அமிர்தா, நிலா புகைப்படத்தை பார்த்த கணேசன்.. கோபிக்கு கிடைத்த அதிர்ச்சி.. கேள்வி கேட்ட இனியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 13ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேசன் அமிர்தா மற்றும் நிலா இருக்கும் புகைப்படத்தை பார்த்து பெற்றோரிடம் கேள்வி கேட்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 13th episode full update

அதே நேரத்தில் ஈஸ்வரிக்கு போன் செய்த கோபிக்கு அவமானம் கிடைக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டை ஆரம்பத்தில் பாக்கியா தன்னுடைய பர்ஸை காணவில்லை என்று தேடிக் கொண்டிருக்க, அவரோடு சேர்ந்து எல்லோரும் தேடுகின்றனர். அப்போது என்னுடைய பர்ஸில் இருந்த பணம் போனா கூட பிரச்சனை இல்லை. ஆனால் அந்த பர்ஸ் நீங்க வாங்கி கொடுத்தது என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி சரி கவலைப்படாத அதுபோல வேற பர்ஸ் வாங்கி தருகிறேன் என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 13th episode full update

அதைத் தொடர்ந்து கணேசன் அப்பா அம்மாவிடம் எப்படியாவது அமிர்தாவை பார்க்க கூட்டிட்டு போங்க என்று சொல்லிக் கொண்டிருக்க அவர்கள் சென்னையில் அமிர்தா எங்கு இருந்தாலும் போய் கூட்டிட்டு வருவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவர் தன்னுடைய அப்பாவின் போனை எடுத்து பார்க்க அவர்கள் நிலாவை தூக்கி வைத்திருக்கும் போட்டோவை பார்த்து இது யார் குழந்தை என்று கணேசன் கேட்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 13th episode full update

முதல் கணவரை சந்தித்த அமிர்தா.. எழில் சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் பாக்யா.. பரபரப்பின் உச்சம்
அதற்கு கணேசன் அப்பா சமாளிக்கிறார் ஆனாலும் சந்தேகம் அடையும் கணேசன் மற்ற போட்டோக்களையும் பார்க்க அப்போது அமிர்தா நிலவை தூக்கி வைத்திருக்கும் போட்டோவை பார்த்து விடுகிறார். அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து உண்மையை சொல்லுங்க என்று கதறி அழுது கொண்டு இருக்க, அப்போது அவருடைய அம்மா இது உன்னுடைய குழந்தை தான் என்று சொல்ல கணேசன் அழுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 13th episode full update

அதற்கு நான் போயிட்டேன் என்று தானே என் குழந்தையும் பொண்டாட்டியும் பார்க்க முடியாமல் நீங்க அனுப்பி வச்சீங்களா? என்று கேள்வி கேட்க, அதற்கு கணேசனின் அம்மாவும் அப்பாவும் சமாதானப்படுத்துகின்றனர். அதைத்தொடர்ந்து மலை கிராமத்தில் இனியா கிராமவாசிகளிடம் கேள்விகள் பல கேட்டுக் கொண்டிருக்க அதை பார்த்து ஈஸ்வரியும் பாக்கியாவும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Baakiyalakshmi Serial 2023 September 13th episode full update

அந்த நேரத்தில் கோபி ஈஸ்வரிக்கு போன் செய்து நலம் விசாரிக்க, ஈஸ்வரி எங்கு எந்த பிரச்சனையும் இல்ல. பிரச்சனை வந்தாலும் கவலை இல்லை. அதான் பாக்கியா இருக்காளே என்று சொல்லி எந்த பிரச்சனை வந்தாலும் அதை அவா சமாளிச்சுருவா என்று சொல்ல, அதைக் கேட்டு கடுப்பான கோபி சிக்னல் இல்லாதது போல நடித்து போனை கட் செய்து விடுகிறார். பிறகு எல்லோரும் சாப்பிட போகின்றனர். அப்போது பாக்யா ஆர்டர் செய்வதை பார்த்து ஈஸ்வரி ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+