வலியில் அழுத ஜெனிக்கு உதவிய ராதிகா..பழி சுமத்தும் ஈஸ்வரி.. பாக்கியா எடுக்கப்போகும் முடிவு..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீழே விழுந்த ஜெனி அழுது கொண்டு இருக்க ராதிகா மருத்துவமனையில் சேர்க்கிறார்.

பாக்கியாவிற்கு ஃபோன் பண்ணிய ராதிகா ஜெனிக்கு நடந்த விஷயத்தை சொல்லி மருத்துவமனைக்கு வர வைக்கிறார்.

கடைசியில் நீதான் ஜெனியை கொல்ல முயற்சி செய்தியா என ஈஸ்வரி ராதிகாவை கேள்வி கேட்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 May 6th promo and Episode Highlights

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 6ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் செழியன் தன்னுடைய கிளைண்ட் மாலினி இடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது உங்களுடைய மனைவி நல்லா இருக்காங்களா? என்று மாலினி கேட்க அதற்கு நல்லா இருக்காங்க என்று செழியன் பதில் சொல்கிறார்.

பிறகு உங்களுக்கு திருமணம் ஆனது தான் எனக்கு கஷ்டமா இருக்கு என்று சொல்ல, ஏன் என்று செழியன் கேட்க ஆமா இந்த மாதிரி என்ன பேசினாலும் வெகுளியா இருக்கிற மாதிரி ஆண்கள் இப்ப ரொம்ப குறைவு, அவங்களும் கமிட்டேட் ஆயிட்டா நாங்க என்ன பண்ண என்று கூறிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கீழே விழுந்ததில் வயிற்றில் அடிபட்டதால் வலியில் பயத்திலும் ஜெனி அழுது கொண்டே செழியனுக்கு போன் பண்ண முயற்சி செய்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 May 6th promo and Episode Highlights

செழியன் கிளையன்ட் இடம் பேசிக் கொண்டிருப்பதால் போனை சைலண்டில் போட்டுவிட்டு இருக்கிறார். அதனால் செழியனும் போனை எடுக்கவில்லை. அப்போது ராதிகா மாடியில் இருந்து கீழே இறங்கி வர ஜெனி அழுது கொண்டிருப்பதை பார்த்து முதலில் அமைதியாக போய்விட்டு பிறகு என்னாச்சு என கேட்க ஜெனி அழுதபடியே செழியன் போன் எடுக்கவில்லை என்று சொல்ல, அதற்கு எதற்கு அழ வேண்டும் என்று கேட்க, நான் வழுக்கி கீழே விழுந்துட்டேன். பாப்பாக்கு கொடுத்த பால் கீழே கொட்டி இருந்தது அதில் தெரியாமல் வழுக்கி கீழே விழுந்துட்டேன் என்று சொல்கிறார்.

ராதிகா ஜெனியை பயப்படாதே என்று சொன்னபடியே கிளம்பி மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு செல்கிறார். நீ யாருக்கும் போன் பண்ணி பயமுறுத்தாத நாம ஆஸ்பிட்டலுக்கு போயிடலாம் என்று கூறுகிறார். ஹாஸ்பிடலில் ஜெனியை செக் பண்ணுனா டாக்டர் அவருக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. பயத்தில்தான் வலி வந்திருக்கிறது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும் என்று சொல்கின்றனர்.

Baakiyalakshmi Serial 2023 May 6th promo and Episode Highlights

பிறகு ராதிகா பாக்யாவுக்கு போன் செய்து ஜெனிக்கு அடிபட்டதை கூறுகிறார். மருத்துவமனையில் ராதிகா பில் கட்டிவிட்டு டாக்டரிடம் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்க, அவங்க நார்மலாக இருக்கிறார் என்று சொன்னதும், ராதிகா நிம்மதி அடைகிறார் .பிறகு அவங்கள பார்க்கலாமா என்று ராதிகா கேட்க அதற்கு டாக்டர் பார்க்கலாம் என்று சொன்னதும் நான் ரொம்பவே பயந்துவிட்டேன் என்று ராதிகா ஜெனியிடம் கூறுகிறார்.

அதற்கு ஜெனியும் ரொம்பவே தேங்ஸ் நீங்க இல்லன்னா நானும் பாப்பாவும் என்ன ஆகிருப்போம்னு தெரியல என்று கூறுகிறார். பிறகு ஹாஸ்பிடலுக்கு ஓடிவரும் பாக்கியாவும், செழியனும் ஜெனி எங்க இருக்கா, இப்ப எப்படி இருக்கு என்று கேட்க அவர்களை ராதிகா கூட்டிக்கொண்டு விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 May 6th promo and Episode Highlights

அடுத்து கீழே விழுந்த உடனே உனக்கு தான் போன் பண்ணுனேன் செழியா, நீ தான் போன் எடுக்கல என்று அடுத்தபடியா சொல்ல செழியன் அழுதபடியே சாரி நான் கிளையன்ட் மீட்டிங்கில் இருந்தேன் என்று கூறி, பிறகு ஜெனியை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகின்றனர். வீட்டில் ஈஸ்வரி பதட்டத்தோடு காத்திருக்கிறார்.

பிறகு ஹாலில் எல்லோரிடமும் ஜெனி உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்க செழியன் ஜெனியை ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மாடிக்கு கூட்டிக்கொண்டு போகிறார். அப்போது ராதிகா வந்து இப்போ ஜெனிக்கு எப்படி இருக்கிறது என்று கேட்க, அமிர்தா அவங்க வந்துட்டாங்க மேல தான் இருக்காங்க என்று சொல்ல, அப்போ நீ தான் அவளை தள்ளி விட்டாயா? என்று ஈஸ்வரி ராதிகாவை கேட்க ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+