பாக்கியலட்சுமி: ராமமூர்த்தி சாகுறதுக்கு முன்னாடி ஈஸ்வரியிடம் சொன்ன வார்த்தை.. டாக்டர் கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 31ஆம் தேதி எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம். அதில் ராமமூர்த்தி இன்றைய எபிசோடில் இறந்து போயிருக்கிறார். அவர் இறப்பதற்கு முன்பு ஈஸ்வரி இடம் குடும்பத்தை பற்றி சில வார்த்தைகளை பேசி இருக்கிறார். அதோடு ராமமூர்த்தியால் மொத்த குடும்பத்தினரும் கதறி அழுது கொண்டிருக்கின்றனர்.
இன்றைய எபிசோடு பார்ப்பதற்கு ரசிகர்கள் மனதை திடபடுத்திக் கொள்ள வேண்டும். இதுவரைக்கும் இல்லாத வகையில் ராமமூர்த்தி நேற்றைய எபிசோடில் அதிகமாக செண்டிமெண்டாக பேசி இருந்தார். அதே நேரத்தில் இன்று அவர் இறந்து போனதாக காட்சிகள் வந்திருக்கிறது. ஆனால் இறப்பதற்கு முன்பு ஏதோ அவருக்கே இறப்பது தெரிந்தது போலவே செண்டிமெண்டாக அங்கே இங்கேயும் சுத்தி திரிந்து அவர் நடந்து கொண்ட விதம் பார்க்கும் ரசிகர்களையும் பயப்பட வைத்திருக்கிறது.

அந்த வகையில் தூக்கம் வராமல் ராமமூர்த்தி தவித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ஈஸ்வரியும் எழுந்து விடுகிறார். என்ன ஆச்சு உடம்புக்கு எதுவும் பிரச்சனையா என்று கேட்க, இல்லை இன்றைக்கு முழுக்க சந்தோஷமா இருந்ததால தூக்கம் வரல என்கிறார். ஆனால் அவருக்கு கழுத்து வலி, நெஞ்சு வலி எல்லாம் இருப்பது போன்று முதலில் தவித்துக் கொண்டிருந்தார். பிறகு ஈஸ்வரிடம் அதையெல்லாம் சொல்லாமல் ரூமிற்குள் அங்கே எங்கே நடந்து கொண்டிருக்கிறார்.
ஈஸ்வரியும் எனக்கும் தூக்கம் வரவில்லை என்று ராமமூர்த்திக்காக எழுந்து வர ராம மூர்த்தி வேண்டாம் நீ தூங்கு நான் கொஞ்சம் நடக்கிறேன் என்று ஹாலுக்கு வந்து கிச்சன் ஹால் என எல்லா இடத்தையும் சுற்றி பார்த்து பீல் பண்ணுகிறார். அந்த நேரத்தில் அதிகமான நேரம் ஆகிவிட்டது இன்னும் வரவில்லையே என்று ஈஸ்வரி மீண்டும் ஹாலுக்கு ராமமூர்த்தியை தேடி வந்து விடுகிறார்.
உங்களுக்கு மனசில் எதுவும் கஷ்டம் இருக்கிறதா? மாத்திரை எதுவும் தரவா? இல்லனா டீ போட்டு தரவா? என்று ஈஸ்வரி கேட்டுக் கொண்டிருக்க எனக்கு எதுவும் இல்ல ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் இன்னைக்கு எல்லாரையும் பார்த்ததும் எனக்கு ஏதோ ஒரு மாதிரி இருக்கு அவ்வளவுதான்.. என்று சொல்லிவிட்டு, நான் தூங்கலனா நீயும் தூங்க மாட்ட... வா உனக்காக நானும் படுக்கிறேன். என்று கட்டிலில் வந்து படுக்கிறேன் என்று வந்து படுக்கிறார்.

அப்போது ஈஸ்வரி தூங்கிக் கொண்டிருப்பதை பீல் பண்ணி பார்க்கிறார். பிறகு இருவரும் தூங்கி விடுகிறார்கள். அடுத்த நாள் காலையில் ஈஸ்வரி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க பாக்கியா காபி போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் செல்வியும் வீட்டிற்கு வந்து வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். செழியன் வாக்கிங் போயிட்டு வந்து பாட்டிக்கு குட் மார்னிங் சொல்லிவிட்டு அவரும் கிளம்பி வருகிறேன் என்று போயிருக்கிறார்.
அந்த நேரத்தில் பாக்கியா மாமா இன்னும் எழுந்துக்கலயா என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி அவர் இப்பதான் அசந்து தூங்குறாரு. நைட் எல்லாம் சரியா தூங்கல குழந்தைகளா இருந்தாலும் சரி பெரியவங்களா இருந்தாலும் சரி ஒரு பங்க்ஷன் கொண்டாடுனா அவங்க மேல திருஷ்டி இருக்கும். அதனால தூங்குறாரு என்று சொல்லிவிடுகிறார். ரொம்ப நேரம் கழித்து இன்னும் வரவில்லை என்று பாக்கியா கேட்டதால் நான் போய் பார்க்கிறேன் என்று ஈஸ்வரி ராமமூர்த்தியை வந்து எழுப்புகிறார்.

ராமமூர்த்தி எழுந்திருக்கவில்லை பிறகு ராமமூர்த்தி நெஞ்சில் கை வைத்ததும் எந்த சத்தமும் இல்லாததால் பாக்கியா என்று ஈஸ்வரி அலற எல்லோரும் மாடிக்கு வந்து ராமமூர்த்தியை எழுப்பி பார்க்கின்றனர். பிறகு பாக்யா ஓடி வந்து செழியனை கூப்பிட்டு டாக்டரை கூட்டிட்டு வர சொல்ல டாக்டர் வந்து செக் பண்ணி பார்த்துவிட்டு பெரியவர் இறந்து விட்டார் என்று சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications