பாக்கியலட்சுமி: பட்டும் திருந்தாத ஈஸ்வரி கூட்டிய புது பிரச்சனை.. அவமானப்படும் எழில்.. மனம் மாறிய இனியா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஏற்கனவே ஈஸ்வரியால் வீட்டில் பல பிரச்சனைகள் வந்தது ஆனாலும் அதிலும் திருந்தாமல் தான் சொல்வது தான் சரி என்று கோபியோடு அவருடைய வீட்டிற்கு சென்று பிறகு போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் சென்று விட்டு வந்திருக்கிறார். ஆனாலும் பாக்கியா வீட்டிற்கு வந்த பிறகு மீண்டும் பழைய வில்லியாக மாறி இருக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க அங்கு வரும் இனியா நானும் எதுவும் ஹெல்ப் பண்ணவா? என்று கேட்க, அங்கு வரும் அமிர்தா ஜெனி ஈஸ்வரி செல்வி என ஒவ்வொருவரும் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இனியாவை மட்டும் பாக்கியா எந்த வேலையும் பார்க்க வேண்டாம் என்று சொல்ல, செல்வி என்ன பாப்பா உன்னுடைய போன் எதுவும் ரிப்பேர் ஆகிவிட்டதா? அதனால் தான் இந்த பக்கமா வந்திருக்கியா என்று கேட்க,

அதற்கு இனியா இல்ல எனக்கு எல்லோரும் வேலை பார்க்கும்போது நான் சும்மா இருக்க ஒரு மாதிரி வருத்தமா இருக்கு என்று பீல் பண்ண, செல்வி இனியாவால் வந்த பிரச்சனையை நினைத்து இப்போ வருத்தப்படுகிறார் போல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மறு பக்கத்தில் எழில் தன்னுடைய நண்பரோடு ஒரு புரொடியூஸரை பார்க்க போக அவர் நீங்கே இதுவரைக்கும் என்னவெல்லாம் செய்தீர்கள் என்று கேட்டதும், எழில் தான் செய்த ப்ராஜெக்ட் எல்லாவற்றையும் சொல்கிறார்.
இதைக்கேட்ட ப்ரொடியூசர் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை நீங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்று சொல்ல, அதற்கு எழில் எனக்கு அந்த நேரத்தில் வீட்டில் பிரச்சனை இருந்ததால் தான் பழைய ப்ரொடியூசரிடம் என்னால் கதை சொல்ல முடியாமல் போய்விட்டது என்று சொன்னதும் அதற்கு அவர் நான் உண்மையான உழைப்போடு முன்னேற வேண்டும் என்று வேகத்தில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பு கொடுப்பேன் உங்களைப் போல சோம்பேறிகளுக்கு நானும் வாய்ப்பு தர மாட்டேன் என்று எழிலை அசிங்கப்படுத்தி அனுப்புகிறார்.

மறுபக்கத்தில் வீட்டிற்கு வந்த செழியன் பாக்யாவிடம் பணக்கட்டை கொடுத்து வீட்டு செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு சொல்கிறார். ஆனால் பாக்கியா வேண்டாம் என்று சொல்ல செழியன் கட்டாயப்படுத்துகிறார். ஈஸ்வரியும் ஜெனியும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்த பாக்யா வாங்குகிறார். அந்த நேரத்தில் எழில் வீட்டிற்கு வர இதை பார்த்து கண்கலங்குகிறார்.
அப்போது ஈஸ்வரி வீட்டில் இரண்டு பேரும் காசு கொடுக்கிறேன் என்று சொன்னீர்கள். ஆனால் செழியன் மட்டும் தான் கொடுக்கிறான் என்று எழிலை நடு வீட்டில் வைத்து அசிங்கப்படுத்தி பேசுகிறார். இதனால் எழில் எதுவுமே பேச முடியாமல் அழுது கொண்டே மாடிக்கு சென்று விடுகிறார். ஈஸ்வரிக்காக தான் தனக்கு கிடைத்த வாய்ப்பை கூட எழில் சரியாக பயன்படுத்தவில்லை.

தனக்கு கதை சொல்ல வர சொல்லி ப்ரொடியூசர் சொல்லி இருந்த நாளில்தான் ஈஸ்வரியை தேடி போலீஸ் வீட்டிற்கு வந்தது. அதனால் தான் எழிலால் கதை சொல்ல போக முடியவில்லை. ஆனால் இன்று அதே ஈஸ்வரியே எழிலை அவமானப்படுத்தி பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications