பாக்கியலட்சுமி: கமலா கொடுத்த ஐடியா! ராதிகாவின் விபரீத முடிவு! பாக்யா குடும்பத்துக்கு வரும் பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 21ஆம் தேதிக்கான எபிசோடில் இனியா மற்றும் ஈஸ்வரி தொடர்ந்து அவமானப்படுத்துவதால் ராதிகா வீட்டை விட்டு போக கிளம்புகிறார். அதே நேரத்தில் பாக்யாவின் மொத்த குடும்பத்தினரும் இனியாவால் சேர்ந்து இருக்கின்றார்கள். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி தன்னுடைய நண்பரிடம் பாக்யாவை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு தனக்காக ஹாஸ்பிடலில் பாக்கியா காத்திருந்ததால், அவள் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார். ஆனால் நான் தான் அவளை புரிந்து கொள்ளாமல் அவளுக்கு பிரச்சனை மேல பிரச்சனை கொடுத்தேன்.

இனி பாக்யாவுக்கு என்னால் எந்த பிரச்சனையும் வராது. உடல்நிலை சரியாகுற வரைக்கும் மட்டும்தான் இந்த வீட்டில் இருப்பேன் அதற்குப் பிறகு ராதிகா வீட்டுக்கு போய் விடுவேன் என்று சொல்ல, அதைக் கேட்டு கோபியின் நண்பர் செந்தில் சந்தோஷப்படுகிறார். மறுபக்கத்தில் ராதிகா என்னுடைய வாழ்க்கையில் இனி கோபி வேண்டாம். எனக்கு என்னுடைய பிள்ளை மயூ இருக்கா என்று டிரஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ணி வைத்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது ராதிகாவின் அம்மா கமலா அவசரப்பட வேண்டாம் நீ இந்த வீட்டை விட்டு போறேன்னு சொன்னதுமே மாப்பிள்ளை கஷ்டப்படுறாரு. நம்ம இப்போ இங்க இருந்து போயிட்டா அவர் ஒரேடியாக அந்த குடும்பத்துக்கே போயிருவாரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் ராதிகா தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து இனியா டான்ஸ் காம்படிஷனுக்கு போவதற்காக கிளம்பி கொண்டிருக்கிறார். அப்போது பாக்யா கோவிலுக்கு போய்விட்டு அர்ச்சனை செய்து வந்து இனியாவுக்கு திருநீறு வைத்து விடுகிறார். அதற்கு பிறகு எல்லாரும் இனியா டான்ஸ் காம்படிஷனுக்கு போகலாம் என்று சொல்ல, அதற்கு பாக்கியா நீங்க எல்லாரும் முன்னாடி போங்க எனக்கு சின்ன வேலை இருக்கு நான் முடிச்சுட்டு வரேன் என்று சொல்கிறார்.
சந்தோஷமாக மேடையில் அவார்ட் வாங்கிய ஜீவி பிரகாஷ்.. அப்போது சைந்தவி செய்த நெகிழ வைத்த செயல்!
அதற்கு கோபி நான் வரேன்னு தானே நீ வரல. நான் கேப் புக் பண்ணி வரேன். நீ இவங்களோட போ என்று சொல்ல, அதை பாக்கியா கண்டுகொள்ளாமல் கிளம்புகிறார். இதை தொடர்ந்து இனியா டான்ஸ் காம்படிஷனுக்கு ரெடி ஆகி மேடையில் நிற்கும் போது பதட்டமாக இருக்கிறார். இதனால் கோபி ஓடி சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி அவருக்கு மோட்டிவேஷன் கொடுக்கிறார்.

இதை பார்த்த ஈஸ்வரி கண் கலங்குகிறார். அதோடு இனியாவுக்கு கோபி மீது பாசம்... கோபிக்கு இனியா மீது பாசம்.. இந்த ராதிகா கோபியின் வாழ்க்கையில் வந்திருக்கவே கூடாது.. என்று ஈஸ்வரி சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு இனியா டான்ஸ் போட்டி நடக்கிறது. அதில் இனியா சிறப்பாக டான்ஸ் ஆடுகிறார். அப்போது கோபி, பாக்யா என எல்லோரும் சந்தோஷமாக அவரை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications