பாக்யாவை பற்றி தவறாக பேசும் கோபி..அடிக்கப் பாய்ந்த மகன்கள்..ராதிகா கேட்கும் கேள்வி..திடீர் ட்விஸ்ட்
சென்னை: பழனிச்சாமியோடு பாக்கியா பழகுவதை பார்த்து கோபி தப்பாக பேசுகிறார்.
பாக்கியாவின் நடத்தையை பற்றி கோபி பேசியதை கேட்டு செழியன் மற்றும் எழில் இருவரும் கோபியை அடிக்கப் பாய்கின்றனர்.
இத்தனை பிரச்சனைக்கு காரணம் ராதிகா தான் என்று ஈஸ்வரி திட்டுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 12ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் ஈஸ்வரிக்கு எழில் காலை அமுக்கி விட்டுக்கொண்டு இருக்க, நீ எனக்கு பிடிக்காத கல்யாணம் பண்ணுனதை நான் ஒரு நாளும் ஏத்துக்கவே மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, நீங்க என் கூட பேசலாம் வேண்டாம் ஆனா உங்க காலை மட்டும் குடுங்க என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
அப்போது இவ கோவத்துல இருந்தா இந்த உலகம் சுத்துறது நின்னுரும் பாரு என்று ராமமூர்த்தி ஈஸ்வரியை திட்டிக் கொண்டிருக்க, பாக்கியா உங்ககிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன். இன்னைக்கு பழனிச்சாமி சார் வீட்டுக்கு போனேன். அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அவங்களுக்கு உடம்பு விட மனசு தான் பிரச்சனையா இருக்கு என்று சொல்லி கொண்டிருக்கிறார்.
என்னாச்சு என்று ராமமூர்த்தியும், ஈஸ்வரியும் கேட்க பழனிச்சாமிக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதுதான் அவங்க அம்மாவுடைய கவலையாக இருக்கு என்று சொல்ல ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் ஆளாளுக்கு தங்களுக்கு தெரிந்த பொண்ணு இருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அவருக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சிரலாம் என்று பாக்யாவும் பேசிக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் ராதிகா தன்னை ஈஸ்வரி திட்டியதை சொன்னதை கேட்டு கோபம் ஆன கோபி பாக்யாவும் பழனிச்சாமியும் சிரித்து சிரித்து பேசியதை நினைத்து நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். பிறகு வா உனக்காக நான் கேட்கிறேன் உன்னை எப்படி அவங்க திட்டிக்கொண்டே இருக்கலாம் என்று ராதிகா கையை பிடித்து மாடியில் இருந்து கீழே வந்து ஈஸ்வரியிடம் எதுக்காக ராதிகாவை சும்மா சும்மா திட்டுகிறீர்கள் என்று கேட்கிறார்.

ஈஸ்வரி என் வீட்டுல இருந்தா நான் அப்படித்தான் திட்டுவேன். பிடிக்கலன்னா வீட்டை விட்டு போக சொல்லு என்று சொல்ல, பாக்யா பாக்கியானு தலையில தூக்கி வெச்சிட்டு ஆடுறீங்க, அவா எவ்வளவு கீழ்த்தரமான வேலைகளை செஞ்சுட்டு இருக்கான்னு தெரியுமா? ஆனால் அவளை எதுவும் சொல்றது கிடையாது என்று சொல்ல எல்லோரும் கோபப்பட்டு கோபியை திட்டுகின்றனர்.
கிளாசுக்கு போறேன்னு இவ இன்னைக்கு அந்த வளர்ந்த போஸ்ட் மரம் இருக்கான்லா அவன் வீட்டுக்கு போயி சிரிச்சு சிரிச்சு பேசிட்டு வரா, வீட்டில போன் பேசிட்டு இருக்கா, முடியை வெட்டிக்கிட்டு, இப்ப எதற்காக இவ இப்படி அலங்கார பண்ணிக்கிட்டு இருக்கா? எல்லாம் அவன பாக்க போறதுக்காகத்தானா என்று பேச கோபமான எழில் எங்க அம்மாவ பத்தி ஏதாவது பேசினா நடக்கிறதே வேற என்று திட்டுகிறார்.
நீ கோவப்படுற அளவுக்கு உங்க அம்மா ஒன்னும் ஒழுக்கமானவ கிடையாதுடா என்று கோபி பேச வார்த்தைய அளந்து பேசுங்க என்று எழில் எச்சரித்து எங்க அம்மாவ வேவு பாத்துகிட்டு இருக்கீங்களா? என்று கேட்க அவ இந்த வீட்டில ஒரு பொறுப்புல இருக்கா, அவ எங்க போறா, என்ன செய்றான்னு பார்க்க தான் செய்வேன் என்று கோபி சொல்ல, இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினீங்கன்னா நடக்கிறதே வேற என்று பாக்கியா கோபப்பட உனக்கெல்லாம் கோவம் வருதோ என்று கோபி கேட்கிறார்.
பிறகு யோவ் என்னையா என்று எழில் கோபி சட்டையை பிடிக்க அப்போது ஓடிவரும் செழியன் எழில் கையை தட்டி விட்டு கோபி சட்டையை பிடித்து கன்னத்தில் அடிக்க பாய்கிறார். பிறகு இன்னொரு வார்த்தை எங்க அம்மாவ பத்தி தப்பா பேசினீங்க தொலைச்சிடுவேன். எங்க அம்மாவுக்கு கேட்க யாரும் இல்லைனு நீங்க பேசுறீங்களா? என்று மிரட்டுகிறார். எழிலும் மிரட்ட என்ன கூட்டணி சேர்த்து இருக்கீங்களா? என்று பாக்கியாவிடம் கோபி கேட்கிறார்.
தப்பு பண்ணுறவங்ளுக்கு தான் அடுத்தவங்களையும் அப்படியே நினைக்க தோணும். நான் இத்தனை வருஷமா யாருக்கும் எந்த தப்பும் பண்ணல. யாருக்கும் துரோகம் பண்ணல. துரோகிகளை கூட நல்லவங்க என்று நினைச்சு நம்பிட்டு இருந்தேன் என்று கோபமாக பேசிவிட்டு பாக்கியா கிளம்ப, ஈஸ்வரி உங்க அம்மா என்ன திட்டுனாங்க அதனால நீ போய் சண்டை போடுன்னு உன்கிட்ட ராதிகா ஏத்தி விட்டாளா? என்று திட்டுகிறார்.
அதற்கு ராதிகா பாத்தீங்களா கோபி உங்களுக்கு எவ்வளவு மரியாதை என்று அவங்க தப்பு பண்றவங்களுக்கு எல்லாரும் சப்போர்ட் பண்றாங்க. நான் எதுவும் செய்யாமல் என்னை திட்டுறாங்க என்று சொல்ல, ராமமூர்த்தி தேவை இல்லாம பிரச்சனை உண்டு பண்ணி குளிர் காயனும்னு நினைக்க கூடாது. இப்படித்தான் இருக்கிற வீட்ல கீழ்த்தரமா நடந்துப்பீங்களா? என்று திட்ட கோபப்பட்டு ராதிகா கிளம்பி விடுகிறார். பிறகு கோபியும் அதிர்ச்சியில் கிளம்ப மொத்த குடும்பமும் சோகத்தில் இருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகின்றது.












Click it and Unblock the Notifications