அம்மா பாசத்தில் ஈஸ்வரி செய்த குழப்பம்.. பரிதாப நிலையில் கோபி.. கலக்கிட்டீங்களே பாக்யா.. ராதிகா பாவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் ஐந்தாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் பிரச்சனையில் இருக்கும் கோபிக்கு சப்போர்ட் பண்ணுகிறேன் என்கிற பெயரில் ஈஸ்வரி கோபியை பாக்கியாவிடம் அவமானப்பட வைத்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்று எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரிக்கு கோபி போன் போட்டு செஃப் லீவு அதனால் ரெஸ்டாரண்டில் ஏற்பட்ட பிரச்சனை பற்றி சொல்ல உடனே ஈஸ்வரி ராமமூர்த்தியிடம் சொல்லிவிட்டு கோபியின் ரெஸ்டாரண்டுக்கு கிளம்பி போகிறார். அங்கு கோபி ஈஸ்வரியை பார்த்த அம்மா நீங்க சூப்பரா சமைப்பீங்க கொஞ்சம் ஏதாவது பண்ணுங்க என்று சொல்ல, ஈஸ்வரி மெனுவை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

என்னது 100, 200 பேருக்கு எல்லாம் என்னால சமைக்க முடியாது. அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் நான் கிடையாது... வேற என்ன பண்ணலாம் என்று யோசிக்கிறார். அப்போது கோபி பாக்யாவை பற்றி புலம்ப ஈஸ்வரிக்கு பாக்யா கிட்ட ஆர்டர் கொடுக்கலாம் என்று ஐடியா வருகிறது. பிறகு கோபிக்கு தெரியாமல் வெளியே வந்து எனக்கு தெரிந்த ஒருத்தர் வீட்டுல பங்க்ஷன் இருக்கு. ஒரு கேட்டரிங்ல்ல ஆர்டர் கொடுத்து இருக்காங்க.
திடீர்னு அவங்களால சமைச்சு கொடுக்க முடியாமல் போயிட்டு. அதனால எனக்காக நீ சமைச்சு கொடு என்று சொல்ல பாக்கியா ஒரு மணி நேரத்தில் எப்படி சமைக்க முடியும்? என்று கேட்க அதற்கு ஈஸ்வரி கம்பல் பண்ணி சமைக்க வைக்கிறார். அதோடு நீ சமைச்சு முடிச்சுட்டு சொல்லு நானே ஆளை அனுப்பி எடுத்துக்கிறேன் என்று சொல்லுகிறார்.

அதை தொடர்ந்து கோபி ஆபீஸில் ரிசப்ஷனில் இருக்கும் பெண்ணிடம் பாக்கியா நம்பரை கொடுத்து மெனு அனுப்பிவிடு என்று ஈஸ்வரி சொல்ல அந்தப் பெண் மெனுவோடு சேர்ந்து லொகேஷனையும் அனுப்பி வைக்கிறார். பாக்யா சமைத்து முடித்துவிட்டு ஈஸ்வரிக்கு போன் பண்ண போன் நாட் ரீச்சபிள் ஆக இருக்கிறது. ஆனால் லொகேஷன் அனுப்பி இருப்பதால் டெலிவரி பண்ணிடவா என்று பாக்கியா ரிசப்ஷனில் இருக்கும் பெண்ணுக்கு போன் போட்டு கேட்க அவர் டெலிவரி பண்ணிடுங்க என்று சொல்லிவிடுகிறார்.
மறுபக்கத்தில் கோபி மற்றும் ஈஸ்வரி பதட்டத்துடன் இருக்க அவர் ஈஸ்வரி பாக்யாவுக்கு போன் பண்ணி முயற்சி செய்ய போன் ஸ்விட்ச் ஆப் ஆக இருக்கிறது அதனால் போனை சார்ஜ் போடுகிறார். அதற்குள் பாக்கியா எல்லாவற்றையும் ஏற்றி அனுப்பி பின்னாடி ஆட்டோவில் வந்து கொண்டிருக்கிறார். ஈஸ்வரி கொஞ்சம் போன் சார்ஜ் ஆனதும் தனியாக வந்து பாக்யாவுக்கு போன் பண்ண, பத்து நிமிஷம் வந்து விடுவேன் என்று சொல்லி போனை பாக்யா வைத்து விடுவார்.

அப்போது ஈஸ்வரி டெலிவரி பாய்களை கூப்பிட்டு ஒரு வேன் ரெடி பண்ண சொல்கிறார். ஆனால் அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் பாக்யா ரெஸ்டாரண்டுக்கு சாப்பாடு உடன் வந்து நிற்க, கோபி சாப்பாடு வந்துடுச்சு என்று சந்தோஷப்பட பின்னாடி வந்த பாக்யாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
அதற்கு பாக்கியா அத்தை பங்க்ஷன் வீட்டுக்குன்னு சொன்னீங்க லொகேஷன் இங்க காட்டுது மாத்தி அனுப்பிட்டீங்களா? எங்க டெலிவரி பண்ணனும்னு சொல்லுங்க நாங்க பண்ணிட்டுரோம் என்று கேட்க, அங்கிருந்தவர்கள் நீங்க சரியான அட்ரஸ்க்கு தான் வந்து இருக்கீங்க. செஃப் லீவு அதனாலதான் உங்ககிட்ட ஆர்டர் கொடுத்து இருந்தோம் என்று உண்மையை உளறுகிறார்கள்.
கோபி இவகிட்ட அம்மா நீங்க சாப்பாட்டுக்கு அரேஞ்ச் பண்ணிங்க என்று புலம்புகிறார். அதற்கு ஈஸ்வரி இப்படி நடக்கணும்னு நான் நினைக்கல. நல்ல ஆள் வச்சிருக்கே எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டாங்க என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அதோடு பாக்கியா நீங்க என்கிட்ட மறைக்கணும்னு நினைச்சீங்கன்னா கடவுள் எல்லாத்தையும் எனக்கு தெரியப்படுத்திட்டாரு என்று கோபி மற்றும் ஈஸ்வரிக்கு பல்பு கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications