குடும்பத்தோடு சேர்ந்த கோபி..ராதிகாவை ஏத்திவிடும் அம்மா.. நன்றி சொல்லும் பாக்யா..பரபரப்பான தருணம்
சென்னை: ராதிகா ஜெனிக்கு உதவி செய்ததற்காக பாக்கியா நன்றி கூறுகிறார்.
அதை பார்த்த ஈஸ்வரி கடுப்பாகி பாக்கியாவையும், ராதிகாவையும் திட்டுகிறார்.
கோபி மீது கோபத்தில் இருக்கும் ராதிகாவை மேலும் அவருடைய அம்மா ஏத்தி விடுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே ஒன்பதாம் தேதிக்கான எபிசொட்டின் ஆரம்பத்தில் ராதிகா தன்னுடைய அம்மாவிடம் ஈஸ்வரி பேசியதை பற்றி சொல்ல அவர் அதற்கு சரி விடு எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும், அந்த ஈஸ்வரி அம்மாவே நீதான் என்னுடைய மருமகள் என்று கண்டிப்பாக சீக்கிரமாக சொல்லுவாங்க என்று ஆறுதல் கூறுகிறார்.
அதான் உனக்கு ஆறுதலா கோபி இருக்காரு இல்ல என்று சொல்ல, அது அவரை பத்தி பேசாத அவரும் வந்து நீ ஏன் இப்படி பண்ணனு என்கிட்ட கேட்டாரு என சொல்ல, அவர் மட்டும் என்ன பண்ணுவாரு அப்பா, அம்மா, நீ அவருடைய பிள்ளைங்க முன்னாள் மனைவி எல்லோரும் அந்த வீட்டில் இருக்காங்க அவரும் எல்லாரையும் சமாளிச்சு நடக்கணும் இல்ல என்று சொல்லி ராதிகாவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

அதே நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் நிலா பாப்பாவோடு ஹாலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே வரும் கோபி எல்லோரும் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து நானும் உட்காரவா என்று கேட்டு பிறகு நிலா பாப்பாவோடு சேர்ந்து விளையாடுகிறார். அப்போ வீட்டிற்கு வரும் ராதிகா இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
கோபி ராதிகா வந்ததை கவனிக்காமல் நிலா பாப்பாவோடு விளையாடிக் கொண்டு இருக்க, ராதிகா கடுப்பாகி ரூமுக்கு சென்று விடுகிறார். பிறகு ரூமுக்கு வந்த கோபி நீ எப்ப வந்த என்று ராதிகாவிடம் கேட்க, நீங்க தான் உங்க குடும்பத்தோட சந்தோசமா இருந்தீங்களே என்று சொல்ல, கோபி நான் சந்தோசமா இருந்தேனா என கோபி கேட்க நடிக்காதீங்க என்று கோபப்படுகிறார்.

பிறகு காலையில் நடந்த விஷயங்களுக்காக கோபி மன்னிப்பு கேட்கிறார். இருந்தாலும் ராதிகா கோபம் குறையாமல் கோபியை திட்டுகிறார். நான் எல்லாத்தையும் விட்டுட்டு வந்து இருக்கேன். ஆனா நீங்க என்ன புரிஞ்சுக்கல நான் கல்யாணம் வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் கேட்காம நீங்கதான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க, இப்போ நான் நிம்மதி இல்லாம இருக்கேன் என்று புலம்புவதை மாடியில் இருந்து இறங்கும் பாக்கியா கேட்டு விடுகிறார்.
பிறகு ராதிகா கிச்சனில் இருக்கும்போது அங்கு வரும் பாக்யா ஜெனிக்கு செய்த உதவிக்காக நன்றி கூறுகிறார். முன்னெல்லாம் உங்கள பார்க்கும்போது அவ்வளவு பாசிட்டிவா இருக்கும். ராதிகா மாதிரி தான் நீ வரணும்னு நான் நிறைய முறை இனியாகிட்ட சொல்லி இருக்கேன். ஆனா இன்னைக்கு இப்படி உங்கள பாக்கவே என்னால முடியல. நீங்க எல்லாத்தையும் இழந்துட்டு இருக்கிற மாதிரி இதுக்கு என்று சொல்லி ராதிகாவுக்கு காபி போட காபித்தூள் மற்றும் சர்க்கரை எடுத்துக் கொடுக்கிறார்.
அப்போது ஈஸ்வரி எதுக்கு கிச்சனுக்கு வந்தா என்று ராதிகாவை திட்ட, அதற்கு பாக்கியா சப்போர்ட்டுக்கு வர ஈஸ்வரி பாக்யாவையும் சேர்த்து திட்டுகிறார். உன்கிட்ட அனுமதி கேட்டுவிட்டு தான் நான் திட்டணுமா என்று திட்டிவிட்டு ரூமுக்கு செல்கிறார்.

அடுத்ததாக எழிலும் அமிர்தாவும் இருவரும் கிச்சனில் ரொமான்ஸாக பேசிக்கொண்டு ஒருவருக்கொருவர் தோசையை ஊட்டிக் கொண்டிருக்க, அப்போது கீழே வரும் கோபி இதை பார்த்த சந்தோஷப்படுகிறார். பிறகு ராதிகா கிச்சனுக்கு செல்ல கீழே இறங்கி வர, கோபி அவரை தடுத்து இப்போ போக வேண்டாம் என சொல்ல, இங்கே எல்லோரும் சந்தோஷமாகத்தான் இருக்கீங்க. நான்தான் சந்தோசமாக இல்லாமல் இருக்கேன் என்று அதிகமாக கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பிளான் கேட்டு அதிர்ச்சியில் விஜயா.. இனியாவது திருந்துவாரா? மனோஜ்க்கு அசிங்கம் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications