இனியா கொடுத்த இன்ப அதிர்ச்சி... ராதிகாவை ஏமாற்றி தனி மரமாய் தவிக்கும் கோபி.. எதிர்பாராத திருப்பங்கள்
சென்னை: இனியா 12thல நல்லா படிக்கிற அஞ்சு ஸ்டூடண்ட் ஸ்பெஷல் கோச்சிங் கிளாசுக்கு தேர்வு செஞ்சுருக்காங்க. அதுல நானும் ஒரு ஆள் என்று குடும்பத்தினருக்கு சந்தோஷமான விஷயத்தை கூறுகிறார்.
இனியாவின் ஸ்கூல் ஃபங்ஷனுக்கு செல்லும் கோபி ராதிகாவை ஏமாற்றுகிறார்.
கூட்டத்தோடு நின்று கோபி சந்தோஷப்படுவதை பார்த்து மொத்த குடும்பமும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 16ஆம் தேதி எபிசோட்டின் ஆரம்பத்தில் கிச்சனில் பாக்கியா, செழியன் மற்றும் எழில் மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் இனியா, பாக்யாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து உங்க எல்லாருக்கும் ஒரு ஹேப்பியான நியூஸ் சொல்லப்போகிறேன் என்று சொல்கிறார்.
மூவரும் ஆர்வத்தோடு என்ன விஷயம் எனக்கேட்க இனியா, எங்க ஸ்கூல்ல 12th ல நல்லா படிக்கிற அஞ்சு ஸ்டூடண்ட் ஸ்பெஷல் கோச்சிங் கிளாசுக்கு தேர்வு செஞ்சுருக்காங்க. அதுல நானும் ஒரு ஆள் இப்பதான் மேடம் போன் பண்ணி சொன்னாங்க என்று சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.
அதைத்தொடர்ந்து, மேலும் நாளைக்கு ஒரு பங்க்ஷன் வச்சிருக்காங்க அதுல செலக்ட் பண்ணிருக்கவங்க நேமை சொல்ல போறாங்க அதுக்காக பேரன்ட்ஸ் ஓட வரணும்னு சொல்லி இருக்காங்க என்று சொல்கின்றனர். பாக்கியா கண்டிப்பா நானும் வரேன் என்று சொல்ல, செழியனும்,எழிலும், நாங்களும் வருகிறோம் என்று சொல்கின்றனர். இவர்கள் சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பதை அங்கு வரும் கோபி மறைந்து இருந்து கேட்டு அவரும் சந்தோஷப்படுகிறார்.
பிறகு இனியா சோபாவில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது வாக்கிங் சென்று விட்டு வரும் கோபி இனியாவிடம் பேசி வாழ்த்து சொல்லி என்ன விஷயம் என்று விசாரிக்க, இனியா பெருசாக ரெஸ்பான்ஸ் எதுவும் பண்ணாமல் கோபிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதைத் தொடர்ந்து அடுத்த நாள் எல்லோரும் ஸ்கூலுக்கு வர இனியா பாக்கியாவை எல்லோரிடமும் அறிமுகம் செய்து வைக்கிறார். இன்னொரு பக்கம் கோபி காரில் வந்து கொண்டிருக்கும் போது இனியாவின் ஸ்கூலுக்கு வந்து கொண்டிருக்கும்போது ராதிகா போன் செய்து மயூவை ரொம்ப மிஸ் பண்றதாகவும் அதனால் அவளோட வெளியே எங்கேயாவது போகலாம் வாங்க என்று கூப்பிட கோபி முக்கியமான ஒரு மீட்டிங் விஷயமா போயிட்டு இருக்கேன் என்று பொய் சொல்கிறார்.
பிறகு ஸ்கூலில் பங்க்ஷன் தொடங்கி ஒவ்வொருத்தர் பெயராக அறிவித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது இனியாவின் பெயரை கூப்பிட்டு மேடையில் ஏற்றுகின்றனர். அப்போது பாக்கியா பின்னாடி நின்று பார்க்கும் கோபி என எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். அதன் பிறகு மேடம் இனியா முதலில் அவரேஜ் ஸ்டுடென்ட்டா தான் இருந்தா, நிறைய குறும்புத்தனம் பண்ணி பேரன்ட்ஸ் எல்லாம் கூட்டிட்டு வர வச்சிருக்கா, ஆனா இப்படி திடீரென்று படிக்க ஆரம்பிச்சு ஸ்டேட் ரேங்க் வாங்குற அளவுக்கு வளர்ந்து இருப்பது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்று பாராட்டுகிறார்.
அதைத் தொடர்ந்து இனியாவிடம் நீ ஏதாவது பேசு என்று மைக் கொடுக்க இனியா என்ன பேசுவது என்று தயக்கத்தோடு யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications