ராதிகாவிற்கு வீடியோ காலில் ஆப்பு வைத்த பழனி.. தவிக்கும் கோபி..பாக்யாவின் நடிப்பு.. கலகலப்பான தருணம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா சரனோடு பேசிக்கொண்டு வருவதை பார்த்த ராதிகா இனி சைக்கிளில் போகக்கூடாது என்று மிரட்டுகிறார்.
கோபி இனியா மற்றும் ராதிகா இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
பாக்கியா ராதிகா வைத்த இரண்டாவது டாஸ்கிலும் ஜெயித்து இருக்கிறார்.

இனியாவை தேடும் ராதிகா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 31ம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் வீட்டிற்கு வந்த ராதிகா கோபி இடம் காபி போட்டு தரட்டுமா? என கேட்க, வேண்டாம் நானே போட்டு விட்டேன் என்று கூறுகிறார். அடுத்து ராமமூர்த்தி இடம், அப்பா காபி போட்டு தரவா? என கேட்க அவரும் வேண்டாம் என சொல்கிறார். பிறகு ராதிகா வாசலையே பார்த்துக் கொண்டிருக்க கோபி யாரும் முக்கியமானவங்க வீட்டுக்கு வராங்களா? என்று கேட்க இனியாவை தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். அவள் இன்னும் காணல என்று கூறுகிறார்.

இனியாவிற்கு கட்டளையிடும் ராதிகா
மேலும் வர வழியில் பாத்துட்டு தான் வந்தேன் என்று சொல்ல, கோபி வந்துருவா நீ பயப்படாதே என்று சொல்லிக் கொண்டிருக்க, அப்போது இனியா வீட்டிற்கு வர உனக்கு வீட்டுக்கு வர இவ்வளவு நேரமா? எங்க போயிருந்தாய் என்று கோபத்தோடு திட்ட, இனியா கடுப்பாகிறார். நீங்க காரில் வந்தீங்க நான் சைக்கிள்ல வந்தேன். ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்குல்ல என சொல்ல, நாளைலிருந்து நீ சைக்கிள்ல டியூஷனுக்கு போகக்கூடாது என்று ராதிகா கூறுகிறார்.

மாட்டிக்கொண்ட கோபி
அதற்கு இனியா அதை நீங்க சொல்லாதீங்க. நான் சைக்கிள் தான் போவேன் என சொல்ல, பழையபடி தாத்தாவை உன்னை கூட்டிட்டு போகட்டும் என சொல்ல தாத்தாவுக்கு முடியலன்னு தான் சைக்கிள் வாங்கினேன் என இனியா சொல்கிறார். உடனே ராதிகா அப்ப நாளைல இருந்து ஒரு ஆட்டோ அரேஞ்ச் பண்ணலாம். இவ ஆட்டோவில் போயிட்டு வரட்டும். அப்பதான் யார் கூடவும் பேசாமல் நேர வீட்டுக்கு வருவா என்று சொல்ல, கோபி எதுக்கு தேவையில்லாத செலவு என்று கேட்க, ராதிகா இவ ஆட்டோவில் போயிட்டு வரட்டும் அவ்வளவுதான் சொல்லிட்டேன். இனியா நான் எதற்கு ஆட்டோவில் போகணும் என்னால போக முடியாது என சொல்கின்றார். இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு கோபி தவிக்கிறார்.

வெற்றி பெற்ற பாக்கியா
அடுத்ததாக பாக்கியாவிற்கு மீண்டும் பழனி சாமி வீடியோ காலில் கேக் செய்ய சொல்லிக் கொடுக்க அதைக் கேட்டு கேக் செய்து பார்க்க, இந்த முறை கேக் சூப்பராக வருகிறது. எல்லோரும் வீட்டில் பாராட்டி தள்ளுகின்றனர். பிறகு பாக்கியா கேன்டினில் இருக்கும்போது செய்த கேக்கை தனது டீமில் உள்ளவர்களிடம் கொடுக்க எல்லோரும் சாப்பிட்டு விட்டு சூப்பராக இருக்கு என சொல்கின்றனர். இனி எல்லோரும் கேக் செய்வதை கத்துக்க வேண்டும். நான் உங்க எல்லாத்துக்கும் சமையல் கிளாசில் சேர்த்து விடுகிறேன். சமையலில் இனி நமக்கு தெரியாததே இல்லை என்று சொல்லனும். அந்த அளவிற்கு எல்லா விஷயத்தையும் நாம் கத்துக்க வேண்டும் என்று கூறுகிறார்.

என்னம்மா நடிக்கிறாங்க பாக்கியா
பிறகு அங்கு வரும் ராதிகா இன்னைக்கு ஈவினிங் நீங்க செஞ்ச கேக் இருக்கணும். இல்லன்னா கேண்டின் காண்ட்ராக்ட் க்ளோஸ் பண்ணிடுவேன் என்று மிரட்ட, பாக்கியா. நான் எவ்வளவோ முயற்சி பண்ணுனேன். ஆனா எனக்கு கேக் செய்ய வரல. இன்னும் ரெண்டு நாள் மட்டும் டைம் கொடுங்க என்று கெஞ்சி நடிக்க ,ராதிகா அதெல்லாம் டைம் கொடுக்க முடியாது. இன்னைக்கு ஈவ்னிங் தான் உங்களுக்கு டெட்லைன் என்று சொல்கிறார். பாக்யாவால் கேக் செய்ய முடியாது என்று ராதிகா சந்தோஷமாக அங்கிருந்து கிளம்ப பாக்கியாவும் செல்வியும் சாயங்காலம் வரட்டும் வச்சுக்கலாம் என்று சந்தோஷத்தோடு ராதிகாவை கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

ஆர்வத்தில் காத்திருக்காங்க
அடுத்து கிளாஸில் பாக்கியா செய்த கேக் எல்லோருக்கும் கொடுக்க, எல்லோரும் சூப்பராக இருப்பதாக பாராட்டுகின்றனர். பழனிச்சாமி ரெண்டு நாளில் கேக் செய்ய கத்துக்கிட்ட ஒரே ஆளு நீங்களாகத்தான் இருப்பீங்க. ப்ரவைட் ஆப் யூ என்று பாக்கியாவை பாராட்டிக் கொண்டிருக்கிறார். பிறகு உங்க ஹெச் ஆர் என்ன சொல்ல போறாங்க என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கு. நாளைக்கு என்ன நடந்தது என்பதை எங்களிடம் சொல்லுங்க பாக்யா என்று சொல்ல, அதற்கு பாக்கியா கண்டிப்பா சொல்கிறேன் என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications