கணேசை பற்றி உண்மையை உடைத்த பாக்கியா...எழில் எடுத்த அதிரடி முடிவு.. கலங்கி நிற்கும் குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் டிசம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோட் வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்யா கணேசை பற்றிய உண்மைகளை மொத்த குடும்பத்திற்கும் சொல்ல முயற்சி எடுக்கிறார்.
ஆனால் எழில் யாரும் எதிர்பார்க்காத பதிலை சொல்கிறார் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் செழியன் பாக்யாவிற்காக ஆர்வத்தோடு வீட்டில் காத்திருக்க, அப்பொழுது கோபி இது என்ன பெரிய சாதனையா? என்று பேச அதற்கு செழியன் என்னப்பா மினிஸ்டர் பாராட்டி இருக்காங்க, இது அம்மாவுக்கு எவ்வளவு பெரிய விஷயம் என ஆவலோடு இருக்க பாக்கியா, ராமமூர்த்தி என எல்லோரும் வீட்டிற்கு வருகின்றனர்.
அப்போது செழியன் ஓடிபோய் அம்மாவை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறுகிறார். பிறகு ராமமூர்த்தி அமைச்சர் போட்ட மாலையை காட்டி கோபியை வெறுப்பேத்தி, இந்த மாதிரி நீ மினிஸ்டர் கிட்ட பாராட்டு வாங்கி இருக்கியா என்று கிண்டல் செய்கிறார். அடுத்ததாக ஈஸ்வரி அங்கு வர இப்ப பேசுங்க பார்க்கலாம் என்று கோபி நக்கல் அடிக்க அதற்கு ஈஸ்வரி பாக்கியாவை பாராட்டி கட்டிபிடித்து கண் கலங்குகிறார்.

அமைச்சர் உன்னை பாராட்டும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது என்று ஈஸ்வரி சொல்ல அதைக்கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். பிறகு பாக்கியா கிச்சனில் தனியாக இருக்கும்போது கணேஷ் சொன்ன விஷயத்தை நினைத்து பார்த்து பழனிச்சாமிக்கு போன் செய்து இந்த விஷயத்தை எழிலிடம் சொல்லிடலாம்ன்னு முடிவுல்ல இருக்கேன் என்று சொல்ல, அதற்கு பழனிசாமி இது நல்ல விஷயம் கண்டிப்பா எழிலுக்கு தெரியணும்.
யார் மூலமாகவோ தெரிஞ்சா மனசு கஷ்டப்படுவாரு, நீங்களே சொல்லிடுங்க என்று சொல்ல சரி என்று எழிலிடம் பேச கூப்பிட்டு உட்காருகிறார். அப்போது தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தை வேறு ஒருவருக்கு நடப்பது போல பாக்கியா சொல்ல அதற்கு எழில் அந்த பொண்ணும் பையனும் ரொம்ப பாவம் என்று பரிதாபப்பட்டு பேச அடுத்ததாக பாக்கியா உண்மையை சொல்லும்போது அந்த நேரத்தில் அங்கு நிலாவும் அமிர்தாவும் வந்துவிட உண்மையை சொல்ல முடியாமல் போகிறது.
அதைத் தொடர்ந்து மறுநாள் காலையில் எல்லோரிடமும் பாக்யா விஷயத்தை சொல்லிவிடலாம் என்று முடிவு எடுக்க, அப்போது எழில் வெளியே சென்று இருப்பதாக செழியன் சொல்கிறார். பிறகு செழியன் மற்றவர்களிடம் உண்மையை சொல்லலாம் என்று பாக்கியா முயற்சி எடுக்கும்போது கோபி சீக்கிரமா சொல்லு எனக்கு நேரமாகுது என்று சொல்ல, சரி நீங்க போயிட்டு சாயங்காலம் வாங்க அப்போ சொல்றேன் என்று சொல்கிறார்.

அப்போது எழில் வீட்டிற்கு வேகமாக வந்து என்னோட ஃப்ரெண்டோட அப்பா ரெஸ்டாரண்ட் வாடகைக்கு விட போறதா சொல்லிட்டு இருந்தேன்ல அவர் இப்ப பாக்கணும்னு சொல்லி இருக்காரு வா நாம போயிட்டு பாத்துட்டு வந்துடலாம் என்று கூப்பிட, செழியன் அம்மா ஏதோ முக்கியமான விஷயம் சொல்ல வந்தாங்க என்று சொல்ல அதற்கு எழில் எதுவாயிருந்தாலும் அப்புறம் பார்த்துக்கலாம் என்று பாக்கியாவை கூட்டிக்கொண்டு போய்விடுகிறார்.

பிறகு எழில் பாக்கியா மற்றும் பழனிச்சாமி என மூவரும் ரெஸ்டாரன்ட் ஒனரை உடனே சந்திக்க அவர் 2 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் 60 ஆயிரம் வாடகை என்று சொல்ல பாக்கியா வாடகை தான் அதிகமாக இருக்கிறது என்று ஃபீல் பண்ண, எழில் வாடகை மட்டும் கொஞ்சம் குறைக்க முடியுமா என்று விசாரிக்க அதற்கு அவர் நான் ஏற்கனவே கம்மியாதான் சொல்லி இருக்கிறேன் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications