பாக்கியலட்சுமி: இனியா கேட்ட கேள்வி.. விபரீத முடிவெடுத்த ராதிகா! மீண்டும் மனம் மாறும் கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 19ஆம் தேதிக்கான எபிசோடில் இனியா ராதிகாவிடம் கோபியை டைவர்ஸ் பண்ண சொல்லி பிரச்சனை செய்கிறார். இதனால் ராதிகா தான் இருக்கும் வீட்டை காலி பண்ணப் போகிறார்.
மயூவின் பிறந்தநாள்: இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராதிகா பாக்யாவின் வீட்டிற்கு வந்து கோபியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் இனியா இருக்கிறார். அப்போது நாளைக்கு வீட்டிற்கு வர முடியுமா கோபி என்று கேட்க, கோபி என்ன விஷயம் என்று கேட்கிறார். அதற்கு நாளைக்கு மயூவின் பிறந்தநாள் அவ உங்களை ரொம்ப எதிர்பார்ப்பா என்று சொன்னதும், ஐயோ மறந்துட்டேனே கண்டிப்பா வரேன் என்று கோபி சொல்லிவிட்டு நாளைக்கு இனியாவோட டான்ஸ் கம்பெட்டிஷன் இருக்கு என்று சொல்கிறார்.

ராதிகா கேள்வி: இதனால் ராதிகா நீங்க டான்ஸ் காம்படிஷனுக்கு போனா உங்களுடைய ஹெல்த் பாதிக்காதா? அங்க ஓவரா பாட்டு சவுண்ட் இருக்குமே என்று கேட்க அதற்கு இனியாகவும் ஈஸ்வரியும் அதை எல்லாம் ஒன்னும் ஆகாது நாங்க பார்த்துக்கிறோம் என்று சொல்கின்றனர். உடனே ஈஸ்வரி அங்கு வந்து உட்கார ராதிகா எழுந்து விடுகிறார்.
இனியாவின் சுயநலம்: ராதிகா வெளியே போகும்போது இனியா நான் போன் பேசிட்டு வரேன் என்று சொல்லி வெளியே வந்து ராதிகாவை கூப்பிடுகிறார். நீங்க ஏன் என்னோட டாடி காம்பெடிஷனுக்கு வர்றத தடுக்குறீங்க என்று கேட்க, அதற்கு ராதிகா நான் தடுக்கல அவருடன் நல்லதுக்காக தான் சொன்னேன் என்று சொல்கிறார்.

இனியா வாக்குவாதம்: டாடிக்கு என் மேல தான் பாசம் அதிகமாக இருக்கும். ஏன்னா நான் அவர் பெத்த பொண்ணு. இது மட்டுமல்ல நீங்க எனக்கு எவ்வளவோ நல்லது பண்ணி இருக்கீங்க. வீட்டுக்கு வந்தா நல்லா தான் பாத்துக்கிட்டீங்க ஆனா இப்போ என்னுடைய சந்தோஷத்தை கெடுக்காதீங்க.
இனியா கேட்ட கேள்வி: நீங்க என்னுடைய அப்பாவை டைவர்ஸ் பண்ணிடுங்க என்று சொல்கிறார். இதனால் ராதிகா அதிர்ச்சியடைகிறார். இப்படி எல்லாம் பேசாதே இனியா கஷ்டமா இருக்கு என்று சொல்கிறார். அதற்கு என் அம்மா பிரண்டுக்கு துரோகம் பண்ண கூடாதுனு தான் விலகி போறாங்க. நீங்க டைவர்ஸ் பண்ணிட்டீங்கன்னா நாங்க சந்தோஷமா இருப்போம் என்று சொல்கிறார்.

வீட்டை காலி பண்ணும் ராதிகா: இதனால் ராதிகா வீட்டிற்கு சென்று சோகமாக இருக்க, ராதிகாவின் அம்மா என்னாச்சு என்று கேட்கிறார். உடனே ராதிகா இனியா பேசிய விஷயத்தை சொல்கிறார். பிறகு ஹவுஸ் ஓனருக்கு போன் போட்டு தான் வீட்டை காலி பண்ண போவதாக சொல்கிறார். அதற்கு ராதிகாவின் அம்மா ராதிகாவை திட்டுகிறார்.
பாவம் ராதிகா: நீ ஏன் இப்படி பண்ணுற நான் அந்த இனியாவை போய் கேள்வி கேட்கிறேன் என்று சொல்ல, அதற்கு ராதிகா எனக்கு இனி யாரும் வேண்டாம். எனக்கு என்னுடைய பொண்ணு இருக்கு, அவளை மட்டும் நான் சந்தோஷமா வளர்த்தா போதும் என்று சொல்கிறார்.
கோபியை திட்டும் பாக்யா: மறுபக்கத்தில் பாக்யா சமையல் செய்து கொண்டிருக்கும்போது அதை கோபி பாராட்ட அதற்கு கோபமான பாக்கியா கோபியை திட்டி விடுகிறார். அந்த நேரத்தில் ராதிகா வீட்டு ஓனர் கோபிக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல, அவர் ராதிகாவிடம் பேசிவிட்டு மீண்டும் போன் பண்ணுவேன் என்று சொல்கிறார்.
அவமானப்படுத்தும் ஈஸ்வரி: பிறகு ராதிகாவை மீண்டும் வீட்டிற்கு வருமாறு கோபி கூப்பிடுகிறார். ராதிகா முதலில் மறுத்தாலும் பிறகு போகிறார். அப்போது எதற்காக நீ வீட்டை விட்டு போகணும்னு முடிவெடுத்த நாம ரெண்டு பேரும் வாழ தானே அந்த வீடு எடுத்தோம் என்று கோபி சொல்ல, நான் இந்த வீட்டை விட்டு காலி பண்ண போவதாக ராதிகா சொல்கிறார். அப்போது ஈஸ்வரி அவ போனா போகட்டும் என்று எல்லாரும் முன்னிலையிலும் சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications