பேசக்கூடாததை பேசிட்டு ஈஸ்வரிக்கு இந்த கோபமா? ஜெனி எடுத்த சிறப்பான முடிவு.. மன்னிப்பு கேட்ட அமிர்தா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் எட்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் அமிர்தாவை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தியதால், எழில் திட்டியதற்காக ஈஸ்வரி கோபத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் செழியன் மீது ஜெனி சந்தேகப்பட்டு கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இந்த நிலையில் இன்னும் சில சுவாரஸ்யமான காட்சிகள் நடைபெற்றதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் இரவு நேரத்தில் செழியன் போன் பார்த்துக் கொண்டிருக்க, அதற்கு ஜெனி இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்க செழியன் ஒரு இம்பார்டன்ட் ரிப்ளை மட்டும் பண்ணிட்டு வந்துடுறேன் பத்து நிமிஷம் என்று சொல்லி மெசேஜ் பண்ணிவிட்டு ஜெனியிடம் வந்து பேச வரும்போது ஜெனி யாரிடம் பேசின? ஆணா, பெண்ணா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு போனையும் வாங்கி செக் பண்ணி பார்க்கிறார்.

Baakiyalakshmi Serial April 8th promo and episode full update

அடுத்ததாக ஈஸ்வரி கால் வலியில் உட்கார்ந்து இருக்க எழில் நான் காலை பிடித்து விடுகிறேன் என்று உட்கார, அதற்கு ஈஸ்வரி ஒன்னும் தேவையில்லை என்னோட வலியை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று எழுந்து ரூமுக்கு போய்விட, ராமமூர்த்தி எழிலிடம் நான் அவளுக்கு மாத்திரை கொடுத்து விட்டேன். எல்லாம் சரியாயிடும் என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து ஈஸ்வரி எழிலிடம் பேசாததால் அமிர்தா என்னால தான் பாட்டி உங்க மேல கோபமா இருக்காங்க என்று மன்னிப்பு கேட்கிறார்.

அதற்கு எழில் அதெல்லாம் ஒன்றும் இல்லை பாட்டி தானே அவங்க கோபம் சீக்கிரமா சரியாயிடும் என்று சொல்லி, எனக்கு ஒரு காபி கிடைக்குமா என்று கேட்கிறார். அமிர்தா காபி போட்டு வர கிச்சனுக்கு போகும்போது அம்மா எங்கே என்று கேட்க அம்மா மேல இருக்காங்க என்று சொன்னதும் அப்போ கிச்சனில் நீ மட்டும் தனியா இருக்கியா? என்று ரொமான்ஸ் செய்யலாம் என்று போக அந்த நேரத்தில் பாக்கியா அங்க வந்ததும் ஒன்னும் தெரியாதது போல சோபாவில் உட்கார்ந்து விடுகிறார்.

மறுபக்கம் பழனிச்சாமி வீட்டில் அவருடைய அம்மா பழனிச்சாமியின் 45 வது பிறந்த நாளை எல்லாரையும் கூப்பிட்டு கொண்டாட வேண்டும் என்று பேசுகிறார். அதோடு உனக்கு இந்த வருஷம் கண்டிப்பா கல்யாணம் பண்ணனும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் செழியன் வேலைக்கு கிளம்ப ஜெனி எப்ப திரும்ப வருவ, ஆபீஸ் போறியா? அல்லது கிளையண்ட் மீட்டிங்கு எதுவும் வெளியே போறியா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க,

அதற்கு ஈஸ்வரியை வெளியே போற ஆம்பள வர முன்ன பின்ன தான் ஆகும் அதுக்காக இத்தனை கேள்வி கேட்பியா? என்று திட்ட, அதற்கு செல்வி ஏன் ஐயா வெளியே போனா ஆயிரம் கேள்வி கேட்கிறது இல்லையா? அதே மாதிரி தான் ஜெனி கேட்கிறது சரிதான் என்று சப்போர்ட் பண்ணுகிறார். அடுத்ததாக பாக்யா பழனிசாமி வீட்டிற்கு வர அவருடைய அம்மா பழனிச்சாமி பிறந்த நாளை கொண்டாட சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுக்கிறார்.

பிறகு பழனிச்சாமியும் அங்கு வந்து விட இரண்டு பேர் பேசுவதை பார்த்து இவனுக்கு பாக்கியா மேல ஆசை இருக்கானு கேட்டா இல்லைனு தான் சொல்லுவான் என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. ஏற்கனவே எல்லா பிரச்சனைகளையும் பாக்கியா தீர்த்து விட்டார்.

இனி பழனிச்சாமியின் பிறந்த நாளில் பாக்கியா மற்றும் பழனிச்சாமிக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து அவருடைய அம்மா பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை வைத்து இனி அடுத்த பூகம்பம் வெடிக்கும் என்று தெரிகிறது என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+