இறப்பு பற்றி அதிர்ச்சி கொடுத்த ராமமூர்த்தி.. கோபியை கதறவிட்ட பாக்கியா.. எழில் சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்று இந்த செய்தியில் பார்க்கலாம். கோபி தன்னை ஈஸ்வரி ஏற்றுக்கொள்ளாமல் விரட்டியதற்கு காரணம் பாக்கியா தான் என்று கோபப்பட ராமமூர்த்தியும் பாக்கியாவும் மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி கொடுக்கின்றனர். அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரியிடம் கோபி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ராமமூர்த்தி பக்கத்தில் வருகிறார். அப்போது கோபியிடம் ஈஸ்வரி இந்த வீட்டில் எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீதான் என்று சொல்லி கொண்டிருக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அப்போது அங்கு வந்த ராமமூர்த்தி என்ன தனியாக சமாதானம் பண்ண பார்க்கிறானா? என்று கேட்க அதற்கு ஈஸ்வரி நான் பழைய மாதிரி பேசுவேன் என்று எதிர்பார்த்து விட்டான் என்று கோபிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். அதற்கு கோபி இல்லப்பா என்று சொல்லிக் கொண்டிருக்க ஈஸ்வரி கூட்டிக்கொண்டு ராமமூர்த்தி கிளம்பி விடுகிறார்.

ராமமூர்த்தி ஈஸ்வரியை கூட்டிக்கொண்டு போகும் போது நான் இப்பவும் சொல்றேன் நான் செத்தாலும் அவன் எனக்கு கொள்ளி வைக்கக்கூடாது என்று சொல்ல இதை கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி ஆகிறார். உங்க பிறந்தநாள் அதுவுமா இப்படியா பேசணும் என்று ஈஸ்வரி ஃபீல் பண்ண நான் சொன்னா அது நாளைக்கே நடக்கவா போகுது? எப்பவாவது ஒரு நாள் எல்லோரும் சாக தானே போகிறோம். அன்னைக்கு அவன் வரக்கூடாதுன்னு சொல்லிரு என்று ராமமூர்த்தி மீண்டும் சொல்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

பிறகு எல்லோரும் உட்கார்ந்து ஒன்றாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். ராமமூர்த்தி மட்டும் சிறிது நேரம் அமைதியாக யோசித்துக் கொண்டிருக்க, எல்லாரும் என்னாச்சு என்று விசாரிக்கின்றனர். அதற்கு ராமமூர்த்தி என் வயது இருப்பவர்கள் எல்லோருக்கும் ஒரு பிரச்சனை இருக்கிறது. நாளைக்கு இருப்போமா இல்லையா என்ற பயத்தில் எல்லோரும் இருப்பதாக சொல்கிறார்கள். எனக்கு 80வது பிறந்தநாளை நீங்கள் எல்லோரும் கொண்டாடி இருக்கீங்க. அதை நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று பேசுகிறார்.

குடும்பத்தில் எல்லோரும் நீங்கள்தான் எங்களை வழிநடத்துறீங்க எங்களுக்கு ஆறுதலாய் இருக்குறீங்க என்று பாராட்டி பேசிக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் கோபி இவர்கள் எல்லோரும் பேசுவதை பார்த்து ஃபீல் பண்ணிக்கொண்டிருக்கிறார். அப்போது இனியா இரண்டு முறை தற்கொலை செய்ய பார்த்து இருக்கா அதற்கு காரணம் நீதான் என்று ஈஸ்வரி சொன்னதை நினைத்து கண்கலங்கி கொண்டிருக்கிறார். அதோடு இனி யார் கிட்ட பேசினாலும் இல்லனாலும் இனியா கிட்டா மட்டும் பேசணும் என்று கோபி முடிவு எடுக்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அந்த நேரத்தில் எழில் நாம வீட்டிற்கு கிளம்புவோம் என்று அமிர்தாவை கூப்பிட அதை கவனித்த பாக்யா எல்லோரும் சாப்பிடலாமா என்று சொல்கிறார். ஆனால் இனியா இன்னைக்கு தாத்தாவின் பிறந்த நாள் என்பதால் தாத்தாவின் கையால் சாப்பிடலாம் என்று சொல்ல ராமமூர்த்தி எனக்கு சாப்பாடு செய்ய தெரியாதுமா? என்று சொல்ல, அதற்கு எழில் அப்படி இல்ல தாத்தா நீங்க உங்க கையால உருண்டை பிடிச்சு கொடுப்பீங்கல்ல அப்படி சாப்பிடலாம் என்று லட்டு சொல்றா என்று சொல்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

இதை கேட்ட ராமமூர்த்தி சந்தோஷமா அப்படியே பண்ணலாம் என்று சாப்பாடை கொண்டு வந்து எல்லோருக்கும் உருட்டி கையில் கொடுக்கிறார். பிறகு பாக்யா பாயாசம் எடுக்க இன்னொரு இடத்திற்கு போகும்போது வழியில் கோபி மறித்து என் வீட்டில் நான் ராஜா மாதிரி இருந்தேன். ஆனா என்ன இந்த நிலைமைக்கு ஆளாக்கினத்திற்கு காரணம் நீதான். நீ மட்டும் தான். என் மேல எங்க அம்மா உயிரே வச்சிருந்தாங்க.

என் அம்மாவை பிரைன் வாஸ் பண்ணி மாத்திட்ட என்று பழியை பாக்கியா மீது போட அதற்கு கோபமான பாக்கியா உங்க மேல இருக்கிற தப்பை ஒத்துக்கவே மாட்டீங்களா? என்று கோபப்படுகிறார். அதோடு எல்லாத்துக்கும் ஒரு நாள் அனுபவிப்பா என்று கோபி கோபமாக பாக்கியாவிடம் சொல்ல நீங்க முதல்ல போயிடுங்க அதுதான் உங்களுக்கு நல்லது என்று சொல்லிவிட்டு பாக்கியா கிளம்புகிறார்.

television baakiyalakshmi serial vijay tv

பிறகு குடும்பத்தினர் எல்லாரும் பாயாசம் குடித்துக் கொண்டிருக்க, ஈஸ்வரி நேரம் ஆயிடுச்சு வீட்டுக்கு கிளம்பலாம் என்று சொன்னதும் எழில் மற்றும் அமிர்தா கிளம்பலாமா? என்று கேட்க அனைவருடைய முகமும் மாறுகிறது. ராமமூர்த்தி எழில் இடம் தனியாக கூட்டிக்கொண்டு சென்று வீடு பாத்திட்டியா? எல்லாம் ஒரு நாள் சரியாகும், அம்மாவுக்கு எப்பவும் நீ தான் துணையாக இருக்கணும்... ஈஸ்வரியை வெறுத்துறாத நீ போன பிறகு அவ ரொம்ப அழுதா என்று பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+