கோபி வீட்டில் மீண்டும் குழந்தை.. கோபத்தில் ராதிகா.. கலங்கும் பாக்கியா.. ஈஸ்வரி இப்படி மாறிட்டாங்களே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஜெனி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை குடும்பத்தினரிடம் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் கோபி ராதிகாவால் புலம்பி கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் இன்று எபிசோடு ஆரம்பத்தில் முதலில் எழில் பாட்டி எல்லோரும் சொன்னதை நினைத்து கண்கலங்கி அழுது கொண்டு இருக்க, அந்த நேரம் பார்த்து அமிர்தா வந்ததும் அமிர்தாவை கட்டிப்பிடித்து நான் ராசி இல்லாதவனா? என்று கேட்டு அழுகிறார். அப்போது பாக்கியா வந்து பாட்டி சொன்னது தப்புதான் என்று சொல்ல, அதற்கு எழில் இல்ல பாட்டி கரெக்டா தான் சொல்லி இருக்காங்க..

நான் நீ வேலைக்கு போகணும்னு நினைக்கலைமா நான் உன்னை ராணி மாதிரி பாத்துக்கணும்னு நினைக்கிறேன் என்று அழ பாக்யாவும் அழுதபடி எழிலுக்கு மோட்டிவேஷனலாக பேசி ஆறுதல் சொல்கிறார். மறுபக்கத்தில் கோபி ராதிகா வீட்டு கதவை தட்ட ராதிகா கதவை திறக்காமல் இருக்கிறார்.
"சட்னி சாம்பார்" வெப் சீரிஸ்.. ஆபாசம் இல்லை, காமெடி மட்டும் தான்.. ஆனால் "இது" மட்டும் நெருடல்
பிறகு நீ கதவை திறக்க மாட்டா, நானே திறந்துகிறேன் என்று தன்னிடமிருந்த சாவியை போட்டு கதவை திறந்து உள்ளே வந்து ராதிகாவின் ரூம் கதவை தட்ட அப்போதும் ராதிகா திறக்காததால் ஹாலில் அமர்ந்தபடியே கோபி போனில் கண்ணதாசன் பாட்டை வைத்து கேட்டு கொண்டு இருக்க, அந்த நேரம் வெளியே வந்த ராதிகா, பாட்டு கேக்கறதா இருந்தா ஹெட் போன் போட்டு கேளுங்க, மயூ தூங்குறா என்று கோபப்பட்டு சொல்கிறார்.

பிறகு கோபி தனியாக உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டத்தில் ஜெனியும் செழியனும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜெனி, செழியனிடம் இப்ப ரொம்ப மாறிட்ட நான் நினைச்ச மாதிரி இப்பதான் இருக்கிற... நீ அம்மாவுக்கு காசு கொடுக்கும்போது தனியா வச்சு கொடு, எழில் சம்பாதிச்சு பணம் கொடுக்கிற வரைக்கும் நாம அவன் முன்னாடி பணம் கொடுக்கிறது நல்லா இருக்காது என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

கர்ப்பத்தை அறிவித்த இந்திரஜா.. விஜய் டிவியில் எமோஷனலாக ரோபோ சங்கர் சொன்ன வார்த்தை
அந்த நேரத்தில் திடீரென வாந்தி எடுக்க செழியன் என்னாச்சு என்று பதறுகிறார். பிறகு ஜெனி நான் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகமாக இருக்கு அதனால் போய் ப்ரெக்னன்சி கிட் வாங்கிட்டு வா என்று அனுப்பி வைக்கிறார். பிறகு ஜெனி பாக்யாவிடம் சென்று தனக்கு வாந்தி வருவதாகவும் தலை சுற்றுவதாகவும் சொல்ல பாக்கியா எதுவும் செய்து தரட்டுமா? என்று கேட்கிறார். அப்போது அங்கிருந்து ஈஸ்வரி வந்து ஜெனியிடம் ஏதும் விசேஷமா? என்று கேட்க, அவர் ஆமாம் என்பது போல தலையாட்டுகிறார். இதனால் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications