிட்டு இருக்க வென்று திட்டுகிறார்.

அவமானப்படுத்தும் இனியா
இனிமே அவ கூட சுத்துனா அவ்வளவுதான் என்று சரனை திட்ட, அவனை எதற்காக திட்டுறீங்க. நான் தான் சைக்கிள்ல வந்துருவேன் என்று சொல்றேன்ல. நீ வா சரண் நாம போகலாம் என்று இனியா சரணோடு சென்று கொண்டிருக்கிறார். கோபத்தில் பாக்கியா காரில் ஏறி சென்று விடுகிறார். பிறகு இனியா சரனிடம் எங்க அம்மா வீட்டில் இருக்கும்போது அம்மா எதுக்கெடுத்தாலும் திட்டிக்கிட்டே இருக்காங்கன்னு தோணிச்சி. ஆனா இப்பதான் அம்மாவ எனக்கு அவங்க எவ்வளவு நல்லவங்க என்று புரிகிறது. ஆனால் இந்த ராதிகா அப்படி இல்லை. இவங்களால தான் எங்க வாழ்க்கையில் பல பிரச்சனை வந்தது என்று கூறிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications