செழியனை அறைந்த ஜெனியின் அப்பா.. அமிர்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த கணேஷ்.. செம டுவிஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 14ஆம் தேதி காலை எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ஜெனியை பார்க்க போயிருந்த செழியனை ஜெனியின் அப்பா அடித்து அவமானப்படுத்தி அனுப்புகிறார்.
அதே நேரத்தில் பொருள்காட்சியில் கேட்டரிங் விஷயத்தில் நிம்மதி அடைந்த பாக்கியாவிற்கு கணேஷ் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா கேண்டீன் நடத்த இனி எந்த பிரச்சினையும் இல்லை என்று ஆபீஸர்ஸ் சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். இதை தொடர்ந்து பாக்யா வீட்டிற்கு வர அங்கு ஈஸ்வரி மீண்டும் கேண்டீனை வேறு யாருக்காவது கொடுக்குமாறு அட்வைஸ் கொடுக்கிறார்.
ஆனால் நான் கொடுக்கிறதா இல்ல எது வந்தாலும் நான் சமாளிப்பேன் என்று பாக்கியா பதிலடி கொடுக்கிறார். அதைத் தொடர்ந்து பாக்யா நான் ஒரு புது ஸ்வீட் செய்யப் போறேன். அதற்கு பெயர் என்ன வைக்கலாம் எனக்கு எதுவுமே செட் ஆகலையே என்று புலம்பி கொண்டிருக்க, அதற்கு ராம மூர்த்தி அத்தை பெயரை சேர்த்து ராமேஸ்வரி என்று வைக்கிறியா? என்று கேட்க அதற்கு எல்லோரும் பெயர் நல்லா இருக்கு என்று பாராட்டுகின்றனர்.

அதற்கு ஈஸ்வரி பெயர் மட்டும் தான் நல்லா இருக்கு. ஆனா நான் என்ன சொன்னாலும் அதை பாக்கியா கேட்கிறதே இல்லை என்று திட்டி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார். மறுபக்கத்தில் ஜெனியின் அம்மாவும் அப்பாவும் செழியனை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செழியன் அங்கு வர அதனால் கோபமான ஜெனியின் அப்பா கோபத்தில் செழியனை பளார் பளார் என்று அடித்து விடுகிறார்.
எங்க பொண்ண எப்படி வளர்த்தோம். உங்க வீட்ல வேலைக்காரி போல வச்சிருக்கீங்களா? என்று திட்டிக் கொண்டிருக்க அதற்கு செழியன் இன்னைக்கு பாப்பாவுக்கு ஊசி, அதுக்குத்தான் இந்த பைலை கொடுத்துட்டு போக வந்தேன் என்று சொல்கிறார். மேலும் நீ பொருட்காட்சிக்கு வந்தது அவ்வளவு சந்தோசமாக இருந்துச்சு. ஆனால் எனக்காக வரவில்லை என்று தெரியும் என்று ஜெனியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அதைத் தொடர்ந்து ஜெனியின் அப்பா ஜெனிக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்துட்டு இன்னொரு கல்யாணம் செய்வோம் என்று ஜெனி அம்மாவோடு பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு அவர் ஜெனி இதுக்கு சம்மதிக்க மாட்டா செழியன் மேல அவளுக்கு கோபம் மட்டும் தான் இருக்கு. ஆனா இன்னும் வெறுப்பு இல்ல ஒரு முறை பேசி பார்ப்போம், ஜெனி என்ன சொல்கிறார் என்று தெரியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதை தொடர்ந்து செழியனுக்கு போன் பண்ணும் ஜெனியின் அப்பா நாளை காலை நேரில் வந்து பார்க்கச் வர சொல்கிறார். அதைத்தொடர்ந்து பொருட்காட்சி கேண்டினில் பாக்கியா பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அங்கு வாசலில் கணேஷ் வந்து நிற்க பாக்கியா அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. பொருள்காட்சி கேட்டரிங் உள்ளே தான் அமிர்தாவும் இருந்து கொண்டிருக்கிறார். இதனால் அமிர்தா இனி கணேசனை பார்க்கப் போகிறாரா? அல்லது பாக்கியா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications