இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.. 34 வயதில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வீட்டில் நடந்த அகால மரணம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி கேரக்டரில் நடிகை கம்பம் மீனா நடித்து வருகிறார். இவர் அதே சேனலில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் ஐஸ்வர்யாவின் சித்தியாக கஸ்தூரி கேரக்டரிலும் நடித்து வருகிறார்.
சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கம்பம் மீனா இன்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய அக்காள் மகனின் மரணம் குறித்து உருக்கமான பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு தன்னோடு பேசிய தன்னுடைய அக்காள் மகன் இன்று உலகத்தில் இல்லை என்பதை வேதனையோடு அவர் தெரிவித்திருக்கும் நிலையில் அதற்கு அதிகமானோர் வருத்தங்களை தெரிவித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.
விஜய் டிவியில் டிஆர்பியில் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியல் இனி இரண்டாவது பாகம் தொடங்கப்பட இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு சீரியல்களிலும் நடிகை கம்பம் மீனா நடித்து வருகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி கேரக்டரில் பாக்யாவிற்கு தோள் கொடுக்கும் தோழியாக இவர் இருக்கும் நிலையில் தன்னுடைய குடிகார கணவரின் கொடுமை குறித்து அடிக்கடி பேசி பலருடைய அனுதாபங்களையும், அதே நேரத்தில் பாக்யாவுக்காக இவர் செய்யும் செயல்களை பற்றி பலர் பாராட்டியும் வருகிறார்கள். அதேபோல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் கஸ்தூரி கேரக்டரில் ரசிகர்கள் சொல்ல நினைப்பதை எல்லாம் இவரே சொல்லி விடுகிறார்.
கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் அடிக்கடி இவர் லெப்ட் ரைட் வாங்கிக்கொண்டு பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை கலாய்க்கும் முக்கிய கேரக்டராக இவர் இருந்து வருவதாலேயே இவரை அதிகமானோருக்கு பிடிக்கும். ஆரம்பத்தில் இவர் சீரியலில் நடிக்க தொடங்கிய போது இவருடைய குரலை பார்த்து பலர் கலாய்த்தனர். ஆனால் இப்போது இவருடைய நடிப்புக்கு ஒரு நாள் அவர் டப்பிங் பேசாமல் வேறு ஒரு நபர் வைத்து டப்பிங் பேசப்பட்ட நிலையில் அது இவருக்கு செட்டாகவில்லை என்று ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர்.
அந்த அளவிற்கு இப்போது ரசிகர்களின் மத்தியில் அவர் பிரபலம் அடைந்திருக்கிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய அக்காள் மகன் அகால மரணம் அடைந்தது குறித்து கண்ணீரோடு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

அதில் "என்னடா அவசரம் நீ தானடா காரியக்காரன்...தீஷிகனுக்கு ஐந்து வயது ஆகட்டும். அவனை எப்படி கொண்டு வரேன் பாரு சித்தினு சொல்லி 4 நாள் தான்டா ஆகுது.. நீ அடுத்த தடவை வரும்போது நான் எப்படி இருக்கேன் பாரு சித்தின்னு சொன்னியே... நாலே நாள்ல என்ன வர வச்சுட்டியே பாண்டி.. ஐயோ என்னடா இது காலகொடுமை... இப்படி 34 வயசிலேயே எமனுக்கு பலி கொடுத்துட்டமேடா பாண்டி..
நா வந்துட்டு இருக்கேன் டா வாசல்ல வந்து என்னையே வா சித்தின்னு சொல்லுவியே... பாண்டி" என்று கண்ணீரோடு அவருடைய அக்காள் மகனின் புகைப்படத்தை கம்பம் மீனா வெளியிட்டு இருக்கிறார். இதற்கு அதிகமானோர் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அத்தோடு அவர் எதனால் மரணம் அடைந்தார் என்று பலரும் கேட்டு வருகின்றனர்.
ஆனால் எப்போதும் கமெண்ட்களுக்கு உடனுக்குடன் பதில் கொடுக்கும் கம்பம் மீனா தற்போது இந்த பதிவுகளுக்கு வரும் கமெண்ட்களுக்கு இன்னும் பதில் கொடுக்கவில்லை. ஆனாலும் தன்னுடைய அக்கா மகன் மீது இவர் வைத்திருக்கும் பாசத்திற்கு பலர் ஆறுதல்கள் கூறி வருகின்றனர்.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications