பூமர் மாமியாருக்கு செம பதிலடி கொடுத்த பாக்கியா.. ராதிகாவின் எதிர்பாரா செயல்.. காலில் விழுந்த செழியன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 11ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ஈஸ்வரி செழியனுக்கு சப்போர்ட்டாக பேசி ஜெனியை போய் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்று சொல்ல அதற்கு பாக்கியா மறுத்து விடுகிறார்.

அதைத்தொடர்ந்து செழியன் பாக்யாவின் காலில் விழுந்து கதறி அழுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஜெனியின் அம்மாவிற்கு பாக்கியா போன் போட்டு பேச அப்போது உங்களுக்கு என்ன நிலைமை ஏற்பட்டதோ அதே நிலைமைதான் இன்னைக்கு ஜெனிக்கும் உருவாகி இருக்கு. உங்கள நம்பி தான் அவளை நான் அந்த வீட்டுக்கு அனுப்பி வச்சேன்.
ஆனா நீங்களே உங்க பையனுக்கு துணை போயி ஜெனிக்கு துரோகம் பண்ணிட்டீங்க. அதனால இனிமே நீங்க யாருமே போன் பண்ணி தொந்தரவு பண்ணாதீங்க. அடுத்து நாங்க என்ன பண்ணணுமோ அதை பண்ணிக்கிறோம் என்று ஜெனியின் அம்மா போனை வைக்கிறார்.

அடுத்ததாக ஈஸ்வரி செழியனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க அப்போது ராதிகா ரூமை விட்டு வெளியே வருகிறார். அப்போது ராதிகாவிடம் நீ எதுக்கு வெளியே வந்த என்று ஈஸ்வரி கோபப்பட, அதற்கு நான் ரூமுக்குள்ளே இருப்பேன்னு அக்ரீமெண்ட் எழுதி ஒன்னும் சைன் போடலையே என்று பதிலடி கொடுக்கிறார். அப்போது கோபி செழியனை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வர, அதை பார்த்ததும் ஈஸ்வரி செழியனிடம் நீ எதுக்குடா அந்த வீட்டுக்கு போன, செய்யக்கூடாத தப்புதான் நீ செஞ்சிருக்க.
அதுக்காக இங்க பட்ட அவமானம் எல்லாம் போதாதா? அங்க போய் நீ அவமானப்படணுமா என்று ஜெனியை பற்றி பேச, அதற்கு ராதிகா கோபப்பட்டு பேச வருகிறார். அப்போது கோபி கையெடுத்து கும்பிட்டு பேசாத என்று சைகை காட்டுகிறார். அதைத் தொடர்ந்து பாக்கியா கிச்சனில் சோகமாக அமர்ந்திருக்க அங்கு வரும் ராதிகா டீ போட்டு பாக்கியாவின் பக்கத்தில் வைத்துவிட்டு அவரும் அங்கேயே அமர்ந்து உட்கார்ந்து இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து அங்கு வரும் செழியன் பாக்யா காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, பாக்கியா இந்த உலகத்திலேயே யாரையும் வெறுக்காத அளவிற்கு உன்னை வெறுக்கிறேன் போடா என்று திட்டி அனுப்புகிறார். இதைத் தொடர்ந்து ஈஸ்வரி பாக்யாவை ஜெனி வீட்டிற்கு போய் பார்த்து பேச போறோம் வா என்று கூப்பிட அதற்கு பாக்கிய நான் வரமாட்டேன் என்று சொல்கிறார்.
அதற்கு ஈஸ்வரி, நீ சொன்னா ஜெனி கேட்பா. அவ எதுக்கு அவங்க அம்மா வீட்டுக்கு போனா? கோபப்பட்டா கூட இந்த வீட்டில் இருந்து கோவப்படட்டும். நீ என் கூட வந்து தான் ஆகணும். நாம போய் பேசி அவளை கூட்டிட்டு வரலாம் என்று ஈஸ்வரி சொல்ல, அதற்கு ராமமூர்த்தி இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லி புரிய வைக்கிறார்.
ஆனாலும் ஈஸ்வரி அப்படி விட முடியாது என்று கூறுகிறார். ஆனால் பாக்கியா நான் வரமாட்டேன் அத்தை, நீங்க என்னை எப்படி இந்த மாதிரி சூழ்நிலையில் வீட்டில் இருக்க வச்சிங்களோ, அதுபோல நான் ஜெனியை இந்த வீட்டில் இருக்க வைப்பேன்னு நினைக்காதீங்க. அதுக்கு நான் விடமாட்டேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications