கோபியை அசிங்கப்படுத்தும் பழனிச்சாமி..பாக்யா மீது விழும் பழி கண்கலங்கும் ராதிகா..எதிர்பாராத திருப்பம்
சென்னை: சண்டையிடும் ராதிகாவை வீட்டை விட்டு கோபி வெளியே போக சொல்கிறார்.
பாக்கியா வீட்டுக்கு வந்த பழனிச்சாமி கோபியை யார் என்று தெரியாமல் சேல்ஸ்மேனா என்று அசிங்கப்படுத்துகிறார்.

கோபியின் மனதை மாற்ற ராதிகா அம்மா புது ப்ளான் போடுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 20ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ராதிகா கோபி இடம் நீங்க என்னையும் மயூவையும் கண்டுக்கவே மாட்டிக்கிற என்று சண்டை போட்டுக் கொண்டிருக்க இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகிறது.
அப்போது நீ மயூக்கிட்ட இப்படித்தான் இருக்கணும்னு நான் எந்த விதத்திலும் கண்ட்ரோல் பண்றது கிடையாது. அதே மாதிரி நீ என்னை கண்ட்ரோல் பண்ணாத என் பொண்ணு என்ன கூப்பிட்டாலும் கூப்பிடலானாலும் அவளுக்கு ஒரு நல்ல விஷயம் நடந்தால் நான் போய் நிற்கதான் செய்வேன். அதை வீடியோ எடுப்பேன் ஆயிரம் முறை பார்ப்பேன் அதை பத்தி நீ கேள்வி கேட்கக் கூடாது என்று கோபி கோபமாக திட்டுகிறார்.
மயூக்காகவும் நான் எல்லா நேரத்திலும் வந்து நிற்பேன் என்று சொல்கிறார். ஆனால் ராதிகா தொடர்ந்து சண்டையிட்டு கொண்டிருக்கும்போது, சண்டை போடணும் என்பதற்காகவே சண்டை போடுற உங்ககிட்ட எதையும் பேச முடியாது என்று சொல்ல, நீங்க என்ன வெறுப்பேத்தறதுக்காக தான் இனியா கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுறீங்க. நான் உங்களுக்காக தான் மயூவையே விட்டுட்டு வந்தேன் என்று சொல்ல, உன்னை யாரு விட்டுட்டு வர சொன்னது நீ கிளம்பி போக வேண்டியது தானே என்று கோபி திட்டுகிறார்.
பிறகு கோபி ஆபிஸ் கிளம்பி சென்றதும் பழனிச்சாமி வீட்டிற்கு வர அவரோடு எல்லோரும் சிரித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பழனிச்சாமி இனியாவிற்கு விட்டு கொடுத்துவிட்டு தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு அனைவரையும் கூப்பிடுகிறார். எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது வீட்டிற்கு கோபி வர பழனிச்சாமியை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு பழனிச்சாமி கோபியை பார்த்து யாரோ வந்திருக்காங்க என்று சொல்ல, எல்லோரும் அமைதியாக இருக்க கோபி நேரா மாடிக்கு செல்ல போகிறார். அதை தடுத்து நிறுத்தும் பழனிச்சாமி நீங்க பாட்டுக்கு உள்ள போறீங்க யார் நீங்க? சேல்ஸ்மேன்னா? சோப்பு விற்க்க வந்து இருக்கீங்களா? என்று கேட்க கோபி கடுப்பாகிறார். ஆனாலும் ஒரு வார்த்தையும் பேசாமல் மேலே சென்று விடுகிறார்.
பிறகு ராமமூர்த்தி அது எங்க பையன் தான் என்று சொல்ல பழனிச்சாமி அப்போ நான் போய் மன்னிப்பு கேட்டுட்டு வந்துருவேன் என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் என சொல்லி பாக்யாவை எப்படி கோபிக்கு திருமணம் செய்து வைத்தோம் என்ற கதையை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் மாடிக்கு போன கோபி நான் என்ன சேல்ஸ்மேன் மாதிரியா இருக்கேன் என்று புலம்பி கொண்டிருக்கிறார்.
பாக்கியா தான் அவர் வருவாரு இப்படி அவர கிண்டல் பண்ணு என்று சொல்லி கூட்டிட்டு வந்திருப்பா என்று பாக்யா மீது கோபத்தில் திட்டிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ராதிகா தன்னுடைய அம்மா வீட்டில் வந்து இருக்க, வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்ல அப்போ நீ மயூவை கூட்டிட்டு அங்க போயிடு என்று அவர் சொல்ல, இதை உடனடியா பண்ண முடியாது கொஞ்சம் யோசிக்கணும் என்று கூறிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications