பாக்கியலட்சுமி: கோபத்தில் ஜெனி! கோபியிடம் உண்மையை மறைக்கும் ஈஸ்வரி.. வீட்டை விட்டு போகும் பாக்யா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 10-ம் தேதிக்கான எபிசோடில் கோபி மீண்டும் ராதிகாவை பார்க்க போவதாக சொன்னதும் ஈஸ்வரி அவரிடம் உண்மையை மறைக்கிறார். அதே நேரத்தில் வீட்டில் நடக்கும் செயல்களை பார்த்து பாக்கியா கோபப்படுகிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் செல்வி பாக்யாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரி அம்மாவிற்கு உன்னையும் கோபி சாரையும் திரும்ப சேர்த்து வைக்கிற ஐடியா இருக்கு என்று சொன்னதும் அப்படி ஒரு ஐடியா இருந்துச்சுன்னா இனிமேல் நான் யாரையும் பார்க்க மாட்டேன், இரண்டு பேருக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு நான் எங்கேயாவது போய் விடுவேன் என்று பாக்யா சொல்கிறார்.

இதைத்தொடர்ந்து வீட்டில் கோபிக்கு ஈஸ்வரி சாப்பாடு கொடுத்து கொண்டிருக்கிறார். அவர் போதும் என்று சொன்னாலும் விடாமல் இது போதாது என்று கோபிக்கு ஊட்டி விடுகிறார். அவரோடு சேர்ந்து இனியாவும் செழியனும் கோபியை விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபத்தில் ஜெனி வாசலில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
அப்போது கோபி நான் ஒரு இடத்திற்கு போகணும்னு ஆசையா இருக்கு என்று சொன்னதும் செழியன் நான் வந்து விடுகிறேன் என்று சொல்கிறார். ஈஸ்வரி எங்கே என்று கேட்கிறார். அதற்கு கோபி ராதிகா வீட்டுக்கு என்று சொன்னதும் ஈஸ்வரி டக்கென்று கோபப்படுகிறார். பிறகு நீ உடல்நிலை சரியில்லாமல் இருக்க நீ இப்போ அங்க போய் பார்க்க கூடாது.
அவதான் உன்னை வந்து பார்க்கணும். அவ வராமல் நீ எப்படி போகலாம்? என்று ராதிகா வந்த விஷயத்தை மறைக்கிறார். இதை பார்த்து ஜெனி கோபப்படுகிறார். ஆனாலும் எதுவும் சொல்ல முடியாமல் குழந்தையை வைத்துக் கொண்டு வாசலில் இருக்கிறார். அப்போது பாக்கியா வருகிறார்.

பாக்யாவிடம் நீங்க இப்போதைக்கு உள்ளே போகாதீங்க என்று உள்ளே நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை சொன்னதும் பாக்கியா நான் ஏற்கனவே டயர்டா இருக்கேன். இந்த வீட்டுக்குள் வருவதற்கு இப்போ பிடிக்கல பேசாம மாடிக்கு வெளியிலிருந்து படி வெச்சிடலாம் என்று நினைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது இனியாவுக்கு காலேஜில் அசைன்மென்ட் இருப்பதாக இனியா கோபியிடம் சொல்ல, அதற்கு அவர் போனில் சில ஆப்ஸ் இருக்கு அதுவே எல்லாம் சொல்லி தரும் என்று டக்கு டக்கு என்று இனியாவுக்கு எடுத்துக் கொடுக்கிறார். இதை பார்த்து செழியனும் எப்படி அப்பா இவ்வளவு அப்டேட்டா இருக்கீங்க என்று புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
இறுதியாக பாக்யா தனக்கு பெரிய ஆர்டர் வந்திருப்பதாகவும் அது தனக்கு தெரியாத லெக்னீஷ் டிஷ் செய்ய சொன்னதாகவும் குழப்பத்தில் இருக்கிறார். அப்போது ஜெனி செழியனை கூப்பிட்டு ஐடியா கேட்கிறார். அதற்கு கோபி இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு அந்த சமையல் தயாரிக்க தெரிந்த ஒருவரை இப்போதைக்கு வேலைக்கு போட்டுக் கொள்ளலாம்.

பிரியாணி செய்வதற்காக ஒரு செஃப் வைத்தது போல இந்த சமையல் செய்வதற்கும் ஒரு செப் வைத்து வேலை செய்ய வேண்டும். நமக்கு வேலையை பற்றிய அறிவு மட்டும் இருந்தால் போதும். எந்த இடத்திலும் நாம் தான் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று இருக்கக் கூடாது. அப்படி செய்தால் நம்மால் அடுத்த கட்டத்துக்கு போக முடியாது என்று கோபி அட்வைஸ் கொடுத்து கொண்டு இருக்க பாக்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
-
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications