செழியன் வாழ்க்கைக்காக பாக்கியா எடுத்த முடிவு.. கலங்கி நிற்கும் ராதிகா.. வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 16ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
இதில் கோபி கிரெடிட் கார்டு பணம் செலுத்தாமல் கடனில் தத்தளிக்கும் உண்மை ராதிகாவிற்கு தெரிய வந்திருக்கிறது.
அதை தொடர்ந்து செழியன் மற்றும் ஜெனியின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக பாக்கியா முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் ஜெனி வீட்டிற்கு வந்த அவருடைய அப்பா செழியன் மாலினியுடன் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை சொல்லி இனிமே அவன் நமக்கு வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்டு ஜெனி அதிர்ச்சி அடைந்து அழுது கொண்டு ரூமிற்கு சென்று விடுகிறார்.
அதைத் தொடர்ந்து பாக்யா மாலினியை சந்தித்து உனக்கு என்னதான் பிரச்சனை, எதுக்கு நீ செழியனை இப்படி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்க என்று திட்ட அதற்கு மாலினி எனக்கு செழியனுடன் கல்யாணம் நடக்கணும் என்று சொல்லி பாக்யாவிற்கு அதிர்ச்சி கொடுக்கிறார். அப்போ ஜெனி அவளோட குழந்தை நிலைமை என்ன என்று பாக்கியா கேட்க அதனைப் பற்றி எனக்கு கவலை கிடையாது என்று மாலினி சொல்கிறார்.

அதற்கு பாக்யா சுயநலத்துக்காக என்ன வேணாலும் செய்வேன்னு தெரிஞ்சு போச்சு. திரும்பவும் நீ என் பையன் வாழ்க்கையில் வந்தா நான் இனி சும்மா இருக்க மாட்டேன். எனக்கு என்னுடைய பையன் வாழ்க்கை தான் முக்கியம் என்று கோபமாக பேசிவிட்டு போகிறார். அதை தொடர்ந்து ஜெனி வீட்டில் அவருடைய அப்பா இனிமே செழியனோடு எந்த உறவும் வேண்டாம்.

அந்த குடும்பத்தோட யாரும் பேச வேண்டாம் பழக வேண்டாம் நான் போய் வக்கீல் பார்த்துட்டு வருகிறேன் என்று கிளம்ப அந்த நேரத்தில் பாக்கியா வீட்டிற்குள் வருகிறார். அப்போது பாக்கியாவிடன் ஜெனியின் அப்பா ஜோசப், நீங்க எதுக்கு இங்க வந்தீங்க உங்களுக்கும் எங்களுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை.
நீங்க நல்லா உங்க பிள்ளையை வளர்த்து வச்சிருக்கீங்க என்று கோபப்பட்டு திட்ட, அதற்கு பாக்கியா நான் ஜெனி கிட்ட பேசணும் அவள் என் வீட்டு மருமக என்று சொல்ல, அதற்கு ஜோசப் கோபப்பட ஆனால் அதைக் கண்டு கொள்ளாத பாக்கியா நேராக ஜெனி ரூம்பிற்கு சென்று ஜெனியை கூப்பிட்டு நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சொல்லி இந்த முறை செழியன் மேலே எந்த தப்பும் கிடையாது.

இந்த மாலினி என்னமோ கேம் விளையாடுறா, உங்க அப்பா செழியனை பார்த்து சந்திச்சு பேச போற இடத்துல கண்டிப்பா செழியன் மாலினியை வரச் சொல்லி சொல்லுவானா? நீயே யோசிச்சு பாரு என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அதைத் தொடர்ந்து வீட்டில் ஈஸ்வரி தனியாக இருக்க அந்த நேரத்தில் அங்கு பேங்க் ஆபிஸர்ஸ் வந்து கோபியை தேடுகின்றனர்.
அவர்களை பார்த்ததும் ஈஸ்வரி என்னவென்று விசாரிக்க அப்போது கோபி பணம் இன்னும் செலுத்தவில்லை என்பதை பேங்க் ஆபிஸர்ஸ் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ராதிகா அங்கு வந்துவிட ராதிகா என்னவென்று விசாரிக்கிறார். அதற்கு ஈஸ்வரி ராதிகாவை விரட்டிவிட வேண்டும் என்று முயற்சி செய்ய ஆனால் அது நடைபெறாமல் போய்விடுகிறது. பேங்க் ஆபிஸர்கள் ராதிகாவிடம் கோபி கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தவில்லை என்பதை பற்றி சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications