எழிலால் பதறி ஓடும் கோபி.. குடும்பமே செய்த செயல்.. ராதிகா எடுத்த முடிவு..? எதிர்பார்க்காத மாற்றம்
சென்னை: ராதிகா பெயரை சொன்னதும் கோபி செய்த செயலை பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர்.
குடும்பத்தோடு சேர வேண்டும் என்று கோபி செய்த செயல் அவருக்கு வினையாக மாறி இருக்கிறது.
மொத்த குடும்பத்தின் முன்பும் எழில் கோபியை பாடாய்படுத்தி எடுக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 29ஆம் தேதியிலிருந்து ஜூன் மூன்றாம் தேதி வரைக்கும் ஆனா ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் குடும்ப மொத்தமும் டைனிங் ஹாலில் உட்கார்ந்து பாக்யாவோடு பேசி சிரித்து கொண்டிருக்கின்றனர்.
அப்போது ரூமில் இருந்து கீழே வரும் கோபி மொத்த குடும்பமும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து இது என்னுடைய ஃபேமிலி நானும் ஜாயின் பண்ணவேன் என்று தனக்கு தானே கூறிக்கொண்டு, பாக்யா மற்றும் எழில் இருவருக்கும் நடுவில் இருக்கும் ஒரு சேரில் வந்து உட்கார்ந்து இருக்கிறார்.
அதைப் பார்த்து பாக்கியா கடுப்பாக, அப்போது அருகில் இருக்கும் எழில் கண்ணை காட்டி ஜாடை பேசுகிறார். அதை புரிந்து கொள்ளாத கோபி என்னது என்னது என்று கேட்க, அவங்க வராங்க என்று சொல்ல, எவ அவா என்று கோபி கேட்க, அதான் ராதிகா என்று சொல்ல, என்னது ராதிகாவா என்று கோபி கதறுகிறார்.

அதோடு நான் காபி குடிக்கல, நான் ஒண்ணுமே செய்யல, நான் சும்மாதான் இருக்கேன் என்று பயந்து அலறிக் கொண்டிருப்பதை பார்த்து மொத்த குடும்பமும் சிரித்துக் கொண்டிருக்கிறது. பாக்கியா இவரா இப்படி பேசுவது என்று குழப்பமாக பார்க்கிறார். எழில் வாயில் கை வைத்து சிரிக்கின்றார். மொத்த குடும்பமும் சிரித்துக் கொண்டிருக்க கோபி தான் பல்பு வாங்கியதை உணர்கிறார்.
மொத்த குடும்பமும் கோபியை பார்த்து சிரிப்பதை பார்த்து கோபி என்ன சொல்வது என்று தெரியாமல் அந்த இடத்தை விட்டு நைசாக விலகிப் போகிறார். இத்துடன் இந்த பிரமோ முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் பாக்கிய அருகில் கோபி உட்கார்ந்து இருந்ததை ராதிகா பார்த்திருந்தால் இனி அடுத்து என்ன பிரச்சனையை கிளப்புவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications