பாக்கியலட்சுமியில் செம ட்விஸ்ட்.. ராதிகா கொடுத்த கம்ப்ளைன்ட்.. ஜெயிலுக்கு போகும் ஈஸ்வரி.. மாட்டிய கோபி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இனி வரும் எபிசோடில் ராதிகா ஈஸ்வரி மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பதால் ஈஸ்வரியின் குடும்பத்தினர் மொத்தமாக ஸ்டேஷனுக்கு வர இருக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் கர்ப்பம் கலைந்ததற்கு காரணம் ஈஸ்வரி தான் என்று ராதிகாவும் அவருடைய அம்மா கமலாவும் சொன்னதை கேட்டு கோபியும் ஈஸ்வரி மீது கோபப்பட்டு வீட்டை விட்டு துரத்தி இருக்கிறார். அதனால் ஈஸ்வரி மீண்டும் பாக்யா வீட்டிற்க்கே வந்திருக்கிறார்.

பாக்கியா வீட்டிற்கு வந்த நாளிலிருந்து கோபி என்னை கொலைகாரி என்று சொல்லிவிட்டான் என்று மீண்டும் மீண்டும் ஈஸ்வரி புலம்பிக்கொண்டே இருக்கிறார். இதனால் பாக்கியா ஈஸ்வரியை திருவண்ணாமலை கோவிலுக்கு கூட்டிட்டு போகலாம் என்று ராமமூர்த்தி இடம் சொல்லி இருக்கிறார். முதலில் ராமமூர்த்தி வேண்டாம் என்று சொன்னாலும் பிறகு சரி என்று அவரும் சம்மதித்து ஈஸ்வரியின் மனதை மாற்றி கோயிலுக்கு கூட்டிட்டு போகின்றனர்.

அதுபோல கோபி வாக்கிங் வந்த இடத்தில் ராமமூர்த்தி கோபியை அதிகமாக திட்டி இருக்கிறார். நாங்க யாருமே வேண்டாம் என்று உன்னை நம்பி உன் வீட்டுக்கு வந்ததற்காக ஈஸ்வரிக்கு நீ நல்ல பாடம் கற்றுக் கொடுத்துட்டே, அவ மேல கொலைப்பழி போட்டு அனுப்பி இருக்க, உனக்காக எப்பவும் நீ பண்ணுன தப்பு எல்லாம் மறந்து உன் பக்கத்தில் நின்னதற்கு நீ அவள்மீது கொலை பழி போட்டு அனுப்பி இருக்கிற என்று திட்டி இருந்தார்.

பிறகு கோபி அதையே நினைத்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கோபி மீது ராதிகா அதிகமான கோபத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ராதிகா கையில் பைலை எடுத்துக்கொண்டு மயூ மற்றும் கமலாவை கூட்டிக்கொண்டு வெளியே போகிறார். கோபி எங்கே போகிறா என்று கேட்டதற்கு கூட ராதிகா சொல்லாமல் போகிறார். இப்படியாக எபிசோடில் இருக்கும் நிலையில் அடுத்து ராதிகாவும் அவருடைய அம்மா கமலாவும் ஈஸ்வரி மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.

ஏற்கனவே சில தினங்களாக சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை கோபியாக நடிக்கும் சதீஷ் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதுபோல ராதிகாவும் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கோர்ட்டின் வாசலில் இருப்பது போன்று புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் பாக்யாவின் மொத்த குடும்பமும் அங்கே இருக்கின்றனர்.

இதனால் ராதிகா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க அதற்கு பாக்யாவின் மொத்த குடும்பமும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரப்போகிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் கோபி மட்டும் கோர்ட்டில் தனியாக கூண்டுக்குள் நிற்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+