பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் வரும் அதே கதை.. இதை கவனிச்சீங்களா? நடுத்தெருவில் கோபி!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 20ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் நடுத்தெருவில் வைத்து கோபி கேட்ட கேள்விகளுக்கு பாக்கியா அவருக்கு முகத்தடி கொடுத்திருக்கிறார்.

அதே நேரத்தில் பாக்கியாவை தன்னுடைய குடும்பத்திடம் இருந்து பிரிப்பேன் என்று மீண்டும் கோபி சவால் விடுகிறார். இது குறித்து விரிவாக பார்ப்போம்.
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா தன்னை வீட்டை விட்டு துரத்தி விட்ட பிறகு அவர் மீது கோபத்தில் கோபி இருக்கிறார். தான் செய்த தவறுகளும் துரோகங்களும் அவருக்கு பெரியதாக தெரியவில்லை. தனக்கு பிடித்த ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியே வந்த கோபி பாக்யாவிடம், நீ தானே என்னுடைய வீட்டில் இருந்து என்னை விரட்டி விட்டாய் என்று அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் இனியா ட்ரிப்புக்கு போக வேண்டும் என்று கூப்பிடும் போது முதலில் சரி என்று சொன்ன கோபி பிறகு மயூ பங்க்ஷன் இருந்ததால் ராதிகா போக கூடாது என்று மிரட்டியதால் போகாமல் வீட்டிலேயே இருந்து விட்டார். ஆனால் இனியா கஷ்டப்படக்கூடாது என்று இனியாவை ட்ரிப்புக்கு கூட்டிட்டு போன பாக்யாவை அடிக்கடி போன் செய்து திட்டிக் கொண்டே இருந்தார். இது சீரியல் ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியது.
என்னதான் சீரியலாக இருந்தாலும் இப்படியா லாஜிக்கே இல்லாமல் கதையை கொண்டு போய் இருப்பார்கள். ஒருவரை திட்ட வேண்டும் என்றால் அதற்கு சரியான காரணம் இருந்தாலும் பரவாயில்லை இப்படி எதுக்கெடுத்தாலும் திட்டிக்கொண்டே இருக்கிறார் என்று பலர் கோபியை திட்டிக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் பாக்யா இக்கட்டான சூழலில் இருக்கும் போது அவருடைய வீட்டில் யாருக்கும் தெரியாமல் சென்று பாக்கியாவின் லைசென்ஸை திருடி அதை உடைத்துப் போட்ட கோபி முழு வில்லனாக மாறி இருந்தார். ஆனால் கடைசியில் அந்த பிளானும் புஷ் என்று போய்விட்டது.
இந்த நிலையில் தற்போது வெளியான புரோமோவில் பாக்கியா வழக்கம்போல தெருவில் வாக்கிங் போய்விட்டு வருகிறார். அப்போது கோபி, நான் ஆசை ஆசையா வாங்கி கட்டிய வீடு அந்த ஆசை கனவு எல்லாத்தையும் விட்டு என்ன வீட்டை விட்டு துரத்திட்டு இப்போ என் குடும்பத்தையும் என்கிட்ட இருந்து பிரிச்சிட்ட இல்ல, என்று கேட்க அதற்கு பாக்கியா கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க என்று சொல்கிறார்.

அதற்கு கோபி உனக்கு எவ்வளவு ஆசை இருக்கோ அது வரைக்கும் பேசு, ஆனா கூடிய சீக்கிரம் கஷ்டப்படுவ வருத்தப்படுவ என்று கோபத்தின் உச்சத்தில் பேச, அதற்கு பாக்கியா "நம்பிக்கை துரோகம் செஞ்சவங்க, அடுத்தவங்களை ஏமாத்துனவங்க, கேவலமா வீடு புகுந்து லைசென்ஸ் திருடுனவங்க எல்லாம் சந்தோசமா இருக்கும்போது நான் ஏன் சார் கஷ்டப்பட போறேன். நான் சந்தோஷமா தான் இருக்க போறேன். அதை நீங்க பார்க்க தான் போறீங்க" என்று சவால் விட்டு கிளம்புகிறார்.
ஏற்கனவே இதுபோன்று பல சவால் காட்சிகள் நடுத்தெருவில் வைத்து வந்துவிட்டது. அதே கதை இப்போது மீண்டும் தொடர்ந்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு சலிப்பு தட்டி இருப்பதாக இந்த ப்ரோமோவிற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இப்பவாவது கோபிக்கு பாக்கியா ஒரு அறை விட்டு இருந்தால் சூப்பராக இருக்கும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications