பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வீட்டில் திடீர் கொண்டாட்டம்..நெகழ்ச்சியோடு பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மாலினி கேரக்டரில் நடிகை ரேமா அசோக் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் நிலையில் அப்போது தன்னுடைய அண்ணன் தனக்கு கொடுத்த பரிசு குறித்து நெகிழ்ச்சியோடு ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். இது இணையத்தில் பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
நடிகை ரேமா அசோக் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி, காதல் முதல் கல்யாணம் வரை மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார் புறம் போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இப்போது சமீபத்தில் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மாலினி கேரக்டரில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார். செழியனை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இவருடைய காட்சிகள் அதிகமாக சீரியலில் இல்லை.

ஆனாலும் இவர் சீரியல் நடிகையாக மட்டுமல்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடி பலருக்கும் பரீட்சையமாக இருக்கும் ரேமா தொழில் முனைவராகவும்
இருக்கிறார். ரேமா சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அப்போது அவருடைய நெருங்கிய உறவினர்கள் மட்டும் அந்த ஃபங்ஷனில் கலந்து கொண்டிருக்கின்றனர். அவருடைய அம்மா மற்றும் அண்ணன் அந்த ஃபங்ஷனில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
ரேமாவின் அண்ணன் ரேமாவிற்கு ஒரு மோதிரத்தை பரிசு கொடுத்து இருக்கிறார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து அதற்கு ஒரு நீண்ட கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். அதில், என்னுடைய அன்பான சகோதரனே உங்களுக்கு என்னுடைய நன்றியை ஆழத்தை வெளிப்படுத்த சொல்ல முயல்வதற்கு வார்த்தைகள் குறைவது போல தோன்றுகிறது. நீங்கள் ஒரு மூத்த சகோதரராக மட்டும் இல்லை ஒரு நங்கூரம் போலவும், கலங்கரை விளக்கத்தைப் போலவும் நீங்கள் தரும் ஆதரவு அன்பினால் அசைக்க முடியாமல் அளவிற்கு நீங்கள் என்னோடு நிற்கிறீர்கள்.

என் வலிமையின் தூணாக இருப்பதற்கு நன்றி ஒவ்வொரு புயலிலும் நீங்கள் நான் ஒட்டிக் கொள்ளும் பாறை. சூறாவளியில் அமைதியான கண் போன்றவர். சந்தேகமும் பயமும் என்னை தின்றுவிடும் என்று நான் பயத்தில் இருக்கும் போது நீங்கள் ஒரு அன்பான புன்னகையுடன் ஊக்மளிக்கும் வார்த்தையுடனும் இருந்தீர்கள். என் மீது நம்பிக்கை வைத்து இன்னும் ஒரு படி எடுத்து வைக்குமாறு மெதுவாக வலியுறுத்துகிறீர்கள்.

எனக்கு ஆறுதல் தந்து என்னுடைய கவலைகளை வெளியே அனுப்புவதில் ஒருபோதும் தயங்க மாட்டீர்கள். புதிய வழிகளை ஆராயவும் அறிமுகம் இல்லாத பாதைகளை தழுவவும் என்னை வலியுறுத்துகிறீர்கள். என்னுடைய வெற்றிகளை உங்களது வெற்றியாக கொண்டாடுவீர்கள். எண்ணில் உனது பெருமிதம் என்னை இன்னும் உயர பாடுபட வைக்கும்.
என்னுடைய அண்ணன் எனக்கு எப்போதும் ஒரு சூடான கலங்கரை விளக்கு. நீங்கள் தந்த பரிசு அளவிலாத பொக்கிஷம். ஒவ்வொரு நாளும் என் இதயம் நீங்கள் செய்யும் அனைத்திற்கும் அன்பாலும் பாராட்டுகளாலும் நிறைந்து வலிக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இந்த அழகான தங்க மோதிரம் தந்ததற்கு நன்றி என்றும் அந்த பதிவில் கூறி இருக்கிறார். ரீமாவிற்கு அவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications