பாக்கியலட்சுமியில் சாகறதுக்கு முன்னாடி நடந்தது இதுதான்! 2 நாள் இதை கவனிச்சீங்களா? ரோசரி எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் ரோசரி நடித்து வந்தார். இவருடைய கேரக்டர் இப்போது இறந்து போவது போன்று முடித்திருக்கிறார்கள். இது குறித்து ரோசரி பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் ராமமூர்த்தியின் இறப்பு காட்சி வருவதற்கு முன்பே இரண்டு நாள் நடந்தது இதுதான் என்று அவர் சில விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
சின்னத்திரையில் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சியில் மட்டுமல்லாமல் இணையத்திலும் எப்போதும் சீரியல் பார்த்துவிடலாம் என்பதால் பல ரசிகர்கள் சீரியல் விரும்பிகளாக மாறி வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் சீரியல் பிடிக்கிறதோ இல்லையோ அதை கலாய்ப்பதற்காகவே அதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இப்போது ஒட்டுமொத்த ரசிகர்களையும் பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தியின் மரணம் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ராமமூர்த்தியின் மரணம் வந்திருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் நான்கரை வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதில் ஆரம்பத்திலிருந்து ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் ரோசரி நடித்து வருகிறார். இவர் நடிக்கிறார் என்று சொல்வதை விடவும் அந்த கேரக்டராகவே வாழ்ந்து விட்டார்.
பாக்கியாவிற்கு ஆரம்பத்தில் இருந்து இவர் தான் உறுதுணையாக இருக்கிறார். ஒரு மாமனாராக இல்லாமல் அப்பா ஸ்தானத்தில் பாக்கியாவிற்க்கு இவர் சப்போர்ட் செய்யும் விதம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டு வாங்க வைத்து விடுகிறது. இப்போது ராமமூர்த்தி இறந்து போய் விட்டார். இரண்டு நாட்களாக சீரியலில் ஒரே அழுகாச்சி காவியம் தான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வாரம் முழுக்க ராமமூர்த்தியின் இறுதி அத்தியாயம் தான் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ராமமூர்த்தியாக நடித்த ரோசரி இந்த காட்சிகள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் முதலில் எனக்கு என்னுடைய கேரக்டரை முடிக்க போகிறார்கள் என்று தெரியாது. திடீரென்று தான் ராமமூர்த்தி இறந்து போகப் போகிறார் என்று சொன்னார்கள். எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. ஆனால் கதைக்காக எது சரியோ அதை தானே செய்ய முடியும் என்று நானும் சரி என்று சொல்லிவிட்டேன்.
இந்த சீரியலுக்கு பிரியா தம்பி தான் வசனங்கள் எழுதி வருகிறார். அவர் திறமையை நான் பாராட்டியே ஆக வேண்டும். ராமமூர்த்தியை இறப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்னாடியே அவர் மக்கள் மனதில் பதிகிறது மாதிரி செண்டிமெண்டாக பேசும் வார்த்தைகள் வைத்திருக்கிறார். பொதுவாக மூணு மணி நேரம் ஒளிபரப்பாகும் படத்தையே அவ்வளவு விமர்சிப்பார்கள். ஆனால் இந்த சீரியல் நான்கரை வருடங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அதற்கு எவ்வளவு விமர்சனங்கள் வரும்... ஆனால் அதையும் தாண்டி பிரியா தம்பி தன்னுடைய வசனங்களால் நேர்த்தியாக கொண்டு போய் இருக்கிறார். இரண்டு நாளைக்கு முன்னாடி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பாக்யாவிடம் நான் உனக்கு அப்பாவா வேற ஒரு நல்ல பையனை பார்த்து கல்யாணம் செஞ்சு வைத்திருக்க வேண்டும்... நான் தப்பு பண்ணிட்டேன்! என்னை மன்னிச்சிரு பாக்கியா என்று கேட்டது,
பிறகு உன்னுடைய வாழ்க்கையை நீ அடுத்தவர்களுக்காக விட்டுக் கொடுத்தே இருந்திடாத. நீ உன்னுடைய வாழ்க்கையை கொஞ்சம் வாழு.... எப்போதுமே உனக்கு உறுதுணையா நான் இருப்பேன். நான் இல்லன்னு நீ எந்த இடத்திலும் ஃபீல் பண்ணாத. நான் எப்போதும் உன் கூட தான் இருப்பேன் என்று பல விஷயங்கள் பேசி இருப்பேன். அதெல்லாம் பிரியா தம்பி எழுதியது தான்.
அது போல ஈஸ்வரியிடம் நான் செத்தா கூட கோபி எனக்கு கொள்ளி வைக்க கூடாது என்று அழுத்தமாக சொல்லி இருப்பேன். இதை எல்லாம் பார்க்கும் ரசிகர்களுக்கும் ஒருவிதமான வருத்தத்தை கொடுத்து இருக்கும் என்று எனக்கு புரிகிறது. ஆனால் இத்தனை வருடங்களாக இந்த சீரியலில் நடித்துவிட்டு இப்போது சீரியலில் நான் இல்லை என்பது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் சீரியல் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. இந்த திருப்பம் தான் முக்கியம் என்று சொன்னதால் நான் சரி என்று சொல்லிவிட்டேன் என்று அந்த பேட்டியில் நடிகர் ரோசரி பேசியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications