போதையில் கோபி செய்த செயல்.. கேள்வி கேட்கும் அமிர்தா.. கடுப்பான பாக்கியா.. எதிர்பாராத திருப்பம்
சென்னை: ராதிகா அவருடைய அம்மா வீட்டில் தங்கிவிட கோபி மீண்டும் குடிக்க போகிறார்.
குடிபோதையில் இருக்கும் கோபி எழிலுக்கு போன் செய்து தன்னை கூட்டிட்டு போக வர சொல்ல எழில் திட்டி விடுகிறார்.
ஒரு பக்கம் பாக்கியா ராதிகா வீட்டை விட்டு போனதால் நாம் இனி கோபிக்கு மீண்டும் வேலை செய்ய வேண்டுமோ என்று கவலையில் இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 25ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ராதிகாவிடம் அவருடைய அம்மா பாக்யா போல நீயும் நல்லவன் மாதிரி நடிக்கணும் என்று சொல்லிக் கொடுக்க என்னால் அப்படி எல்லாம் முடியாது என்று ராதிகா கூறுகிறார்.
பிறகு இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் இங்கே நிம்மதியா இருந்துட்டு போறேன். அந்த வீட்டில் போய் திரும்பவும் சண்டை போட்டுக்கிட்டு இருக்க முடியாது என்று சொல்லி அங்கேயே தங்கி விடுகிறார். அதே நேரத்தில் பாக்கியா வீட்டிற்கு வரும் செல்வி ராதிகா திரும்பி வராதது சந்தோஷம் இப்பதான் நிம்மதியா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

எழில் அப்படியே இவரும் வீட்டை விட்டு போயிட்டா சந்தோஷம் என்று சொல்லி கொண்டிருக்க அதற்கு செல்வி ஆனால் அம்மா அவரை அனுப்ப மாட்டாங்க, அந்த ராதிகாவை விவாகரத்து பண்ணி வச்சிட்டு திரும்பவும் அக்காவுடன் கல்யாணம் பண்ணி வைப்பாங்க என்று சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதற்கு பாக்யா நானே ராதிகா வீட்டை விட்டு போயிட்டார்களே என்று ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கேன் நீ இப்படி பேசாத என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி ஆகின்றனர்.
நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் நான் இல்ல, ராதிகா இங்க வரலைன்னா அத்தை என்னதான் அவருக்கு சாப்பாடு செஞ்சு கொடு, பிளாக் காபி போட்டு கொடு என்று தொந்தரவு செய்வாங்க. அதெல்லாம் என்னால பண்ணிக்கிட்டு இருக்க முடியாது என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைந்து சிரிக்கின்றனர்.

அதே நேரத்தில் கோபி பாரில் குடித்துக் கொண்டு வீட்டில் நடந்த விஷயங்களை எல்லாம் தன்னுடைய நண்பரிடம் புலம்பி கொண்டிருக்கிறார். பிறகு கார் எடுக்க முடியாமல் குடிபோதையில் தடுமாறியபடி எழிலுக்கு போன் செய்கிறார். அப்போது எழில் ஈஸ்வரியின் காலுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருக்கும்போது என்னால் உங்களுக்கு உதவி செய்ய வர முடியாது என்று போனை வைத்து விடுகிறார்.
ஈஸ்வரி கோபியை போய் கூட்டிட்டு வா என்று எழிலிடம் சொல்ல, நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன். ஆனால் நான் இதை மட்டும் கேட்க மாட்டேன் என்று எழில் எழுந்து போய்விட, பிறகு அமிர்தா நீங்க பாட்டிக்காகவாவது போய் கூட்டிட்டு வரலாம் என்று சொல்ல, கோபி 25 வருஷமா தன்னுடைய அம்மாவை நடத்திய விதத்தையும் தன்னை நடத்திய விதத்தைப் பற்றியும் பீல் பண்ணி பேசி கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications