ராதிகா செய்த செயல்..வழுக்கி விழுந்த ஜெனி..பாக்யாவுக்கு கிடைத்த அதிர்ச்சி.. எதிர்பாராத திருப்பம்
சென்னை: மாடி படியில் இருந்து ஜெனி வழுக்கி விழுந்து வயிற்றில் அடிபட்டு விடுகிறது.
போன் பேசியபடி வந்த ராதிகா ஜெனியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார்.
ராதிகா பாக்யாவுக்கு போன் செய்து ஜெனி மருத்துவமனையில் இருக்கும் செய்தியை சொல்ல பாக்கியா அதிர்ச்சியாகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் மே 4ஆம்தேதியில் இருந்து 6ஆம் தேதி வரைக்குமான பிரமோ வெளியாகி இருக்கிறது. இதில் போன் பேசியபடியே வந்த ஜெனி கால் தடுமாறி கீழே விழுகிறார். அதில் வயிற்றில் அடிபட்டு வலியில் துடிக்கிறார். அப்போது ரூமில் இருந்து போன் பேசியபடி மாடியில் இருந்து இறங்கும் ராதிகா ஜெனியை பார்த்து ஓடி வருகிறார்.
ஜெனியை மருத்துவமனையில் சேர்க்கும் ராதிகா ஜெனிக்கு ஆறுதல் கூறுகிறார். பிறகு பாக்யாவுக்கு போன் செய்கிறார். பாக்யா இவங்க எதுக்கு நமக்கு போன் பண்றாங்க என்று யோசித்தபடியே போனை எடுக்கிறார். பிறகு நான் சொல்வதை நினைத்து நீங்கள் பயப்படுறாதீங்க என்று கூறியபடி, ஜெனி கீழே விழுந்துட்டா வயிற்றில் அடிபட்டு இருக்கிறது. மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறேன் என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

தற்போது இந்தப் பிரமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இன்றைய எபிசோட்டில் ராதிகா கிச்சனுக்குள் தனியாக இன்டக்சன் அடுப்பு வைத்து சப்பாத்தி செய்து கோபிக்கு கொடுக்க, பிறகு கோபியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது மயூ ஞாபகமாக இருக்கு என்று சொல்லும்போது, நீ வேணா வீட்டை விட்டு வெளியே போ என்று கோபி சொன்னதை கேட்டு ராதிகா கோபப்படுகிறார்.
அதுபோல ராதிகா இங்கே சமைக்க கூடாது என்று எப்போதும் போல ஈஸ்வரி பிரச்சனை செய்ய, நான் எல்லாமே தனியாக பொருள்கள் வாங்கிக் கொண்டுதான் சமைக்கிறேன் என்று ராதிகா ஈஸ்வரிக்கு பதில் கொடுத்து இருக்கிறார் இதனால் ஈஸ்வரியும் கோபத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ஜெனிக்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடிபட்டு இருப்பதால் இதற்கு காரணம் ராதிகா தான் என்று கோபியிடம் ஈஸ்வரி சொல்ல இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கோபி ஈஸ்வரி சொன்னதை நம்ப முடியாமல் தவிக்கிறார். ராதிகாவால் ஜெனியின் உயிருக்கு ஆபத்து என்பதை நம்ப முடியாது என்று சொல்லிவிட கோபத்தில் ஈஸ்வரி இருக்கிறார். இந்த நேரத்தில் ஜெனி தானாகத்தான் கீழே விழுந்தேன் என்று சொல்ல இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்த சீரியலில் இனி ஈஸ்வரி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்றும்? அதே நேரத்தில் ராதிகா என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications