பாக்கியலட்சுமி சீரியலில் எழிலுக்கு கிடைத்த அதிர்ச்சி.. பதறிப்போன கோபி..கோபத்தில் ஈஸ்வரி கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 6ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
இதில் ட்ரிப்புக்கு போன பாக்கியா தங்குவதற்கு ரூம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து ஈஸ்வரி கோபம் ஆகிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யா ரூம் தேடிக் கொண்டு கார் ஓட்டிக்கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு ஒரு ஹோட்டலை பார்த்ததும் அங்கு போய் ரூம் கேப்போமா? என்று அங்கு போய்க் கொண்டிருக்கின்றனர். காரில் இருந்து இவர்கள் நடந்து போகும் வழி எல்லாம் ஆண்கள் நின்று பேசி கொண்டிருப்பதை பார்த்து எல்லோருமே பயந்து போகின்றனர்.
பிறகு ஒரு வழியாக ரூம் கிடைக்கிறது. அனைவரும் ரூமில் இருக்கும்போது எழில் போன் பண்ணுகிறார். பாக்கியாவிடம் நீங்கள் ரூமில் செட்டில் ஆகியாச்சா என்று கேட்க, நீ புக் பண்ண ரூம் இல்லை என்று சொல்லிட்டாங்க என்று சொல்ல, அதைக்கேட்ட அதிர்ச்சியான எழில் அது எப்படி புக் பண்ண ரூம் தராமல் இருப்பாங்க இரு நான் போன் பண்ணி கேட்கிறேன் என்று சொல்ல, அதற்கு பாக்கியா வேண்டாம் நாங்க வேற ரூமுக்கு வந்து விட்டோம் என்று சொல்கிறார்.
பிறகு ரூமிற்குள் வந்ததும் ரூமை பார்த்த ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார். அந்த நேரத்தில் கதவு தட்டப்படுகிறது.. யாரென்று திறந்து பார்க்க அங்கு போலீஸ் நிற்கிறது. அதை பார்த்ததும் எல்லோரும் பயப்பட, பிறகு போலீஸிடம் பாக்கியா தாங்கள் வந்திருக்கும் விஷயத்தை பற்றி சொல்ல அவர்கள் ஐடி ப்ரூப் பார்த்துவிட்டு கிளம்பி போகின்றனர் அதை பார்த்ததும் ஈஸ்வரி நாம ஏதும் தப்பான இடத்திற்கு வந்து விட்டோமா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்.
அதற்கு அப்படி எல்லாம் இல்ல அத்தை நீங்க நிம்மதியா தூங்குங்க என்று ஈஸ்வரியும் செல்வியும் ஒரு அறையில் தங்க வைத்துவிட்டு பாக்கியாவும் இனியாவும் இன்னொரு அறையில் தூங்குகின்றனர். அந்த நேரத்தில் கோபி ஈஸ்வரிக்கு போன் பண்ணுகிறார். ஈஸ்வரி நடந்ததை எல்லாம் சொல்ல, கோபி பயந்து போய் கத்த பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த ராதிகா தூக்கத்திலிருந்து எழுந்து விடுகிறார்.

கோபி அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபமான ராதிகா கோபியை கிள்ளி வைத்துவிட்டு அப்படியே நீங்களும் கிளம்பி போக வேண்டியது தானே எதுக்கு இங்கு இருந்து போன் பண்ணி எங்க உயிரை எடுக்கறீங்க என்று திட்டுகிறார். அதே நேரத்தில் பாக்யாவும் இனியாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications